Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௪௫

Qur'an Surah At-Tawbah Verse 45

ஸூரத்துத் தவ்பா [௯]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّمَا يَسْتَأْذِنُكَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَارْتَابَتْ قُلُوْبُهُمْ فَهُمْ فِيْ رَيْبِهِمْ يَتَرَدَّدُوْنَ (التوبة : ٩)

innamā
إِنَّمَا
Only
எல்லாம்
yastadhinuka
يَسْتَـْٔذِنُكَ
ask your leave
அனுமதி கோருவார்(கள்)/உம்மிடம்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
(do) not believe
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
wal-yawmi l-ākhiri
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
and the Day the Last
இன்னும் இறுதி நாளை
wa-ir'tābat
وَٱرْتَابَتْ
and (are in) doubts
இன்னும் சந்தேகித்தன
qulūbuhum
قُلُوبُهُمْ
their hearts
உள்ளங்கள்/அவர்களுடைய
fahum
فَهُمْ
so they
எனவே, அவர்கள்
fī raybihim
فِى رَيْبِهِمْ
in their doubts
தங்கள் சந்தேகத்தில்
yataraddadūna
يَتَرَدَّدُونَ
they waver
தடுமாறுகின்றனர்

Transliteration:

Innamaa yastaazinukal lazeena laa yu'minoona billaahi wal Yawmil Aakhiri wartaabat quloobuhum fahum fee raibihim yataraddadoon (QS. at-Tawbah:45)

English Sahih International:

Only those would ask permission of you who do not believe in Allah and the Last Day and whose hearts have doubted, and they, in their doubt, are hesitating. (QS. At-Tawbah, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

(போருக்கு வராதிருக்க) உங்களிடம் அனுமதி கோருவதெல்லாம், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உண்மை யாகவே நம்பிக்கை கொள்ளாதவர்கள்தாம். அவர்களுடைய உள்ளங்கள் சந்தேகத்தில் ஆழ்ந்து விட்டன. ஆகவே, அவர்கள் தங்கள் சந்தேகத்திலேயே சிக்கித் தடுமாறுகின்றனர். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௪௫)

Jan Trust Foundation

(போரில் கலந்துகொள்ளாதிருக்க) உம்மிடம் அனுமதி கேட்பவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் ஈமான் கொள்ளாதவர்கள்தாம்; அவர்களுடைய இருதயங்கள் தங்கள் சந்தேகத்திலேயே இருக்கின்றன; ஆகவே, அவர்கள் தம் சந்தேகங்களினாலே (இங்கு மங்கும்) உழலுகின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உம்மிடம் அனுமதி கோருவதெல்லாம், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதவர்கள்தான். அவர்களுடைய உள்ளங்கள் சந்தேகித்தன. ஆகவே, அவர்கள் தங்கள் சந்தேகத்தில் தடுமாறுகின்றனர்.