Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௪௭

Qur'an Surah At-Tawbah Verse 47

ஸூரத்துத் தவ்பா [௯]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَوْ خَرَجُوْا فِيْكُمْ مَّا زَادُوْكُمْ اِلَّا خَبَالًا وَّلَاَوْضَعُوْا خِلٰلَكُمْ يَبْغُوْنَكُمُ الْفِتْنَةَۚ وَفِيْكُمْ سَمّٰعُوْنَ لَهُمْۗ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالظّٰلِمِيْنَ (التوبة : ٩)

law kharajū
لَوْ خَرَجُوا۟
If they (had) gone forth
அவர்கள் வெளியேறி இருந்தால்
fīkum
فِيكُم
with you
உங்களுடன்
مَّا
not
அதிகப்படுத்தி இருக்க மாட்டார்கள்
zādūkum
زَادُوكُمْ
they (would) have increased you
அதிகப்படுத்தி இருக்க மாட்டார்கள் உங்களுக்கு
illā
إِلَّا
except
தவிர
khabālan
خَبَالًا
(in) confusion
தீமையை
wala-awḍaʿū
وَلَأَوْضَعُوا۟
and would have been active
இன்னும் விரைந்திருப்பார்கள்
khilālakum
خِلَٰلَكُمْ
in your midst
உங்களுக்கிடையில்
yabghūnakumu
يَبْغُونَكُمُ
seeking (for) you
தேடுவார்கள்/உங்களுக்கு
l-fit'nata
ٱلْفِتْنَةَ
dissension
குழப்பத்தை
wafīkum
وَفِيكُمْ
And among you (are some)
இன்னும் உங்களுடன்
sammāʿūna
سَمَّٰعُونَ
who would have listened
ஒற்றர்கள்
lahum
لَهُمْۗ
to them
அவர்களுக்கு
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
(is) All-Knower
நன்கறிந்தவன்
bil-ẓālimīna
بِٱلظَّٰلِمِينَ
of the wrongdoers
அநியாயக்காரர்களை

Transliteration:

Law kharajoo feekum maa zaadookum ilaa Khabaalanw wa la awda'oo khilaalakum yabghoona kumul fitnata wa feekum sammaa'oona lahum; wallaahu 'aleemum biz zaalimeen (QS. at-Tawbah:47)

English Sahih International:

Had they gone forth with you, they would not have increased you except in confusion, and they would have been active among you, seeking [to cause] you fitnah [i.e., chaos and dissension]. And among you are avid listeners to them. And Allah is Knowing of the wrongdoers. (QS. At-Tawbah, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

அவர்கள் உங்களுடன் வந்திருந்தால் ஒழுங்கீனத்தைத் தவிர (வேறு எதனையும்) உங்களுக்கு அதிகரிக்கச் செய்திருக்க மாட்டார்கள். விஷமத்தைக் கருதி உங்கள் மத்தியில் அலங்கோலத்தையும் உண்டுபண்ணி இருப்பார்கள். அவர்களுடைய ஒற்றர்களும் உங்களுடன் இருக்கின்றனர். ஆனால், அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்காரர்களை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௪௭)

Jan Trust Foundation

உங்களோடு அவர்கள் புறப்பட்டிருந்தால் குழப்பத்தைத் தவிர (வேறெதையும்) உங்களுக்கு அவர்கள் அதிகப்படுத்தியிருக்க மாட்டார்கள், மேலும் உங்களுக்கிடையே கோள்மூட்டி இருப்பார்கள். குழப்பத்தையும் உங்களுக்கு விரும்பியிருப்பார்கள். அவர்களின் (கூற்றை) செவியேற்பவர்களும் உங்களில் இருக்கிறார்கள்; அல்லாஹ் அநியாயக்காரர்களை அறிந்தவனாக இருக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் உங்களுடன் வெளியேறி (வந்து) இருந்தால் தீமையைத் தவிர (வேறு எதையும்) உங்களுக்கு அதிகப்படுத்தி இருக்க மாட்டார்கள்; உங்களுக்கு குழப்பத்தைத் தேடி உங்களுக்கிடையில் விரைந்திருப்பார்கள். அவர்களுக்காக (உளவு பார்க்கும்) ஒற்றர்களும் உங்களுடன் இருக்கின்றனர். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.