குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௭௧
Qur'an Surah At-Tawbah Verse 71
ஸூரத்துத் தவ்பா [௯]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بَعْضُهُمْ اَوْلِيَاۤءُ بَعْضٍۘ يَأْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَيُطِيْعُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ۗاُولٰۤىِٕكَ سَيَرْحَمُهُمُ اللّٰهُ ۗاِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ (التوبة : ٩)
- wal-mu'minūna
- وَٱلْمُؤْمِنُونَ
- And the believing men
- நம்பிக்கை கொண்ட ஆண்கள்
- wal-mu'minātu
- وَٱلْمُؤْمِنَٰتُ
- and the believing women
- இன்னும் நம்பிக்கை கொண்ட பெண்கள்
- baʿḍuhum
- بَعْضُهُمْ
- some of them
- அவர்களில் சிலர்
- awliyāu
- أَوْلِيَآءُ
- (are) allies
- பொறுப்பாளர்கள்
- baʿḍin
- بَعْضٍۚ
- (of) others
- சிலருக்கு
- yamurūna
- يَأْمُرُونَ
- They enjoin
- ஏவுகின்றனர்
- bil-maʿrūfi
- بِٱلْمَعْرُوفِ
- the right
- நன்மையை
- wayanhawna
- وَيَنْهَوْنَ
- and forbid
- இன்னும் தடுக்கின்றனர்
- ʿani l-munkari
- عَنِ ٱلْمُنكَرِ
- from the wrong
- தீமையைவிட்டு
- wayuqīmūna
- وَيُقِيمُونَ
- and they establish
- இன்னும் நிலை நிறுத்துகின்றனர்
- l-ṣalata
- ٱلصَّلَوٰةَ
- the prayer
- தொழுகையை
- wayu'tūna
- وَيُؤْتُونَ
- and give
- இன்னும் கொடுக்கின்றனர்
- l-zakata
- ٱلزَّكَوٰةَ
- the zakah
- ஸகாத்தை
- wayuṭīʿūna
- وَيُطِيعُونَ
- and they obey
- இன்னும் கீழ்ப்படிகின்றனர்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வுக்கு
- warasūlahu
- وَرَسُولَهُۥٓۚ
- and His Messenger
- இன்னும் அவனுடைய தூதருக்கு
- ulāika sayarḥamuhumu
- أُو۟لَٰٓئِكَ سَيَرْحَمُهُمُ
- Those Allah will have mercy on them
- அவர்கள்/இவர்களுக்கு கருணை புரிவான்
- l-lahu
- ٱللَّهُۗ
- Allah will have mercy on them
- அல்லாஹ்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- ʿazīzun
- عَزِيزٌ
- (is) All-Mighty
- மிகைத்தவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- All-Wise
- ஞானவான்
Transliteration:
Walmu'minoona wal mu'minaatu ba'duhum awliyaaa'u ba;d; yaamuroona bilma'roofi wa yanhawna 'anil munkari wa yuqeemoonas Salaata wa yu'toonaz Zakaata wa yutee'oonal laaha wa Rasoolah; ulaaa'ika sayarhamuhumul laah; innallaaha 'Azeezun Hakeem(QS. at-Tawbah:71)
English Sahih International:
The believing men and believing women are allies of one another. They enjoin what is right and forbid what is wrong and establish prayer and give Zakah and obey Allah and His Messenger. Those – Allah will have mercy upon them. Indeed, Allah is Exalted in Might and Wise. (QS. At-Tawbah, Ayah ௭௧)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும் (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள், (ஒருவர் மற்றவரை) நன்மை செய்யும்படித் தூண்டியும், பாவம் செய்யாது தடுத்தும், தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்து கொடுத்தும் வருவார்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடப்பார்கள். இத்தகையவர்களுக்கு அதிசீக்கிரத்தில் அல்லாஹ் அருள்புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௭௧)
Jan Trust Foundation
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கை கொண்ட ஆண்கள், நம்பிக்கை கொண்ட பெண்கள் அவர்களில் சிலர் சிலருக்கு பொறுப்பாளர்கள். அவர்கள், நன்மையை ஏவுகின்றனர்; தீமையைவிட்டு தடுக்கின்றனர்; தொழுகையை நிலைநிறுத்துகின்றனர்; ஸகாத்தை கொடுக்கின்றனர்; அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகின்றனர். இவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான்.