Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௯௦

Qur'an Surah At-Tawbah Verse 90

ஸூரத்துத் தவ்பா [௯]: ௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَاۤءَ الْمُعَذِّرُوْنَ مِنَ الْاَعْرَابِ لِيُؤْذَنَ لَهُمْ وَقَعَدَ الَّذِيْنَ كَذَبُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ۗسَيُصِيْبُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَلِيْمٌ (التوبة : ٩)

wajāa
وَجَآءَ
And came
இன்னும் வந்தார்(கள்)
l-muʿadhirūna
ٱلْمُعَذِّرُونَ
the ones who make excuses
புகல் கூறுபவர்கள்
mina l-aʿrābi
مِنَ ٱلْأَعْرَابِ
of the bedouins
கிராமவாசிகளில்
liyu'dhana
لِيُؤْذَنَ
that permission be granted
அனுமதி அளிக்கப்படுவதற்கு
lahum
لَهُمْ
to them
தங்களுக்கு
waqaʿada
وَقَعَدَ
and sat
இன்னும் உட்கார்ந்தார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
kadhabū
كَذَبُوا۟
lied
பொய்யுரைத்தனர்
l-laha
ٱللَّهَ
(to) Allah
அல்லாஹ்விடம்
warasūlahu
وَرَسُولَهُۥۚ
and His Messenger
இன்னும் அவனுடைய தூதர்
sayuṣību
سَيُصِيبُ
Will strike
அடையும்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieved
நிராகரித்தனர்
min'hum
مِنْهُمْ
among them
இவர்களில்
ʿadhābun
عَذَابٌ
a punishment
வேதனை
alīmun
أَلِيمٌ
painful
துன்புறுத்தும்

Transliteration:

Wa jaaa'al mu'az ziroona minal A'raabi liyu'zana lahum wa qa'adal lazeena kazabul laaha wa Rasoolah; sayuseebul lazeena kafaroo minhum 'azaabun aleem (QS. at-Tawbah:90)

English Sahih International:

And those with excuses among the bedouins came to be permitted [to remain], and they who had lied to Allah and His Messenger sat [at home]. There will strike those who disbelieved among them a painful punishment. (QS. At-Tawbah, Ayah ௯௦)

Abdul Hameed Baqavi:

கிராமத்து அரபிகளில் சிலர், (போருக்குச் செல்லாதிருக்க) அனுமதி கோரி (உங்களிடம்) வந்து புகல் கூறுகின்றனர். எனினும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் பொய்யாக்கியவர்களோ (அனுமதி கோராமலேயே வீட்டில்) உட்கார்ந்து கொண்டனர். ஆகவே, இவர்களிலுள்ள (இந்)நிராகரிப்பவர்களை அதிசீக்கிரத்தில் மிகத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௯௦)

Jan Trust Foundation

கிராம வாசிகளில் சிலர் உம்மிடம் புகல் சொல்லிக் கொண்டு, (போரில் கலந்து கொள்ளாமலிருக்கத்) தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென்று கேட்க வந்தனர்; இன்னும் அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் பொய்யுரைத்தவர்கள் (அனுமதி கேட்காமலே வீடுகளில்) உட்கார்ந்து கொண்டார்கள் - அவர்களில் நிராகரித்தவர்களை வெகு விரைவில் நோவினை செய்யும் வேதனை வந்தடையும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கிராமவாசிகளில் புகல் கூறுபவர்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதற்கு (புகல் கூறி) வந்தார்கள், அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் பொய்யுரைத்தவர்கள் (அனுமதி கோராமல்) உட்கார்ந்தார்கள். இவர்களில் நிராகரித்தவர்களை துன்புறுத்தும் வேதனை அடையும்.