குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௬௪
Qur'an Surah At-Tawbah Verse 64
ஸூரத்துத் தவ்பா [௯]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَحْذَرُ الْمُنٰفِقُوْنَ اَنْ تُنَزَّلَ عَلَيْهِمْ سُوْرَةٌ تُنَبِّئُهُمْ بِمَا فِيْ قُلُوْبِهِمْۗ قُلِ اسْتَهْزِءُوْاۚ اِنَّ اللّٰهَ مُخْرِجٌ مَّا تَحْذَرُوْنَ (التوبة : ٩)
- yaḥdharu
- يَحْذَرُ
- Fear
- பயப்படுகின்றனர்
- l-munāfiqūna
- ٱلْمُنَٰفِقُونَ
- the hypocrites
- நயவஞ்சகர்கள்
- an tunazzala
- أَن تُنَزَّلَ
- lest be revealed
- இறக்கப்பட்டு
- ʿalayhim
- عَلَيْهِمْ
- about them
- அவர்கள் மீது
- sūratun
- سُورَةٌ
- a Surah
- ஓர் அத்தியாயம்
- tunabbi-uhum
- تُنَبِّئُهُم
- informing them
- அறிவித்துவிடுவதை/அவர்களுக்கு
- bimā
- بِمَا
- of what
- எவற்றை
- fī qulūbihim
- فِى قُلُوبِهِمْۚ
- (is) in their hearts
- தங்கள் உள்ளங்களில்
- quli
- قُلِ
- Say
- கூறுவீராக
- is'tahziū
- ٱسْتَهْزِءُوٓا۟
- "Mock
- பரிகசித்துக் கொள்ளுங்கள்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- mukh'rijun
- مُخْرِجٌ
- (will) bring forth
- வெளியாக்குபவன்
- mā
- مَّا
- what
- எதை
- taḥdharūna
- تَحْذَرُونَ
- you fear"
- பயப்படுகிறீர்கள்
Transliteration:
Yahzarul munaafiqoona an tunaz zala 'alaihim Sooratun tunabbi 'uhum bimaa feequloobihim; qulistahzi'oo innal laaha mukhrijum maa tahzaroon(QS. at-Tawbah:64)
English Sahih International:
The hypocrites are apprehensive lest a Surah be revealed about them, informing them of what is in their hearts. Say, "Mock [as you wish]; indeed, Allah will expose that which you fear." (QS. At-Tawbah, Ayah ௬௪)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தியாயம் அருளப்பட்டு அது தங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை வெளிப்படுத்திவிடுமோ என்று பயப்படுகி(ன்றவர்களைப் போல் நயவஞ்சகர்கள் நடித்து பரிகசிக்கின்)றனர். (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் பரிகசித்துக்கொண்டே இருங்கள். ஆயினும், நீங்கள் பயப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் வெளியாக்கியே தீருவான்." (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௬௪)
Jan Trust Foundation
முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவற்றை அவர்களுக்கு உணர்த்திவிடக்கூடிய ஓர் அத்தியாயம் இறக்கி வைக்கப்படுமோ என அஞ்சுகிறார்கள் - (நபியே!) நீர் கூறும்| “ நீங்கள் பரிகாசம் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் அஞ்சிக் கொண்டிருப்பதை நிச்சயமாக அல்லாஹ் வெளிப்படுத்துபவனாகவே இருக்கின்றான்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நம்பிக்கை கொண்ட) அவர்கள் மீது ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு அது தங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை அவர்களுக்கு அறிவித்துவிடுவதை நயவஞ்சகர்கள் (போலியாக) பயப்படுகின்றனர். கூறுவீராக: “பரிகசித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பயப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் வெளியாக்குபவன் ஆவான்.”