Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௬௧

Qur'an Surah At-Tawbah Verse 61

ஸூரத்துத் தவ்பா [௯]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنْهُمُ الَّذِيْنَ يُؤْذُوْنَ النَّبِيَّ وَيَقُوْلُوْنَ هُوَ اُذُنٌ ۗقُلْ اُذُنُ خَيْرٍ لَّكُمْ يُؤْمِنُ بِاللّٰهِ وَيُؤْمِنُ لِلْمُؤْمِنِيْنَ وَرَحْمَةٌ لِّلَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْۗ وَالَّذِيْنَ يُؤْذُوْنَ رَسُوْلَ اللّٰهِ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ (التوبة : ٩)

wamin'humu
وَمِنْهُمُ
And among them
அவர்களில்
alladhīna
ٱلَّذِينَ
(are) those who
எவர்கள்
yu'dhūna
يُؤْذُونَ
hurt
இகழ்கிறார்கள், குறை கூறுகிறார்கள்
l-nabiya
ٱلنَّبِىَّ
the Prophet
நபியை
wayaqūlūna
وَيَقُولُونَ
and they say
கூறுகின்றனர்
huwa
هُوَ
"He is
அவர்
udhunun
أُذُنٌۚ
(all) ear"
ஒரு காது
qul
قُلْ
Say
கூறுவீராக
udhunu
أُذُنُ
"An ear
காது
khayrin lakum
خَيْرٍ لَّكُمْ
(of) goodness for you
நல்லது/உங்களுக்கு
yu'minu
يُؤْمِنُ
he believes
நம்பிக்கைகொள்கிறார்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
wayu'minu
وَيُؤْمِنُ
and believes
இன்னும் ஏற்றுக் கொள்கிறார்
lil'mu'minīna
لِلْمُؤْمِنِينَ
the believers
நம்பிக்கையாளர்களை
waraḥmatun
وَرَحْمَةٌ
and (is) a mercy
இன்னும் கருணை
lilladhīna
لِّلَّذِينَ
to those who
எவர்களுக்கு
āmanū
ءَامَنُوا۟
believe
நம்பிக்கை கொண்டார்கள்
minkum
مِنكُمْۚ
among you"
உங்களில்
wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
எவர்கள்
yu'dhūna
يُؤْذُونَ
hurt
இகழ்கின்றனர்
rasūla
رَسُولَ
(the) Messenger
தூதரை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
வேதனை
alīmun
أَلِيمٌ
painful
துன்புறுத்தக்கூடியது

Transliteration:

Wa minhumul lazeena yu'zoonan nabiyya wa yaqooloona huwa uzun; qul uzunu khairil lakum yu'minu billaahi wa yu'minu lilmu mi neena wa rahmatul lillazeena aamanoo minkum; wallazeena yu'zoona Rasoolal laahi lahum 'azaabun aleem (QS. at-Tawbah:61)

English Sahih International:

And among them are those who abuse the Prophet and say, "He is an ear." Say, "[It is] an ear of goodness for you that believes in Allah and believes the believers and [is] a mercy to those who believe among you." And those who abuse the Messenger of Allah – for them is a painful punishment. (QS. At-Tawbah, Ayah ௬௧)

Abdul Hameed Baqavi:

("இந்த நபியிடம் எவர் எதைக் கூறியபோதிலும் அதற்குச்) செவி கொடுக்கக் கூடியவராக அவர் இருக்கின்றார்" என்று கூறி (நமது) நபியைத் துன்புறுத்துபவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(அவ்வாறு அவர்) செவி கொடுப்பது உங்களுக்கே நன்று. அவர் அல்லாஹ்வையும் நம்புகிறார்; நம்பிக்கையாளர்களையும் நம்புகிறார். அன்றி, உங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் மீது மிகக் கருணை உடையவராகவும் இருக்கின்றார்." ஆகவே, (உங்களில்) எவர்கள் (இவ்வாறு கூறி) அல்லாஹ்வுடைய தூதரைத் துன்புறுத்துகிறார்களோ அவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௬௧)

Jan Trust Foundation

(இந்த நபியிடம் யார் எதைச் சொன்னாலும்) அவர் கேட்டுக் கொள்பவராகவே இருக்கிறார் எனக்கூறி நபியைத் துன்புறுத்துவோரும் அவர்களில் இருக்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்| “(நபி அவ்வாறு) செவியேற்பது உங்களுக்கே நன்மையாகும். அவர் அல்லாஹ்வை நம்புகிறார்; முஃமின்களையும் நம்புகிறார்; அன்றியும் உங்களில் ஈமான் கொண்டவர்கள் மீது அவர் கருணையுடையோராகவும் இருக்கின்றார்;” எனவே எவர்கள் அல்லாஹ்வின் தூதரை துன்புறுத்துகிறார்களோ, அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“அவர் (அனைத்தையும் செவியேற்கும்) ஒரு காது” என்று கூறி நபியை இகழ்பவர்களும் அவர்களில் உள்ளனர். (நபியே!) கூறுவீராக: “(அவர்) உங்களுக்கு நல்ல காது ஆவார். (அவர்) அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறார்; நம்பிக்கையாளர்களை ஏற்றுக் கொள்கிறார். உங்களில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு கருணையாவார்.” அல்லாஹ்வின் தூதரை இகழ்பவர்கள் அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய வேதனையுண்டு.