Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௫௮

Qur'an Surah At-Tawbah Verse 58

ஸூரத்துத் தவ்பா [௯]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنْهُمْ مَّنْ يَّلْمِزُكَ فِى الصَّدَقٰتِۚ فَاِنْ اُعْطُوْا مِنْهَا رَضُوْا وَاِنْ لَّمْ يُعْطَوْا مِنْهَآ اِذَا هُمْ يَسْخَطُوْنَ (التوبة : ٩)

wamin'hum
وَمِنْهُم
And among them
அவர்களில்
man
مَّن
(is he) who
எவர்(கள்)
yalmizuka
يَلْمِزُكَ
criticizes you
குறை கூறுகிறார்(கள்)/உம்மை
fī l-ṣadaqāti
فِى ٱلصَّدَقَٰتِ
concerning the charities
தர்மங்களில்
fa-in uʿ'ṭū
فَإِنْ أُعْطُوا۟
Then if they are given
அவர்கள் கொடுக்கப்பட்டால்
min'hā
مِنْهَا
from it
அவற்றிலிருந்து
raḍū
رَضُوا۟
they are pleased;
திருப்தியடைவார்கள்
wa-in lam yuʿ'ṭaw
وَإِن لَّمْ يُعْطَوْا۟
but if not they are given
அவர்கள் கொடுக்கப்பட வில்லையென்றால்
min'hā
مِنْهَآ
from it
அவற்றிலிருந்து
idhā
إِذَا
then
அப்போது
hum
هُمْ
they
அவர்கள்
yaskhaṭūna
يَسْخَطُونَ
(are) enraged
ஆத்திரப்படுகின்றனர்

Transliteration:

Wa minhum mai yalmizuka fis sadaqaati fa-in u'too minhaa radoo wa illam yu'taw minhaaa izaa hum yaskhatoon (QS. at-Tawbah:58)

English Sahih International:

And among them are some who criticize you concerning the [distribution of] charities. If they are given from them, they approve; but if they are not given from them, at once they become angry. (QS. At-Tawbah, Ayah ௫௮)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் தானங்களைப் பங்கிடுவதில் பாரபட்சமுடையவர் என்று உங்களைக் குறை கூறுபவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். (அவர்கள் விருப்பப்படி) அதிலிருந்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்டால் அவர்கள் திருப்தியடைகின்றனர். அதிலிருந்து (அவர்கள் விருப்பப்படி) கொடுக்கப்படாவிட்டாலோ ஆத்திரம் கொள்கின்றனர். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௫௮)

Jan Trust Foundation

(நபியே!) தானங்கள் விஷயத்தில் (பாரபட்சம் உடையவர்) என்று உம்மைக் குறை கூறுபவரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆனால் அவற்றிலிருந்து அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்கப்பட்டால் திருப்தியடைகின்றார்கள் - அப்படி அவற்றிலிருந்து கொடுக்கப்படவில்லையானால், அவர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) தர்மங்களில் உம்மைக் குறை கூறுபவர்களும் அவர்களில் உண்டு. அவற்றிலிருந்து அவர்கள் கொடுக்கப்பட்டால் திருப்தியடைவார்கள். அவற்றிலிருந்து அவர்கள் கொடுக்கப்படவில்லையென்றால் அப்போது அவர்கள் ஆத்திரப்படுகின்றனர்.