குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௬௯
Qur'an Surah At-Tawbah Verse 69
ஸூரத்துத் தவ்பா [௯]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَالَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ كَانُوْٓا اَشَدَّ مِنْكُمْ قُوَّةً وَّاَكْثَرَ اَمْوَالًا وَّاَوْلَادًاۗ فَاسْتَمْتَعُوْا بِخَلَاقِهِمْ فَاسْتَمْتَعْتُمْ بِخَلَاقِكُمْ كَمَا اسْتَمْتَعَ الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ بِخَلَاقِهِمْ وَخُضْتُمْ كَالَّذِيْ خَاضُوْاۗ اُولٰۤىِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ ۚوَاُولٰۤىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ (التوبة : ٩)
- ka-alladhīna
- كَٱلَّذِينَ
- Like those
- எவர்களைப்போன்றே
- min qablikum
- مِن قَبْلِكُمْ
- before you before you
- உங்களுக்கு முன்னர்
- kānū
- كَانُوٓا۟
- they were
- இருந்தனர்
- ashadda
- أَشَدَّ
- mightier
- கடுமையானவர்களாக
- minkum
- مِنكُمْ
- than you
- உங்களை விட
- quwwatan
- قُوَّةً
- (in) strength
- பலத்தால்
- wa-akthara
- وَأَكْثَرَ
- and more abundant
- இன்னும் அதிகமானவர்களாக
- amwālan
- أَمْوَٰلًا
- (in) wealth
- செல்வங்களால்
- wa-awlādan
- وَأَوْلَٰدًا
- and children
- இன்னும் சந்ததிகளால்
- fa-is'tamtaʿū
- فَٱسْتَمْتَعُوا۟
- So they enjoyed
- சுகமடைந்தார்கள்
- bikhalāqihim
- بِخَلَٰقِهِمْ
- their portion
- தங்கள் பங்கைக் கொண்டு
- fa-is'tamtaʿtum
- فَٱسْتَمْتَعْتُم
- and you have enjoyed
- நீங்கள் சுகமடைந்தீர்கள்
- bikhalāqikum
- بِخَلَٰقِكُمْ
- your portion
- உங்கள் பங்கைக் கொண்டு
- kamā
- كَمَا
- like
- போன்று
- is'tamtaʿa
- ٱسْتَمْتَعَ
- enjoyed
- சுகமடைந்தார்(கள்)
- alladhīna
- ٱلَّذِينَ
- those
- எவர்கள்
- min qablikum
- مِن قَبْلِكُم
- before you before you
- உங்களுக்கு முன்னர்
- bikhalāqihim
- بِخَلَٰقِهِمْ
- their portion
- தங்கள் பங்கைக் கொண்டு
- wakhuḍ'tum
- وَخُضْتُمْ
- and you indulge (in idle talk)
- மூழ்கினீர்கள்
- ka-alladhī
- كَٱلَّذِى
- like the one who
- எது போன்று
- khāḍū ulāika
- خَاضُوٓا۟ۚ أُو۟لَٰٓئِكَ
- indulges (in idle talk) Those
- மூழ்கினர்/அவர்கள்
- ḥabiṭat
- حَبِطَتْ
- worthless
- அழிந்தன
- aʿmāluhum
- أَعْمَٰلُهُمْ
- (are) their deeds
- அவர்களுடைய செயல்கள்
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- in the world
- இம்மையில்
- wal-ākhirati
- وَٱلْءَاخِرَةِۖ
- and (in) the Hereafter
- இன்னும் மறுமையில்
- wa-ulāika humu
- وَأُو۟لَٰٓئِكَ هُمُ
- And those they
- அவர்கள்தான்
- l-khāsirūna
- ٱلْخَٰسِرُونَ
- (are) the losers
- நஷ்டவாளிகள்
Transliteration:
Kallazeena min qablikum kaanoo ashadda minkum quwwatanw wa aksara amwaalanw wa awlaadan fastamta'oo bikhalaaqihim fastamta'tum bikhalaaqikum kamas tamta'al lazeena min qablikum bikhalaa qihim wa khudtum kallazee khaadooo; ulaaa'ika habitat a'maaluhum fid dunyaa wal Aakhirati wa ulaaa'ika humul khaasiroon(QS. at-Tawbah:69)
English Sahih International:
[You disbelievers are] like those before you; they were stronger than you in power and more abundant in wealth and children. They enjoyed their portion [of worldly enjoyment], and you have enjoyed your portion as those before you enjoyed their portion, and you have engaged [in vanities] like that in which they engaged. [It is] those whose deeds have become worthless in this world and in the Hereafter, and it is they who are the losers. (QS. At-Tawbah, Ayah ௬௯)
Abdul Hameed Baqavi:
(நயவஞ்சகர்களே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்ளிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கின்றது. அவர்கள் உங்களைவிட பலசாலிகளாகவும், (உங்களை விட) அதிக பொருளுடையவர்களாகவும், அதிக சந்ததியுடையவர்களாகவும் இருந்து (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த இப்பாக்கியங்களைக் கொண்டு சுகமடைந்தார்கள். உங்களுக்கு முன்னிருந்த இவர்கள் தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு (இவ்வுலகில்) சுகமடைந்தவாறே, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு சுகமடைந்து விட்டீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக் கிடந்தவாறே நீங்களும் மூழ்கிவிட்டீர்கள். இம்மையிலும் மறுமையிலும் அவர்களுடைய (நற்)செயல்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. (அதனால்) அவர்கள் பெரும் நஷ்டமடைந்து விட்டார்கள். (அவ்வாறே நீங்களும் நஷ்டமடைவீர்கள்.) (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௬௯)
Jan Trust Foundation
(முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது; அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன - அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நயவஞ்சகர்களே! நீங்கள்) உங்களுக்கு முன்னுள்ளவர்களைப் போன்றே. அவர்கள் உங்களைவிட பலத்தால் கடுமையானவர்களாக; செல்வங்களாலும் சந்ததிகளாலும் அதிகமானவர்களாக இருந்தனர். (அவர்கள் இவ்வுலகில்) தங்கள் பங்கைக் கொண்டு சுகமடைந்தார்கள். உங்களுக்கு முன்னுள்ளவர்கள் தங்கள் பங்கைக் கொண்டு (இவ்வுலகில்) சுகமடைந்தது போன்று, (நீங்களும்) உங்கள் பங்கைக் கொண்டு சுகமடைந்தீர்கள். அவர்கள் (பரிகசிப்பதில்) மூழ்கியது போன்றே (நீங்களும்) மூழ்கினீர்கள். அவர்கள், இம்மையிலும் மறுமையிலும் அவர்களுடைய (நற்)செயல்கள் அழிந்தன. அவர்கள்தான் நஷ்டவாளிகள். (அவ்வாறே நீங்களும் நஷ்டவாளிகள்.)