Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௪௦

Qur'an Surah At-Tawbah Verse 40

ஸூரத்துத் தவ்பா [௯]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا تَنْصُرُوْهُ فَقَدْ نَصَرَهُ اللّٰهُ اِذْ اَخْرَجَهُ الَّذِيْنَ كَفَرُوْا ثَانِيَ اثْنَيْنِ اِذْ هُمَا فِى الْغَارِ اِذْ يَقُوْلُ لِصَاحِبِهٖ لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَاۚ فَاَنْزَلَ اللّٰهُ سَكِيْنَتَهٗ عَلَيْهِ وَاَيَّدَهٗ بِجُنُوْدٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِيْنَ كَفَرُوا السُّفْلٰىۗ وَكَلِمَةُ اللّٰهِ هِيَ الْعُلْيَاۗ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ (التوبة : ٩)

illā
إِلَّا
If not
நீங்கள் உதவவில்லையெனில்
tanṣurūhu
تَنصُرُوهُ
you help him
நீங்கள் உதவவில்லையெனில் அவருக்கு
faqad
فَقَدْ
certainly
உதவிசெய்துவிட்டான்
naṣarahu
نَصَرَهُ
Allah helped him
உதவிசெய்துவிட்டான் அவருக்கு
l-lahu
ٱللَّهُ
Allah helped him
அல்லாஹ்
idh akhrajahu
إِذْ أَخْرَجَهُ
when drove him out
போது/வெளியேற்றினார்(கள்)/அவரை
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieved
நிராகரித்தனர்
thāniya
ثَانِىَ
the second
ஒருவராக
ith'nayni
ٱثْنَيْنِ
(of) the two
இருவரில்
idh
إِذْ
when
போது
humā
هُمَا
they both
அவ்விருவரும்
fī l-ghāri
فِى ٱلْغَارِ
(were) in the cave
குகையில்
idh
إِذْ
when
போது
yaqūlu
يَقُولُ
he said
கூறுகிறார்
liṣāḥibihi
لِصَٰحِبِهِۦ
to his companion
தன் தோழருக்கு
lā taḥzan
لَا تَحْزَنْ
"(Do) not grieve
கவலைப்படாதே
inna
إِنَّ
indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
maʿanā
مَعَنَاۖ
(is) with us"
நம்முடன்
fa-anzala
فَأَنزَلَ
Then Allah sent down
ஆகவே, இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
Then Allah sent down
அல்லாஹ்
sakīnatahu
سَكِينَتَهُۥ
His tranquility
தன் அமைதியை
ʿalayhi
عَلَيْهِ
upon him
அவர் மீது
wa-ayyadahu
وَأَيَّدَهُۥ
and supported him
இன்னும் பலப்படுத்தினான்/அவரை
bijunūdin
بِجُنُودٍ
with forces
படைகளைக்கொண்டு
lam tarawhā
لَّمْ تَرَوْهَا
which you did not see which you did not see
நீங்கள் பார்க்கவில்லை/அவற்றை
wajaʿala
وَجَعَلَ
and made
இன்னும் ஆக்கினான்
kalimata
كَلِمَةَ
(the) word
வார்த்தையை
alladhīna
ٱلَّذِينَ
(of) those who
எவர்களின்
kafarū
كَفَرُوا۟
disbelieved
நிராகரித்தனர்
l-suf'lā
ٱلسُّفْلَىٰۗ
the lowest
மிகத் தாழ்ந்ததாக
wakalimatu
وَكَلِمَةُ
while (the) Word
வார்த்தை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
hiya
هِىَ
it (is)
அதுதான்
l-ʿul'yā
ٱلْعُلْيَاۗ
the highest
மிக உயர்வானது
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
(is) All-Mighty
மிகைத்தவன்
ḥakīmun
حَكِيمٌ
All-Wise
ஞானவான்

Transliteration:

Illaa tansuroohu faqad nasarahul laahu iz akhrajahul lazeena kafaroo saaniyasnaini iz humaa filghaari iz yaqoolu lisaahibihee la tahzan innnal laaha ma'anaa fa anzalallaahu sakeenatahoo 'alaihi wa aiyadahoo bijunoodil lam tarawhaa wa ja'ala kalimatal lazeena kafarus suflaa; wa Kalimatul laahi hiyal 'ulyaa; wallaahu 'Azeezun Hakeem; (QS. at-Tawbah:40)

English Sahih International:

If you do not aid him [i.e., the Prophet (^)] – Allah has already aided him when those who disbelieved had driven him out [of Makkah] as one of two, when they were in the cave and he [i.e., Muhammad (^)] said to his companion, "Do not grieve; indeed Allah is with us." And Allah sent down His tranquility upon him and supported him with soldiers [i.e., angels] you did not see and made the word of those who disbelieved the lowest, while the word of Allah – that is the highest. And Allah is Exalted in Might and Wise. (QS. At-Tawbah, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

(நம் தூதருக்கு) நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அதனால் அவருக்கொன்றும் நஷ்டம் ஏற்பட்டுவிடாது. ஏனென்றால்) நிராகரிப்பவர்கள் அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவிசெய்தே இருக்கின்றான். (மலைக்) குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்த (போது எதிரிகள் வந்து சூழ்ந்துகொண்ட) சமயத்தில் தன்னுடன் (குகையில்) இருந்த தோழ(ராகிய அபூபக்)ரை நோக்கி "நீங்கள் கவலைப்படாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்" என்று கூறியபோதும் அல்லாஹ் அவருக்குத் தன்னுடைய மனநிம்மதியை அளித்தான். (மற்ற போர் சமயங் களிலும்) நீங்கள் காணமுடியாத படைகளைக் கொண்டு அவருக்கு உதவி செய்து நிராகரிப்பவர்களின் வார்த்தையை (மார்க்கத்தை) தாழ்த்தினான். ஏனென்றால், அல்லாஹ்வின் வார்த்தை (மார்க்கம்) தான் மிக உயர்வானது. அன்றி, அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௪௦)

Jan Trust Foundation

(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் அவருக்கு உதவவில்லையெனில் (அவருக்கு நஷ்டம் இல்லை). இருவரில் ஒருவராக அவர் இருக்க நிராகரித்தவர்கள் அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றியபோது, அவ்விருவரும் குகையில் இருந்தபோது, தன்தோழருக்கு “கவலைப்படாதே! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்”என்று கூறியபோது அல்லாஹ் அவருக்கு உதவி செய்துவிட்டான். அல்லாஹ் அவர் மீது தன் அமைதியை இறக்கினான். நீங்கள் பார்க்காத படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான். நிராகரித்தவர்களின் வார்த்தையை(மார்க்கத்தை, ஆற்றலை) மிகத் தாழ்ந்ததாக ஆக்கினான். அல்லாஹ்வின் வார்த்தைதான் (அவனது மார்க்கம், வலிமை) மிக உயர்வானது. அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான்.