Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௭௦

Qur'an Surah At-Tawbah Verse 70

ஸூரத்துத் தவ்பா [௯]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَمْ يَأْتِهِمْ نَبَاُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ەۙ وَقَوْمِ اِبْرٰهِيْمَ وَاَصْحٰبِ مَدْيَنَ وَالْمُؤْتَفِكٰتِۗ اَتَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِۚ فَمَا كَانَ اللّٰهُ لِيَظْلِمَهُمْ وَلٰكِنْ كَانُوْٓا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ (التوبة : ٩)

alam yatihim
أَلَمْ يَأْتِهِمْ
Has not come to them
வரவில்லையா/அவர்களுக்கு
naba-u
نَبَأُ
(the) news
செய்தி, சரித்திரம்
alladhīna
ٱلَّذِينَ
(of) those who
எவர்கள்
min qablihim
مِن قَبْلِهِمْ
(were) before them (were) before them
இவர்களுக்கு முன்னர்
qawmi
قَوْمِ
(the) people
சமுதாயம்
nūḥin
نُوحٍ
(of) Nuh
நூஹூடைய
waʿādin
وَعَادٍ
and Aad
இன்னும் ஆது
wathamūda
وَثَمُودَ
and Thamud
இன்னும் ஸமூது
waqawmi
وَقَوْمِ
and (the) people
இன்னும் சமுதாயம்
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
(of) Ibrahim
இப்றாஹீம்
wa-aṣḥābi madyana
وَأَصْحَٰبِ مَدْيَنَ
and (the) companions (of) Madyan
இன்னும் மத்யன் வாசிகள்
wal-mu'tafikāti
وَٱلْمُؤْتَفِكَٰتِۚ
and the towns overturned?
தலைகீழாக புரட்டப்பட்ட ஊர்கள்
atathum
أَتَتْهُمْ
Came to them
அவர்கள் வந்தார்கள்
rusuluhum
رُسُلُهُم
their Messengers
அவர்களுடைய தூதர்கள்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِۖ
with clear proofs
அத்தாட்சிகளைக் கொண்டு
famā kāna
فَمَا كَانَ
And not was
இருக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
liyaẓlimahum
لِيَظْلِمَهُمْ
to wrong them
அவர்களுக்கு அநீதியிழைப்பவனாக
walākin kānū
وَلَٰكِن كَانُوٓا۟
but they were to
எனினும்/இருந்தனர்
anfusahum
أَنفُسَهُمْ
themselves
தங்களுக்கே
yaẓlimūna
يَظْلِمُونَ
doing wrong
அநீதியிழைப்பவர்களாக

Transliteration:

Alam yaatihim naba ul lazeena min qablihim qawmi Noohinw wa 'Aadinw wa Samooda wa qawmi Ibraaheema wa ashaabi adyana walmu'tafikaat; atathum Rusuluhum bilbaiyinaati famaa kaanal laahu liyazlimahum wa laakin kaanooo anfusahum yazlimoon (QS. at-Tawbah:70)

English Sahih International:

Has there not reached them the news of those before them – the people of Noah and [the tribes of] Aad and Thamud and the people of Abraham and the companions [i.e., dwellers] of Madyan and the towns overturned? Their messengers came to them with clear proofs. And Allah would never have wronged them, but they were wronging themselves. (QS. At-Tawbah, Ayah ௭௦)

Abdul Hameed Baqavi:

இவர்களுக்கு முன்னிருந்த நூஹ் (நபி) உடைய மக்களின் சரித்திரமும், ஆத், ஸமூத் (என்பவர்களின்) சரித்திரமும், இப்ராஹீம் (நபி) உடைய மக்களின் சரித்திரமும், மத்யன் (என்னும்) ஊராரின் சரித்திரமும், தலைகீழாகப் புரண்டுபோன ஊர்களின் சரித்திரங்களும் அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? (நம்மால் அனுப்பப்பட்ட) அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைத்தான் அவர்களிடம் கொண்டு வந்தார்கள். (அவ்வாறிருந்தும் அந்த தூதர்களை அவர்கள் நிராகரித்ததன் காரணமாக அவர்கள் அனைவரும் அழிந்துவிட்டனர். இதில்) அல்லாஹ் அவர்களுக்கு (யாதொரு) தீங்கும் இழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்(டு அழிந்து விட்)டனர். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௭௦)

Jan Trust Foundation

இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்ராஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள் தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா? அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுக்குரிய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்.) அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை; எனினும் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்களுக்கு முன்னருள்ள நூஹ் (நபி) உடைய சமுதாயம், ஆது, ஸமூது, இப்றாஹீம் (நபி) உடைய சமுதாயம், மத்யன் வாசிகள், தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊர்கள் ஆகியோரின் சரித்திரம் அவர்களுக்கு வரவில்லையா? அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அநீதியிழைப்பவனாக இருக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்கே அநீதியிழைப்பவர்களாக இருந்தனர்.