குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௪௯
Qur'an Surah At-Tawbah Verse 49
ஸூரத்துத் தவ்பா [௯]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ ائْذَنْ لِّيْ وَلَا تَفْتِنِّيْۗ اَلَا فِى الْفِتْنَةِ سَقَطُوْاۗ وَاِنَّ جَهَنَّمَ لَمُحِيْطَةٌ ۢ بِالْكٰفِرِيْنَ (التوبة : ٩)
- wamin'hum
- وَمِنْهُم
- And among them
- அவர்களில்
- man
- مَّن
- (is he) who
- எவர்
- yaqūlu
- يَقُولُ
- says
- கூறுகிறார்
- i'dhan
- ٱئْذَن
- "Grant me leave
- அனுமதி தருவீராக
- lī
- لِّى
- "Grant me leave
- எனக்கு
- walā taftinnī
- وَلَا تَفْتِنِّىٓۚ
- and (do) not put me to trial"
- சோதிக்காதீர்/என்னை
- alā
- أَلَا
- Surely
- அறிந்துகொள்ளுங்கள்!
- fī l-fit'nati
- فِى ٱلْفِتْنَةِ
- in the trial
- சோதனையில்
- saqaṭū
- سَقَطُوا۟ۗ
- they have fallen
- விழுந்தனர்
- wa-inna jahannama
- وَإِنَّ جَهَنَّمَ
- And indeed Hell
- நிச்சயமாக நரகம்
- lamuḥīṭatun
- لَمُحِيطَةٌۢ
- (will) surely surround
- சூழ்ந்தே உள்ளது
- bil-kāfirīna
- بِٱلْكَٰفِرِينَ
- the disbelievers
- நிராகரிப்பவர்களை
Transliteration:
Wa minhum mai yaqoolu' zal lee wa laa taftinneee; alaa fil fitnati saqatoo; wa inna Jahannama lamuheetatum bil kaafireen(QS. at-Tawbah:49)
English Sahih International:
And among them is he who says, "Permit me [to remain at home] and do not put me to trial." Unquestionably, into trial they have fallen. And indeed, Hell will encompass the disbelievers. (QS. At-Tawbah, Ayah ௪௯)
Abdul Hameed Baqavi:
(நபியே! "போருக்கு அழைத்து) நீங்கள் என்னைச் சோதனைக்குள்ளாக்காமலே (வீட்டில் நான் தங்கியிருக்க) எனக்கு அனுமதி தாருங்கள்" என்று கோருபவர்களும் அவர்களில் சிலர் இருக்கின்றனர். (எனினும் இவ்வாறு கோரும்) அவர்கள் (கஷ்டமான பல) சோதனைகளிலேயே மூழ்கிக் கிடக்கவில்லையா? நிராகரிப்பவர்களை நிச்சயமாக நரகம் சூழ்ந்து கொண்டிருக்கிறது. (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௪௯)
Jan Trust Foundation
“(வீட்டிலேயே தங்கியிருக்க) எனக்கு அனுமதி தாருங்கள்; என்னை சோதனைக்கு உள்ளாக்காதீர்கள்” என்று சொல்வோரும் அவர்களிடையே இருக்கிறார்கள்; அவர்கள் சோதனையிலன்றோ வீழ்ந்துவிட்டார்கள். மேலும் நிச்சயமாக நரகம் காஃபிர்களை (எல்லாப் பக்கங்களிலிருந்தும்) சுற்றி வளைத்துக் கொள்ளும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) “எனக்கு அனுமதி தருவீராக, என்னைச் சோதிக்காதீர்”என்று கூறுபவரும் அவர்களில் உண்டு. அறிந்து கொள்ளுங்கள் அவர்கள் சோதனையில் விழுந்தனர். நிச்சயமாக நரகம் நிராகரிப்பவர்களை சூழ்ந்தே உள்ளது.