குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௫௦
Qur'an Surah At-Tawbah Verse 50
ஸூரத்துத் தவ்பா [௯]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنْ تُصِبْكَ حَسَنَةٌ تَسُؤْهُمْۚ وَاِنْ تُصِبْكَ مُصِيْبَةٌ يَّقُوْلُوْا قَدْ اَخَذْنَآ اَمْرَنَا مِنْ قَبْلُ وَيَتَوَلَّوْا وَّهُمْ فَرِحُوْنَ (التوبة : ٩)
- in tuṣib'ka
- إِن تُصِبْكَ
- If befalls you
- அடைந்தால்/உம்மை
- ḥasanatun
- حَسَنَةٌ
- good
- ஒரு நன்மை
- tasu'hum
- تَسُؤْهُمْۖ
- it distresses them
- துக்கப்படுத்துகிறது/அவர்களை
- wa-in tuṣib'ka
- وَإِن تُصِبْكَ
- but if befalls you
- இன்னும் அடைந்தால்/உம்மை
- muṣībatun
- مُصِيبَةٌ
- a calamity
- ஒரு சோதனை
- yaqūlū
- يَقُولُوا۟
- they say
- கூறுகின்றனர்
- qad akhadhnā
- قَدْ أَخَذْنَآ
- "Verily we took
- எடுத்துக் கொண்டோம்
- amranā
- أَمْرَنَا
- our matter
- எங்கள் காரியத்தை
- min qablu
- مِن قَبْلُ
- before" before"
- முன்னரே
- wayatawallaw
- وَيَتَوَلَّوا۟
- And they turn away
- திரும்புகின்றனர்
- wahum
- وَّهُمْ
- while they
- அவர்கள்
- fariḥūna
- فَرِحُونَ
- (are) rejoicing
- மகிழ்ச்சியடைந்தவர்களாக
Transliteration:
in tusibka hasanatun tasu'hum; wa in tusibka museebatuny yaqooloo qad akhaznaaa amranaa min qablu wa yatawallaw wa hum farihoon(QS. at-Tawbah:50)
English Sahih International:
If good befalls you, it distresses them; but if disaster strikes you, they say, "We took our matter [in hand] before," and turn away while they are rejoicing. (QS. At-Tawbah, Ayah ௫௦)
Abdul Hameed Baqavi:
(நபியே!) உங்களுக்கு யாதொரு நன்மையேற்படின் (அது) அவர்களுக்குத் துன்பத்தைத் தருகின்றது. உங்களுக்கு யாதொரு தீங்கேற்பட்டாலோ "நிச்சயமாக நாங்கள் எங்களுடைய காரியத்தில் (உங்களைச் சம்பந்தப்படுத்தாது) ஏற்கனவே எச்சரிக்கையாய் இருந்து கொண்டோம்" என்று கூறி மிக்க மகிழ்ச்சியுடன் (உங்களை விட்டு) விலகிச் செல்கின்றனர். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௫௦)
Jan Trust Foundation
உமக்கு ஏதாவது ஒரு நன்மை ஏற்பட்டால், அது அவர்களுக்குத் துக்கத்தைத் தருகின்றது; உமக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால், அவர்கள் “நிச்சயமாக நாங்கள் எங்களுடைய காரியத்தில் முன்னரே எச்சரிக்கையாக இருந்து கொண்டோம்” என்று கூறிவிட்டு மிக்க மகிழ்ச்சியுடன் (உம்மை விட்டுச்) சென்று விடுகிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) உம்மை ஒரு நன்மை அடைந்தால் அது அவர்களைத் துக்கப்படுத்துகிறது. உம்மை ஒரு சோதனை அடைந்தால், “முன்னரே எங்கள் காரியத்தை (எச்சரிக்கையுடன்) நாங்கள் (முடிவு) எடுத்துக் கொண்(டு போருக்கு வராமல் தங்கி விட்)டோம்” என்று கூறி, அவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாக (உம்மை விட்டு) திரும்புகின்றனர்.