Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௮௭

Qur'an Surah At-Tawbah Verse 87

ஸூரத்துத் தவ்பா [௯]: ௮௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

رَضُوْا بِاَنْ يَّكُوْنُوْا مَعَ الْخَوَالِفِ وَطُبِعَ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُوْنَ (التوبة : ٩)

raḍū
رَضُوا۟
They (were) satisfied
திருப்தியடைந்தனர்
bi-an yakūnū
بِأَن يَكُونُوا۟
to be
அவர்கள் ஆகிவிடுவதைக் கொண்டு
maʿa l-khawālifi
مَعَ ٱلْخَوَالِفِ
with those who stay behind
பின்தங்கிய பெண்களுடன்
waṭubiʿa
وَطُبِعَ
and were sealed
முத்திரையிடப்பட்டது
ʿalā
عَلَىٰ
[on]
மீது
qulūbihim
قُلُوبِهِمْ
their hearts
அவர்களுடைய உள்ளங்கள்
fahum lā yafqahūna
فَهُمْ لَا يَفْقَهُونَ
so they (do) not understand
ஆகவே அவர்கள்/சிந்தித்து விளங்கமாட்டார்கள்

Transliteration:

Radoo bi ai yakoonoo ma'al khawaalifi wa tubi'a 'alaa quloobihim fahum laa yafqahoon (QS. at-Tawbah:87)

English Sahih International:

They were satisfied to be with those who stay behind, and their hearts were sealed over, so they do not understand. (QS. At-Tawbah, Ayah ௮௭)

Abdul Hameed Baqavi:

(சிறியோர், முதியோர், பெண்கள் போன்ற போருக்கு வரமுடியாமல் வீட்டில்) தங்கிவிடுபவர்களுடன் தாங்களும் இருந்து விடவே விரும்புகின்றனர். அவர்களுடைய உள்ளங்கள் முத்திரையிடப்பட்டுவிட்டன. (ஆதலால் இதிலுள்ள இழிவை) அவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௮௭)

Jan Trust Foundation

(போரில் கலந்துகொள்ள முடியாப் பெண்கள், முதியவர்களைப்போல்) பின் தங்கியவர்களுடன் இருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்; அவர்களுடைய இருதயங்கள்மீது முத்திரையிடப்பட்டு விட்டது. ஆகவே (இதன் இழிவை) அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பின் தங்கிய பெண்களுடன் அவர்கள் ஆகிவிடுவதைக் கொண்டு திருப்தியடைந்தனர். அவர்களுடைய உள்ளங்கள் மீது முத்திரையிடப்பட்டது. அவர்கள் சிந்தித்து விளங்க மாட்டார்கள்.