குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௩௯
Qur'an Surah At-Tawbah Verse 39
ஸூரத்துத் தவ்பா [௯]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِلَّا تَنْفِرُوْا يُعَذِّبْكُمْ عَذَابًا اَلِيمًاۙ وَّيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّوْهُ شَيْـًٔاۗ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ (التوبة : ٩)
- illā tanfirū
- إِلَّا تَنفِرُوا۟
- If not you go forth
- நீங்கள் புறப்படாவிட்டால்
- yuʿadhib'kum
- يُعَذِّبْكُمْ
- He will punish you
- வேதனை செய்வான்/உங்களை
- ʿadhāban
- عَذَابًا
- (with) a painful punishment
- வேதனையால்
- alīman
- أَلِيمًا
- (with) a painful punishment
- துன்புறுத்தக்கூடியது
- wayastabdil
- وَيَسْتَبْدِلْ
- and will replace you
- இன்னும் மாற்றி விடுவான்
- qawman
- قَوْمًا
- (with) a people
- ஒரு சமுதாயத்தை
- ghayrakum
- غَيْرَكُمْ
- other than you
- உங்களை அன்றி
- walā
- وَلَا
- and not
- நீங்கள் தீங்கிழைக்க முடியாது
- taḍurrūhu
- تَضُرُّوهُ
- you can harm Him
- நீங்கள் தீங்கிழைக்க முடியாது அவனுக்கு
- shayan
- شَيْـًٔاۗ
- (in) anything
- எதையும்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- ʿalā
- عَلَىٰ
- (is) on
- மீதும்
- kulli shayin
- كُلِّ شَىْءٍ
- every thing
- எல்லாவற்றின்
- qadīrun
- قَدِيرٌ
- All-Powerful
- பேராற்றலுடையவன்
Transliteration:
Illaa tanfiroo yu'az zibkum 'azaaban aleemanw wa yastabdil qawman ghairakum wa laa tadurroohu shai'aa; wal laahu 'alaa kulli shai'in Qadeer(QS. at-Tawbah:39)
English Sahih International:
If you do not go forth, He will punish you with a painful punishment and will replace you with another people, and you will not harm Him at all. And Allah is over all things competent. (QS. At-Tawbah, Ayah ௩௯)
Abdul Hameed Baqavi:
(உங்களை போருக்கு அழைக்கப்பட்டு) நீங்கள் செல்லா விட்டால், உங்களை மிகத் துன்புறுத்தும் வேதனையால் வேதனை செய்வான். (அன்றி, உங்களைப் போக்கி) உங்கள் இடத்தில் மற்றவர்களை ஏற்படுத்தி விடுவான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் இழைக்க முடியாது. ஏனென்றால், அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக ஆற்றலுடையவன். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௩௯)
Jan Trust Foundation
நீங்கள் (அவ்வாறு புறப்பட்டுச்) செல்லவில்லையானால், (அல்லாஹ்) உங்களுக்கு நோவினை மிக்க வேதனை கொடுப்பான்; நீங்கள் அல்லாத வேறு சமூகத்தை மாற்றி (உங்களிடத்தில் அமைத்து) விடுவான். நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது - அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையோனாக இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(போருக்கு) நீங்கள் புறப்படாவிட்டால், துன்புறுத்தக்கூடிய வேதனையால் உங்களை வேதனை செய்வான்; உங்களை அன்றி (வேறு) ஒரு சமுதாயத்தை மாற்றி விடுவான். நீங்கள் அவனுக்கு எதையும் தீங்கிழைக்க முடியாது. அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.