குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௬௨
Qur'an Surah At-Tawbah Verse 62
ஸூரத்துத் தவ்பா [௯]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَحْلِفُوْنَ بِاللّٰهِ لَكُمْ لِيُرْضُوْكُمْ وَاللّٰهُ وَرَسُوْلُهٗٓ اَحَقُّ اَنْ يُّرْضُوْهُ اِنْ كَانُوْا مُؤْمِنِيْنَ (التوبة : ٩)
- yaḥlifūna
- يَحْلِفُونَ
- They swear
- சத்தியம் செய்கின்றனர்
- bil-lahi
- بِٱللَّهِ
- by Allah
- அல்லாஹ் மீது
- lakum
- لَكُمْ
- to you
- உங்களுக்காக
- liyur'ḍūkum
- لِيُرْضُوكُمْ
- to please you
- அவர்கள் திருப்தி படுத்துவதற்காக உங்களை
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- warasūluhu
- وَرَسُولُهُۥٓ
- and His Messenger
- இன்னும் அவனுடைய தூதர்
- aḥaqqu
- أَحَقُّ
- (have) more right
- மிகவும் தகுதியுடையவர்கள்
- an yur'ḍūhu
- أَن يُرْضُوهُ
- that they should please Him
- அவர்கள் திருப்தி படுத்துவதற்கு/அவனை
- in kānū
- إِن كَانُوا۟
- if they are
- அவர்கள் இருந்தால்
- mu'minīna
- مُؤْمِنِينَ
- believers
- நம்பிக்கையாளர்களாக
Transliteration:
yahlifoona billaahi lakum liyurdookum wallaahu wa Rasooluhoo ahaqqu ai yurdoohu in kaanoo mu'mineen(QS. at-Tawbah:62)
English Sahih International:
They swear by Allah to you [Muslims] to satisfy you. But Allah and His Messenger are more worthy for them to satisfy, if they were to be believers. (QS. At-Tawbah, Ayah ௬௨)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) உங்களைத் திருப்திப்படுத்து வதற்காக உங்கள் முன்னிலையில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்கள் மெய்யாகவே நம்பிக்கை யாளர்களாயிருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான் மிகவும் தகுதியுடையவர்கள் (என்பதை அறிந்துகொள்வர்.) (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௬௨)
Jan Trust Foundation
(முஃமின்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடத்தில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப் படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய ரஸூலும் தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களைத் திருப்திபடுத்துவதற்காக அவர்கள் உங்களுக்காக அல்லாஹ் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், அவர்கள் திருப்திபடுத்துவதற்கு அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான் மிகவும் தகுதியுடையவர்கள்.