குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௩௭
Qur'an Surah At-Tawbah Verse 37
ஸூரத்துத் தவ்பா [௯]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّمَا النَّسِيْۤءُ زِيَادَةٌ فِى الْكُفْرِ يُضَلُّ بِهِ الَّذِيْنَ كَفَرُوْا يُحِلُّوْنَهٗ عَامًا وَّيُحَرِّمُوْنَهٗ عَامًا لِّيُوَاطِـُٔوْا عِدَّةَ مَا حَرَّمَ اللّٰهُ فَيُحِلُّوْا مَا حَرَّمَ اللّٰهُ ۗزُيِّنَ لَهُمْ سُوْۤءُ اَعْمَالِهِمْۗ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْكٰفِرِيْنَ ࣖ (التوبة : ٩)
- innamā l-nasīu
- إِنَّمَا ٱلنَّسِىٓءُ
- Indeed the postponing
- பிற்படுத்துவதெல்லாம்
- ziyādatun
- زِيَادَةٌ
- (is) an increase
- அதிகப்படுத்துவது
- fī l-kuf'ri
- فِى ٱلْكُفْرِۖ
- in the disbelief
- நிராகரிப்பில்
- yuḍallu
- يُضَلُّ
- are led astray
- வழி கெடுக்கப்படுகின்றனர்
- bihi
- بِهِ
- by it
- இதன் மூலம்
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- disbelieve
- நிராகரித்தனர்
- yuḥillūnahu
- يُحِلُّونَهُۥ
- They make it lawful
- ஆகுமாக்குகின்றனர்/அதை
- ʿāman
- عَامًا
- one year
- ஓர் ஆண்டில்
- wayuḥarrimūnahu
- وَيُحَرِّمُونَهُۥ
- and make it unlawful
- இன்னும் அதைத் தடை செய்கின்றனர்
- ʿāman
- عَامًا
- (another) year
- ஓர் ஆண்டில்
- liyuwāṭiū
- لِّيُوَاطِـُٔوا۟
- to adjust
- அவர்கள் ஒத்து வருவதற்காக
- ʿiddata
- عِدَّةَ
- the number
- எண்ணிக்கைக்கு
- mā ḥarrama
- مَا حَرَّمَ
- which Allah has made unlawful
- எதை/தடை செய்தான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah has made unlawful
- அல்லாஹ்
- fayuḥillū
- فَيُحِلُّوا۟
- and making lawful
- ஆகுமாக்குவார்கள்
- mā ḥarrama
- مَا حَرَّمَ
- what Allah has made unlawful
- எதை/தடை செய்தான்
- l-lahu
- ٱللَّهُۚ
- Allah has made unlawful
- அல்லாஹ்
- zuyyina
- زُيِّنَ
- Is made fair-seeming
- அலங்கரிக்கப்பட்டன
- lahum
- لَهُمْ
- to them
- அவர்களுக்கு
- sūu
- سُوٓءُ
- (the) evil
- தீய(வை)
- aʿmālihim
- أَعْمَٰلِهِمْۗ
- (of) their deeds
- அவர்களுடைய செயல்கள்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- lā yahdī
- لَا يَهْدِى
- (does) not guide
- நேர்வழி செலுத்த மாட்டான்
- l-qawma
- ٱلْقَوْمَ
- the people
- மக்களை
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- the disbelievers
- நிராகரிப்பவர்களான
Transliteration:
Innamma naseee'u ziyaadatun filkufri yudallu bihillazeena kafaroo yuhil loonahoo 'aamanw wa yuhar rimoonahoo 'aamalliyu watti'oo 'iddata maa harramal laah; zuyyina lahum sooo'u a'maalihim; wallaahu laa yahdil qawmal kaafireen(QS. at-Tawbah:37)
English Sahih International:
Indeed, the postponing [of restriction within sacred months] is an increase in disbelief by which those who have disbelieved are led [further] astray. They make it lawful one year and unlawful another year to correspond to the number made unlawful by Allah and [thus] make lawful what Allah has made unlawful. Made pleasing to them is the evil of their deeds; and Allah does not guide the disbelieving people. (QS. At-Tawbah, Ayah ௩௭)
Abdul Hameed Baqavi:
(போர் செய்யக்கூடாதென்று தடுக்கப்பட்டுள்ள மாதங்களை அவர்கள் தங்கள் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் நிச்சயமாக நிராகரிப்பையே அதிகப்படுத்துகின்றது. இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப்படுகின்றனர். ஏனென்றால், (அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி) ஓர் ஆண்டில் (அம்மாதங்களில் போர் புரிவதை) ஆகுமாக்கிக் கொள்கின்றனர். மற்றொரு ஆண்டில் (அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று) தடுத்து விடுகின்றனர். (இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். அவர்களுடைய இத்தீயச் செயல்கள், (ஷைத்தானால்) அவர்களுக்கு அழகாக்கப்பட்டு விட்டன. நிராகரிக்கும் (இந்த) மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை. (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௩௭)
Jan Trust Foundation
(போர் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது; இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்;) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன; அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(புனித மாதங்களை) பிற்படுத்துவதெல்லாம் நிராகரிப்பில் அதிகப்படுத்துவதாகும். அதன்மூலம் நிராகரிப்பவர்கள் வழி கெடுக்கப்படுகின்றனர். ஓர் ஆண்டில் (புனித மாதமாகிய) அதை ஆகுமாக்குகின்றனர். (வேறு) ஓர் ஆண்டில் அதை (புனிதம் என) தடை செய்கின்றனர். காரணம், அல்லாஹ் தடை செய்த (புனித மாதங்களின்) எண்ணிக்கைக்கு அவர்கள் ஒத்துவந்து, பிறகு, அல்லாஹ் தடை செய்ததை அவர்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகும். அவர்களுடைய தீயச் செயல்கள், அவர்களுக்கு அலங்கரிக்கப்பட்டன. அல்லாஹ் நிராகரிப்பவர்களான மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்.