Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௮௬

Qur'an Surah At-Tawbah Verse 86

ஸூரத்துத் தவ்பா [௯]: ௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَآ اُنْزِلَتْ سُوْرَةٌ اَنْ اٰمِنُوْا بِاللّٰهِ وَجَاهِدُوْا مَعَ رَسُوْلِهِ اسْتَأْذَنَكَ اُولُوا الطَّوْلِ مِنْهُمْ وَقَالُوْا ذَرْنَا نَكُنْ مَّعَ الْقٰعِدِيْنَ (التوبة : ٩)

wa-idhā unzilat
وَإِذَآ أُنزِلَتْ
And when was revealed
இறக்கப்பட்டால்
sūratun
سُورَةٌ
a Surah
ஓர் அத்தியாயம்
an āminū
أَنْ ءَامِنُوا۟
that; believe
என்று/நம்பிக்கை கொள்ளுங்கள்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
wajāhidū
وَجَٰهِدُوا۟
and strive
இன்னும் போரிடுங்கள்
maʿa
مَعَ
with
உடன்
rasūlihi
رَسُولِهِ
His Messenger
அவனுடயை தூதர்
is'tadhanaka
ٱسْتَـْٔذَنَكَ
ask your permission
அனுமதி கோரினார்(கள்) /உம்மிடம்
ulū l-ṭawli
أُو۟لُوا۟ ٱلطَّوْلِ
(the) men (of) wealth
செல்வந்தர்கள்
min'hum
مِنْهُمْ
among them
அவர்களில்
waqālū
وَقَالُوا۟
and said
இன்னும் கூறுகின்றனர்
dharnā
ذَرْنَا
"Leave us
விட்டுவிடுவீராக/எங்களை
nakun
نَكُن
(to) be
இருக்கிறோம்
maʿa
مَّعَ
with
உடன்
l-qāʿidīna
ٱلْقَٰعِدِينَ
those who sit"
உட்கார்ந்தவர்கள்

Transliteration:

Wa izaaa unzilat Sooratun an aaminoo billaahi wa jaahidoo ma'a Rasoolihis taazanaka uluttawli minhum wa qaaloo zarnaa nakum ma'alqaa 'ideen (QS. at-Tawbah:86)

English Sahih International:

And when a Surah was revealed [enjoining them] to believe in Allah and to fight with His Messenger, those of wealth among them asked your permission [to stay back] and said, "Leave us to be with them who sit [at home]." (QS. At-Tawbah, Ayah ௮௬)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனுடைய தூதருடன் சேர்ந்து போர் புரியுமாறு யாதொரு அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களிலுள்ள பணக்காரர்கள் (போர் புரிய வராதிருக்க) உங்களிடம் அனுமதிகோரி "எங்களை விட்டுவிடுங்கள்; (வீட்டில்) தங்கி இருப்பவர்களுடன் நாங்களும் தங்கிவிடுகின்றோம்" என்று கூறுகின்றனர். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௮௬)

Jan Trust Foundation

மேலும், அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, அவனுடைய தூதருடன் சேர்ந்து போர் புரியுங்கள்” என்று ஏதாவது ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களில் வசதிபடைத்த செல்வந்தர்கள்| “எங்களை விட்டு விடுங்கள்; நாங்கள் (போருக்கு வராமல்) தங்கியிருப்போருடன் இருந்து கொள்கின்றோம்” என்று உம்மிடம் அனுமதி கோருகின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளுங்கள்; அவனுடைய தூதருடன் சேர்ந்து போரிடுங்கள் என்று ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால் அவர்களிலுள்ள செல்வந்தர்கள் உம்மிடம் அனுமதிகோரி, “எங்களை விட்டுவிடுவீராக!; (போருக்கு வராமல் வீட்டில்) உட்கார்ந்தவர்களுடன் (நாங்களும்) இருக்கிறோம்” என்று கூறுகின்றனர்.