Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௯௧

Qur'an Surah At-Tawbah Verse 91

ஸூரத்துத் தவ்பா [௯]: ௯௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَيْسَ عَلَى الضُّعَفَاۤءِ وَلَا عَلَى الْمَرْضٰى وَلَا عَلَى الَّذِيْنَ لَا يَجِدُوْنَ مَا يُنْفِقُوْنَ حَرَجٌ اِذَا نَصَحُوْا لِلّٰهِ وَرَسُوْلِهٖۗ مَا عَلَى الْمُحْسِنِيْنَ مِنْ سَبِيْلٍ ۗوَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌۙ (التوبة : ٩)

laysa
لَّيْسَ
Not
இல்லை
ʿalā
عَلَى
on
மீது
l-ḍuʿafāi
ٱلضُّعَفَآءِ
the weak
பலவீனர்கள்
walā
وَلَا
and not
இன்னும் இல்லை
ʿalā
عَلَى
on
மீது
l-marḍā
ٱلْمَرْضَىٰ
the sick
நோயாளிகள்
walā
وَلَا
and not
இன்னும் இல்லை
ʿalā
عَلَى
on
மீது
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
lā yajidūna
لَا يَجِدُونَ
not they find
பெறமாட்டார்கள்
mā yunfiqūna
مَا يُنفِقُونَ
what they (can) spend
எதை/செலவழிப்பார்கள்
ḥarajun
حَرَجٌ
any blame
ஒரு சிரமம், குற்றம்
idhā naṣaḥū
إِذَا نَصَحُوا۟
if they (are) sincere
நன்மையை நாடினால்
lillahi
لِلَّهِ
to Allah
அல்லாஹ்வுக்கு
warasūlihi
وَرَسُولِهِۦۚ
and His Messenger
இன்னும் அவனுடைய தூதருக்கு
mā ʿalā
مَا عَلَى
Not (is) on
இல்லை/மீது
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
the good-doers
நல்லறம் புரிவோர்
min sabīlin wal-lahu
مِن سَبِيلٍۚ وَٱللَّهُ
[of] any way (for blame) And Allah
வழி ஏதும்/அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
(is) Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful
பெரும் கருணையாளன்

Transliteration:

Laisa 'alad du'aaaa'i wa laa 'alal mardaa wa laa 'alal lazeena laa yajidoona maa yunfiqoona harajun izaa nasahoo lillaahi wa Rasoolih; maa 'alal muhsineena min sabeel; wallaahu Ghafoorur Raheem (QS. at-Tawbah:91)

English Sahih International:

There is not upon the weak or upon the ill or upon those who do not find anything to spend any discomfort [i.e., guilt] when they are sincere to Allah and His Messenger. There is not upon the doers of good any cause [for blame]. And Allah is Forgiving and Merciful. (QS. At-Tawbah, Ayah ௯௧)

Abdul Hameed Baqavi:

பலவீனர்களும், நோயாளிகளும், போருக்குச் செலவு செய்யும் பொருளை அடையாதவர்களும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கலப்பற்ற நம்பிக்கையாளர்களாக இருந்தால் (அதுவே போதுமானது. அவர்கள் போருக்குச் செல்லாவிட்டாலும் அதனைப் பற்றி அவர்கள் மீது யாதொரு குற்றமுமில்லை.) இத்தகைய நல்லவர்கள் மீது (குற்றம் கூற) யாதொரு வழியும் இல்லை. அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௯௧)

Jan Trust Foundation

பலஹீனர்களும், நோயாளிகளும், (அல்லாஹ்வின் வழியில்) செலவு செய்ய வசதியில்லாதவர்களும், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உண்மையுடன் இருப்பார்களானால், (இத்தகைய) நல்லோர்கள் மீது எந்த குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; கிருபையுள்ளவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பலவீனர்கள் மீதும், நோயாளிகள் மீதும், (போருக்கு) செலவழிப்பதை பெறாதவர்கள் மீதும் -அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நன்மையை நாடினால்- ஒரு குற்றமுமில்லை. நல்லறம் புரிவோர் மீது (குற்றம் கூற) வழி ஏதும் இல்லை. அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.