Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௯௪

Qur'an Surah At-Tawbah Verse 94

ஸூரத்துத் தவ்பா [௯]: ௯௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَعْتَذِرُوْنَ اِلَيْكُمْ اِذَا رَجَعْتُمْ اِلَيْهِمْ ۗ قُلْ لَّا تَعْتَذِرُوْا لَنْ نُّؤْمِنَ لَكُمْ قَدْ نَبَّاَنَا اللّٰهُ مِنْ اَخْبَارِكُمْ وَسَيَرَى اللّٰهُ عَمَلَكُمْ وَرَسُوْلُهٗ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ (التوبة : ٩)

yaʿtadhirūna
يَعْتَذِرُونَ
They will make excuses
புகல் கூறுவார்கள்
ilaykum
إِلَيْكُمْ
to you
உங்களிடம்
idhā rajaʿtum
إِذَا رَجَعْتُمْ
when you (have) returned
நீங்கள் திரும்பினால்
ilayhim
إِلَيْهِمْۚ
to them
அவர்களிடம்
qul
قُل
Say
கூறுவீராக
lā taʿtadhirū
لَّا تَعْتَذِرُوا۟
"(Do) not make excuse
புகல் கூறாதீர்கள்
lan nu'mina
لَن نُّؤْمِنَ
never we will believe
நாங்கள் நம்பமாட்டோம்
lakum
لَكُمْ
you
உங்களை
qad
قَدْ
Verily
அறிவித்து விட்டான்
nabba-anā
نَبَّأَنَا
Allah (has) informed us
அறிவித்து விட்டான் எங்களுக்கு
l-lahu
ٱللَّهُ
Allah (has) informed us
அல்லாஹ்
min
مِنْ
of
இருந்து (சில)
akhbārikum
أَخْبَارِكُمْۚ
your news
உங்கள் செய்திகள்
wasayarā
وَسَيَرَى
and Allah will see
இன்னும் பார்ப்பான்
l-lahu
ٱللَّهُ
and Allah will see
அல்லாஹ்
ʿamalakum
عَمَلَكُمْ
your deeds
உங்கள் செயலை
warasūluhu
وَرَسُولُهُۥ
and His Messenger
இன்னும் அவனுடைய தூதர்
thumma
ثُمَّ
Then
பிறகு
turaddūna
تُرَدُّونَ
you will be brought back
திருப்பப்படுவீர்கள்
ilā ʿālimi
إِلَىٰ عَٰلِمِ
to (the) Knower
அறிந்தவனிடம்
l-ghaybi
ٱلْغَيْبِ
(of) the unseen
மறைவை
wal-shahādati
وَٱلشَّهَٰدَةِ
and the seen
இன்னும் வெளிப்படை
fayunabbi-ukum
فَيُنَبِّئُكُم
then He will inform you
அறிவிப்பான்/உங்களுக்கு
bimā kuntum taʿmalūna
بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
of what you used (to) do
எதை/இருந்தீர்கள்/செய்கிறீர்கள்

Transliteration:

ya'taziroona ilaikum izaa raja'tum ilaihim; qul laa ta'taziroo lan nu'mina lakum qad nabba annal laahu min akhbaarikum; wa sa yaral laahu 'amalakum wa Rasooluhoo suma turaddoona ilaa 'Aalimil Ghaibi washshahaadati fa yunabbi'ukum bimaa kuntum ta'maloon (QS. at-Tawbah:94)

English Sahih International:

They will make excuses to you when you have returned to them. Say, "Make no excuse – never will we believe you. Allah has already informed us of your news [i.e., affair]. And Allah will observe your deeds, and [so will] His Messenger; then you will be taken back to the Knower of the unseen and the witnessed, and He will inform you of what you used to do." (QS. At-Tawbah, Ayah ௯௪)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே! போர் செய்து) நீங்கள் (வெற்றியோடும், சுகத்தோடும்) அவர்களிடம் திரும்பிய சமயத்தில், உங்களிடம் அவர்கள் (வந்து போருக்கு வராததைப் பற்றி மன்னிப்பைத்தேடி) புகல் கூறுகின்றனர். (அதற்கு அவர்களைநோக்கி நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் புகல் (சாக்குப்போக்கு) கூறாதீர்கள். நாங்கள் உங்களை நம்பவே மாட்டோம். உங்கள் (வஞ்சக) விஷயங்களை நிச்சயமாக அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அதிசீக்கிரத்தில் உங்கள் செயலை அறிந்து கொள்வர். முடிவில், மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்தவனிடம் கொண்டு போகப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளை அதுசமயம் அவனே உங்களுக்கு அறிவிப்பான். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௯௪)

Jan Trust Foundation

(முஃமின்களே! போரிலிருந்து வெற்றியோடு) நீங்கள் அவர்களிடம் திரும்பிய போது, (போருக்கு வராமலிருந்தது பற்றி) உங்களிடம் வந்து புகல் கூறுகின்றனர்; “புகல் கூறாதீர்கள்; நிச்சயமாக நாங்கள் உங்களை நம்ப மாட்டோம்; நிச்சயமாக உங்களைப் பற்றிய செய்திகளை எங்களுக்கு அல்லாஹ் (முன்னமேயே) அறிவித்து விட்டான்; சீக்கிரமே அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் உங்கள் செயல்களைக் கவனிப்பார்கள்; மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் நன்கறியும் அவனிடத்தில் பின்னர் நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்; அப்போது அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான்” என்று (நபியே!) நீர் கூறும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அவர்களிடம் திரும்பினால் உங்களிடம் அவர்கள் புகல் கூறுவார்கள். (நபியே!) கூறுவீராக: “புகல் கூறாதீர்கள். நாங்கள் உங்க(ள் புகல்க)ளை நம்ப மாட்டோம். உங்கள் செய்திகளிலிருந்து (சிலவற்றை) அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான். அல்லாஹ் உங்கள் செயல்களைப் பார்ப்பான். இன்னும் அவனுடைய தூதரும் (உங்கள் செயலைப் பார்ப்பார்.) பிறகு மறைவையும் வெளிப்படையையும் அறிந்தவ(னாகிய அல்லாஹ்வி)னிடம் திருப்பப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை (அவன்) உங்களுக்கு அறிவிப்பான்.