Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௭௯

Qur'an Surah At-Tawbah Verse 79

ஸூரத்துத் தவ்பா [௯]: ௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَّذِيْنَ يَلْمِزُوْنَ الْمُطَّوِّعِيْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ فِى الصَّدَقٰتِ وَالَّذِيْنَ لَا يَجِدُوْنَ اِلَّا جُهْدَهُمْ فَيَسْخَرُوْنَ مِنْهُمْ ۗسَخِرَ اللّٰهُ مِنْهُمْ ۖ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ (التوبة : ٩)

alladhīna yalmizūna
ٱلَّذِينَ يَلْمِزُونَ
Those who criticize
எவர்கள்/ குறை கூறுகின்றனர், குத்திப் பேசுகின்றனர்
l-muṭawiʿīna
ٱلْمُطَّوِّعِينَ
the ones who give willingly
உபரியாக செய்பவர்களை
mina l-mu'minīna
مِنَ ٱلْمُؤْمِنِينَ
of the believers
நம்பிக்கையாளர்களில்
fī l-ṣadaqāti
فِى ٱلصَّدَقَٰتِ
concerning the charities
தர்மங்களில்
wa-alladhīna
وَٱلَّذِينَ
and those who
இன்னும் எவர்கள்
lā yajidūna
لَا يَجِدُونَ
not find
பெறமாட்டார்கள்
illā
إِلَّا
except
தவிர
juh'dahum
جُهْدَهُمْ
their effort
தங்கள் உழைப்பை
fayaskharūna
فَيَسْخَرُونَ
so they ridicule
கேலிசெய்கின்றனர்
min'hum
مِنْهُمْۙ
them
அவர்களை
sakhira
سَخِرَ
Allah will ridicule
கேலி செய்கிறான்
l-lahu
ٱللَّهُ
Allah will ridicule
அல்லாஹ்
min'hum
مِنْهُمْ
them
அவர்களை
walahum
وَلَهُمْ
and for them
அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
வேதனை
alīmun
أَلِيمٌ
painful
துன்புறுத்தக் கூடியது

Transliteration:

Allazeena yalmizoonal mut tawwi'eena minalmu'mineena fis sadaqaati wallazeena laa yajidoona illaa juhdahum fayaskharoona minhum sakhiral laahu minhum wa lahum azaabun aleem (QS. at-Tawbah:79)

English Sahih International:

Those who criticize the contributors among the believers concerning [their] charities and [criticize] the ones who find nothing [to spend] except their effort, so they ridicule them – Allah will ridicule them, and they will have a painful punishment. (QS. At-Tawbah, Ayah ௭௯)

Abdul Hameed Baqavi:

இவர்கள் எத்தகையவர்களென்றால், நம்பிக்கையாளர்களில் உள்ள செல்வந்தர்கள் (தங்கள் பொருள்களை) நல்வழியில் (தாராளமாக) தானம் செய்வது பற்றி குற்றம் கூறுகின்றனர். (அதிலும் குறிப்பாக) கூலிவேலை செய்து சம்பாதிப்போர் (தங்கள் பொருளை இவ்வாறு தானம் செய்வது) பற்றியும் அவர்கள் பரிகசிக்கின்றனர். அல்லாஹ் (நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கும்) அவர்களைப் பரிகசிக்கின்றான். அன்றி (மறுமையில்) துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்கு உண்டு. (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௭௯)

Jan Trust Foundation

இ(ம் முனாஃபிக்கான)வர்கள் முஃமின்களில் தாராளமாக தர்மம் செய்பவர்களையும் (வேறு பொருள் எதுவுமில்லாததால்) தங்கள் உழைப்பை தானமாகக் கொடுப்பவர்களையும் குறை கூறி, ஏளனமும் செய்கிறார்கள். இவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கிறான். இவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களில் இருந்து தர்மங்களில் உபரியாக (தர்மம்) செய்பவர்களையும் (தர்மம் புரிய) தங்கள் உழைப்பைத் தவிர (செல்வம் எதையும்) பெறாதவர்களையும் இவர்கள் குறை கூறுகின்றனர் (குத்திப் பேசுகின்றனர்). இன்னும் அல்லாஹ் அவர்களை கேலிசெய்கிறான். துன்புறுத்தக்கூடிய வேதனையும் அவர்களுக்கு உண்டு.