குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௫௨
Qur'an Surah At-Tawbah Verse 52
ஸூரத்துத் தவ்பா [௯]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ هَلْ تَرَبَّصُوْنَ بِنَآ اِلَّآ اِحْدَى الْحُسْنَيَيْنِۗ وَنَحْنُ نَتَرَبَّصُ بِكُمْ اَنْ يُّصِيْبَكُمُ اللّٰهُ بِعَذَابٍ مِّنْ عِنْدِهٖٓ اَوْ بِاَيْدِيْنَاۖ فَتَرَبَّصُوْٓا اِنَّا مَعَكُمْ مُّتَرَبِّصُوْنَ (التوبة : ٩)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- hal tarabbaṣūna
- هَلْ تَرَبَّصُونَ
- "Do you await
- எதிர்பார்க்கிறீர்களா?
- binā
- بِنَآ
- for us
- எங்களுக்கு
- illā
- إِلَّآ
- except
- தவிர
- iḥ'dā
- إِحْدَى
- one
- ஒன்றை
- l-ḥus'nayayni
- ٱلْحُسْنَيَيْنِۖ
- (of) the two best (things)
- (இரு) சிறப்பானவற்றில்
- wanaḥnu
- وَنَحْنُ
- while we
- நாங்கள்
- natarabbaṣu
- نَتَرَبَّصُ
- [we] await
- எதிர்பார்க்கிறோம்
- bikum
- بِكُمْ
- for you
- உங்களுக்கு
- an yuṣībakumu
- أَن يُصِيبَكُمُ
- that Allah will afflict you
- சோதிப்பதை/உங்களை
- l-lahu
- ٱللَّهُ
- Allah will afflict you
- அல்லாஹ்
- biʿadhābin min ʿindihi
- بِعَذَابٍ مِّنْ عِندِهِۦٓ
- with a punishment from [near] Him
- ஒரு வேதனையைக் கொண்டு/தன்னிடமிருந்து
- aw
- أَوْ
- or
- அல்லது
- bi-aydīnā
- بِأَيْدِينَاۖ
- by our hands?
- எங்கள் கரங்களால்
- fatarabbaṣū
- فَتَرَبَّصُوٓا۟
- So wait
- ஆகவே எதிர்பாருங்கள்
- innā
- إِنَّا
- indeed, we
- நிச்சயமாக நாங்கள்
- maʿakum
- مَعَكُم
- with you
- உங்களுடன்
- mutarabbiṣūna
- مُّتَرَبِّصُونَ
- (are) waiting"
- எதிர்பார்ப்பவர்கள்
Transliteration:
Qul hal tarabbasoona binaaa illaaa ihdal husnayayni wa nahnu natrabbasu bikum ai yus eebakumul laahu bi'azaa bim min 'indiheee aw biaidee naa fatarabbasooo innaa ma'akum mutarabbisoon(QS. at-Tawbah:52)
English Sahih International:
Say, "Do you await for us except one of the two best things [i.e., martyrdom or victory] while we await for you that Allah will afflict you with punishment from Himself or at our hands? So wait; indeed we, along with you, are waiting." (QS. At-Tawbah, Ayah ௫௨)
Abdul Hameed Baqavi:
அன்றி, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: (வெற்றி அல்லது வீர சுவர்க்கம் ஆகிய) மிகச் சிறந்த இவ்விரண்டு நன்மைகளில் ஒன்றைத்தவிர (வேறெந்தத் தீங்கையும்) நீங்கள் எங்களுக்கு எதிர்பார்க்க முடியுமா? (ஆகவே, இந்த இரண்டில் எது கிடைத்த போதிலும் எங்களுக்கு நன்றே.) எனினும், உங்களுக்கோ அல்லாஹ் தன் வேதனையைக் கொண்டோ அல்லது எங்கள் கைகளைக் கொண்டோ உங்களுக்குக் கஷ்டம் உண்டாக்குவதையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆகவே, நீங்கள் (எங்களுக்கு வர வேண்டியதை) எதிர்பார்த்திருங்கள்; நாங்களும் (உங்களுக்கு வர வேண்டியதை) உங்களுடன் எதிர்பார்க்கின்றோம். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௫௨)
Jan Trust Foundation
(நபியே!) நீர் கூறுவீராக| ”(வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரு அழகிய நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் எங்களுக்காக எதிர்பார்க்க முடியுமா?” ஆனால் உங்களுக்கோ அல்லாஹ் தன்னிடத்திலிருந்தோ அல்லது எங்கள் கைகளினாலோ வேதனையை அளிப்பான் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம் - ஆகவே நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நாங்களும் உங்களோடு எதிர்பார்த்திருக்கின்றோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
கூறுவீராக: (வெற்றி அல்லது சொர்க்கம் இந்த) இரு சிறப்பானவற்றில் ஒன்றைத் தவிர (வேறு எதையும்) எங்களுக்கு எதிர்பார்க்கிறீர்களா? அல்லாஹ் தன்னிடமிருந்து அல்லது எங்கள் கரங்களால் ஒரு வேதனையைக் கொண்டு உங்களை சோதிப்பதை நாங்கள் உங்களுக்கு எதிர்பார்க்கிறோம். ஆகவே, எதிர்பாருங்கள்; நிச்சயமாக நாங்கள் உங்களுடன் எதிர்பார்ப்பவர்கள்.