Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௪

Qur'an Surah At-Tawbah Verse 4

ஸூரத்துத் தவ்பா [௯]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا الَّذِيْنَ عَاهَدْتُّمْ مِّنَ الْمُشْرِكِيْنَ ثُمَّ لَمْ يَنْقُصُوْكُمْ شَيْـًٔا وَّلَمْ يُظَاهِرُوْا عَلَيْكُمْ اَحَدًا فَاَتِمُّوْٓا اِلَيْهِمْ عَهْدَهُمْ اِلٰى مُدَّتِهِمْۗ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَّقِيْنَ (التوبة : ٩)

illā
إِلَّا
Except
தவிர
alladhīna
ٱلَّذِينَ
those (with) whom
எவர்கள்
ʿāhadttum
عَٰهَدتُّم
you have a treaty
நீங்கள் உடன்படிக்கை செய்தீர்கள்
mina l-mush'rikīna
مِّنَ ٱلْمُشْرِكِينَ
among the polytheists
இணைவைப்பவர்களில்
thumma
ثُمَّ
then
பிறகு
lam
لَمْ
not
அவர்கள் குறைக்காமல்
yanquṣūkum
يَنقُصُوكُمْ
they have failed you
அவர்கள் குறைக்காமல் உங்களுக்கு
shayan
شَيْـًٔا
(in any) thing
எதையும்
walam yuẓāhirū
وَلَمْ يُظَٰهِرُوا۟
and not they have supported
அவர்கள் உதவாமல்
ʿalaykum
عَلَيْكُمْ
against you
உங்களுக்கு எதிராக
aḥadan
أَحَدًا
anyone
ஒருவருக்கும்
fa-atimmū
فَأَتِمُّوٓا۟
so fulfil
முழுமைப்படுத்துங்கள்
ilayhim
إِلَيْهِمْ
to them
அவர்களுக்கு
ʿahdahum
عَهْدَهُمْ
their treaty
அவர்களின் உடன்படிக்கையை
ilā muddatihim
إِلَىٰ مُدَّتِهِمْۚ
till their term
அவர்களுடைய தவணை வரை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
loves
நேசிக்கிறான்
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
the righteous
அஞ்சுபவர்களை

Transliteration:

Illal lazeena 'aahattum minal mushrikeena summa lam yanqusookum shai'anw-wa lam yuzaahiroo 'alaikum ahadan fa atimmooo ilaihim 'ahdahum ilaa muddatihim; innal laaha yuhibbul muttaqeen (QS. at-Tawbah:4)

English Sahih International:

Excepted are those with whom you made a treaty among the polytheists and then they have not been deficient toward you in anything or supported anyone against you; so complete for them their treaty until their term [has ended]. Indeed, Allah loves the righteous [who fear Him]. (QS. At-Tawbah, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

ஆயினும், நீங்கள் உடன்படிக்கை செய்துகொண்ட இந்த இணைவைத்து வணங்குபவர்களில் எவர்கள் (தங்கள் உடன்படிக்கையில்) யாதொன்றையும் உங்களுக்குக் குறைவு செய்யாதும், உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றனரோ அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அதன் தவணை வரையில் (யாதொரு குறைவுமின்றி) முழுமைபடுத்தி வையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களை நேசிக்கின்றான். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௪)

Jan Trust Foundation

ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்துவிடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர| அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(எனினும்,) இணைவைப்பவர்களில் நீங்கள் உடன்படிக்கை செய்து பிறகு (அதில்) அவர்கள் உங்களுக்கு எதையும் குறைக்காமலும், உங்களுக்கு எதிராக ஒருவருக்கும் உதவாமலும் இருந்தவர்களைத் தவிர. அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களுடைய தவணை (முடியும்) வரை முழுமைப்படுத்துங்கள். நிச்சயமாக அல்லாஹ் (அவனை) அஞ்சுபவர்களை நேசிக்கிறான்.