குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௮௪
Qur'an Surah At-Tawbah Verse 84
ஸூரத்துத் தவ்பா [௯]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا تُصَلِّ عَلٰٓى اَحَدٍ مِّنْهُمْ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمْ عَلٰى قَبْرِهٖۗ اِنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَمَاتُوْا وَهُمْ فٰسِقُوْنَ (التوبة : ٩)
- walā tuṣalli
- وَلَا تُصَلِّ
- And not you pray
- தொழாதீர்
- ʿalā
- عَلَىٰٓ
- for
- மீது
- aḥadin
- أَحَدٍ
- any
- ஒருவர்
- min'hum
- مِّنْهُم
- of them
- அவர்களில்
- māta
- مَّاتَ
- who dies
- இறந்தார்
- abadan
- أَبَدًا
- ever
- ஒருபோதும்
- walā taqum
- وَلَا تَقُمْ
- and not you stand
- நிற்காதீர்
- ʿalā
- عَلَىٰ
- by
- அருகில்
- qabrihi innahum
- قَبْرِهِۦٓۖ إِنَّهُمْ
- his grave Indeed they
- அவருடைய புதைகுழிக்கு/நிச்சயமாக அவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- disbelieved
- நிராகரித்தனர்
- bil-lahi
- بِٱللَّهِ
- in Allah
- அல்லாஹ்வை
- warasūlihi
- وَرَسُولِهِۦ
- and His Messenger
- இன்னும் அவனுடைய தூதரை
- wamātū
- وَمَاتُوا۟
- and died
- இன்னும் இறந்தனர்
- wahum fāsiqūna
- وَهُمْ فَٰسِقُونَ
- while they were defiantly disobedient
- அவர்களோ/பாவிகள்
Transliteration:
Wa laa tusalli 'alaaa ahadim minhum maata abadanw wa laa taqum 'alaa qabriheee innahum kafaroo billaahi wa Rasoolihee wa maatoo wa hum faasiqoon(QS. at-Tawbah:84)
English Sahih International:
And do not pray [the funeral prayer, O Muhammad], over any of them who has died – ever – or stand at his grave. Indeed, they disbelieved in Allah and His Messenger and died while they were defiantly disobedient. (QS. At-Tawbah, Ayah ௮௪)
Abdul Hameed Baqavi:
அன்றி, அவர்களில் எவர் இறந்துவிட்டாலும் அவர்கள் மீது ஒருபோதும் (ஜனாஸா) தொழுகையும் தொழாதீர்கள். அவர்களுடைய கப்ரில் (அவர்களுக்காக மன்னிப்புக்கோரி) நிற்காதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்துவிட்டதுடன் பாவிகளாகவே இறந்தும் இருக்கின்றனர். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௮௪)
Jan Trust Foundation
அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) அவர்களில் இறந்த ஒருவர் மீது ஒருபோதும் (ஜனாஸா தொழுகை) தொழாதீர். அவருடைய புதைகுழிக்கு அருகில் நிற்காதீர். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தனர். இன்னும் அவர்களோ பாவிகளாக இறந்தனர்.