Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௬௭

Qur'an Surah At-Tawbah Verse 67

ஸூரத்துத் தவ்பா [௯]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ بَعْضُهُمْ مِّنْۢ بَعْضٍۘ يَأْمُرُوْنَ بِالْمُنْكَرِ وَيَنْهَوْنَ عَنِ الْمَعْرُوْفِ وَيَقْبِضُوْنَ اَيْدِيَهُمْۗ نَسُوا اللّٰهَ فَنَسِيَهُمْ ۗ اِنَّ الْمُنٰفِقِيْنَ هُمُ الْفٰسِقُوْنَ (التوبة : ٩)

al-munāfiqūna
ٱلْمُنَٰفِقُونَ
The hypocrite men
நயவஞ்சக ஆண்கள்
wal-munāfiqātu
وَٱلْمُنَٰفِقَٰتُ
and the hypocrite women
இன்னும் நயவஞ்சக பெண்கள்
baʿḍuhum
بَعْضُهُم
some of them
அவர்களில் சிலர்
min baʿḍin
مِّنۢ بَعْضٍۚ
(are) of others
சிலரைச் சேர்ந்தவர்கள்
yamurūna
يَأْمُرُونَ
They enjoin
ஏவுகின்றனர்
bil-munkari
بِٱلْمُنكَرِ
the wrong
தீமையை
wayanhawna
وَيَنْهَوْنَ
and forbid
இன்னும் தடுக்கின்றனர்
ʿani l-maʿrūfi
عَنِ ٱلْمَعْرُوفِ
what (is) the right
நன்மையை விட்டு
wayaqbiḍūna
وَيَقْبِضُونَ
and they close
இன்னும் மூடிக் கொள்கின்றனர்
aydiyahum
أَيْدِيَهُمْۚ
their hands
தங்கள் கரங்களை
nasū
نَسُوا۟
They forget
மறந்தார்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
fanasiyahum
فَنَسِيَهُمْۗ
so He has forgotten them
ஆகவே மறந்தான்/அவர்களை
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-munāfiqīna humu
ٱلْمُنَٰفِقِينَ هُمُ
the hypocrites they (are)
நயவஞ்சகர்கள்தான்
l-fāsiqūna
ٱلْفَٰسِقُونَ
the defiantly disobedient
பாவிகள்

Transliteration:

Almunaafiqoona wal munaafiqaatu ba'duhum mim ba'd; yaamuroona bilmunkari wa yanhawna 'anil ma'roofi wa yaqbidoona aidiyahum; nasul laaha fanasiyahum; innal munaafiqeena humul faasiqoon (QS. at-Tawbah:67)

English Sahih International:

The hypocrite men and hypocrite women are of one another. They enjoin what is wrong and forbid what is right and close their hands. They have forgotten Allah, so He has forgotten them [accordingly]. Indeed, the hypocrites – it is they who are the defiantly disobedient. (QS. At-Tawbah, Ayah ௬௭)

Abdul Hameed Baqavi:

ஆணாயினும் பெண்ணாயினும் நயவஞ்சகர்கள் அனைவரும் ஒரே இனத்தவரே! அவர்கள் (அனைவருமே) பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டுவார்கள்; நன்மையான காரியங்களைத் தடை செய்வார்கள். (செலவு செய்ய அவசியமான சமயங்களில்) தங்கள் கைகளை மூடிக் கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆதலால், அல்லாஹ்வும் அவர்களை மறந்து விட்டான். நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள்தான் (சதி செய்யும்) கொடிய பாவிகள். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௬௭)

Jan Trust Foundation

நயவஞ்சகர்களான ஆடவரும், நயவஞ்சகர்களான பெண்டிரும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பாவங்களை தூண்டி, நன்மைகளை விட்டும் தடுப்பார்கள். (அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள்; அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆகவே அவன் அவர்களை மறந்து விட்டான் - நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே ஆவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நயவஞ்சக ஆண்களும், நயவஞ்ச பெண்களும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்களே! அவர்கள் தீமையை ஏவுகின்றனர்; நன்மையை விட்டு தடுக்கின்றனர். தங்கள் கரங்களை மூடிக் கொள்கின்றனர் (கருமித்தனம் செய்கின்றனர்). அவர்கள் அல்லாஹ்வை மறந்தார்கள்; ஆகவே, (அல்லாஹ்வும்) அவர்களை மறந்தான். நிச்சயமாக நயவஞ்சகர்கள்தான் பாவிகள்.