குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௯௫
Qur'an Surah At-Tawbah Verse 95
ஸூரத்துத் தவ்பா [௯]: ௯௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
سَيَحْلِفُوْنَ بِاللّٰهِ لَكُمْ اِذَا انْقَلَبْتُمْ اِلَيْهِمْ لِتُعْرِضُوْا عَنْهُمْ ۗ فَاَعْرِضُوْا عَنْهُمْ ۗ اِنَّهُمْ رِجْسٌۙ وَّمَأْوٰىهُمْ جَهَنَّمُ جَزَاۤءً ۢبِمَا كَانُوْا يَكْسِبُوْنَ (التوبة : ٩)
- sayaḥlifūna
- سَيَحْلِفُونَ
- They will swear
- சத்தியமிடுவார்கள்
- bil-lahi
- بِٱللَّهِ
- by Allah
- அல்லாஹ்வின் மீது
- lakum
- لَكُمْ
- to you
- உங்களிடம்
- idhā inqalabtum
- إِذَا ٱنقَلَبْتُمْ
- when you returned
- நீங்கள் திரும்பினால்
- ilayhim
- إِلَيْهِمْ
- to them
- அவர்களிடம்
- lituʿ'riḍū
- لِتُعْرِضُوا۟
- that you may turn away
- நீங்கள் புறக்கணித்து விடுவதற்காக
- ʿanhum
- عَنْهُمْۖ
- from them
- அவர்களை
- fa-aʿriḍū
- فَأَعْرِضُوا۟
- So turn away
- ஆகவே புறக்கணித்து விடுங்கள்
- ʿanhum
- عَنْهُمْۖ
- from them
- அவர்களை
- innahum
- إِنَّهُمْ
- indeed they
- நிச்சயமாக அவர்கள்
- rij'sun
- رِجْسٌۖ
- (are) impure
- அசுத்தமானவர்கள்
- wamawāhum
- وَمَأْوَىٰهُمْ
- and their abode
- இன்னும் தங்குமிடம்/அவர்களுடைய
- jahannamu
- جَهَنَّمُ
- (is) Hell
- நரகம்தான்
- jazāan
- جَزَآءًۢ
- a recompense
- கூலியாக
- bimā
- بِمَا
- for what
- எதற்கு
- kānū
- كَانُوا۟
- they used (to)
- இருந்தனர்
- yaksibūna
- يَكْسِبُونَ
- earn
- செய்கின்றனர்
Transliteration:
Sa yahlifoona billaahi lakum izanqalabtum ilaihim litu'ridoo 'anhum fa a'ridoo 'anhum innahum rijsunw wa maawaahum jahannamu jazaaa 'ambimaa kaanoo yaksiboon(QS. at-Tawbah:95)
English Sahih International:
They will swear by Allah to you when you return to them that you would leave them alone. So leave them alone; indeed they are evil; and their refuge is Hell as recompense for what they had been earning. (QS. At-Tawbah, Ayah ௯௫)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே! போரிலிருந்து வெற்றியுடன்) அவர்களிடம் நீங்கள் திரும்ப வந்தால், நீங்கள் அவர்களை(க் குற்றம் பிடிக்காது) புறக்கணித்து (விட்டு) விட, அவர்கள் அல்லாஹ்வின் மீது உங்களிடம் சத்தியம் செய்வார்கள். ஆகவே, நீங்களும் அவர்களை புறக்கணித்து (விட்டு) விடுங்கள். நிச்சயமாக அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்கள் செல்லுமிடம் நரகம்தான். (அதுவே) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலுக்குரிய தண்டனையாகும். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௯௫)
Jan Trust Foundation
(போரிலிருந்து வெற்றியுடன்) அவர்களிடம் நீங்கள் திரும்பி வருங்கால், நீங்கள் அவர்களைக்(குற்றம் பிடிக்காது) புறக்கணித்து விட்டுவிட வேண்டுமென்று அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள்; ஆகவே நீங்களும் அவர்களைப் புறக்கணித்துவிட்டு விடுங்கள் - அவர்கள் நிச்சயமாக அசுத்தமானவர்கள்; அவர்களுக்குப் புகலிடம் நரகமே; அதுவே அவர்களுக்கு தீவினைக்குரிய (சரியான) கூலியாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களிடம் நீங்கள் திரும்பினால், நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுவதற்காக உங்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியமி(ட்)டு (பொய் கூறு)வார்கள். ஆகவே, அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். நிச்சயமாக அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு கூலியாக அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான்.