Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௩௧

Qur'an Surah At-Tawbah Verse 31

ஸூரத்துத் தவ்பா [௯]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِتَّخَذُوْٓا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ وَالْمَسِيْحَ ابْنَ مَرْيَمَۚ وَمَآ اُمِرُوْٓا اِلَّا لِيَعْبُدُوْٓا اِلٰهًا وَّاحِدًاۚ لَآ اِلٰهَ اِلَّا هُوَۗ سُبْحٰنَهٗ عَمَّا يُشْرِكُوْنَ (التوبة : ٩)

ittakhadhū
ٱتَّخَذُوٓا۟
They have taken
எடுத்துக் கொண்டனர்
aḥbārahum
أَحْبَارَهُمْ
their rabbis
அறிஞர்களை தங்கள்
waruh'bānahum
وَرُهْبَٰنَهُمْ
and their monks
இன்னும் துறவிகளை/தங்கள்
arbāban
أَرْبَابًا
(as) Lords
(வணங்கப்படும்) கடவுள்களாக
min dūni l-lahi
مِّن دُونِ ٱللَّهِ
besides besides Allah
அல்லாஹ்வையன்றி
wal-masīḥa
وَٱلْمَسِيحَ
and the Messiah
இன்னும் மஸீஹை
ib'na
ٱبْنَ
son
மகன்
maryama
مَرْيَمَ
(of) Maryam
மர்யமுடைய
wamā umirū
وَمَآ أُمِرُوٓا۟
And not they were commanded
அவர்கள் ஏவப்படவில்லை
illā
إِلَّا
except
தவிர
liyaʿbudū
لِيَعْبُدُوٓا۟
that they worship
அவர்கள் வணங்குவதற்கு
ilāhan
إِلَٰهًا
One God
வணக்கத்திற்குரிய ஒரு கடவுளை
wāḥidan
وَٰحِدًاۖ
One God
ஒரே
لَّآ
(There) is no
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
god
வணங்கப்படும் கடவுள்
illā huwa
إِلَّا هُوَۚ
except Him
அவனைத் தவிர
sub'ḥānahu
سُبْحَٰنَهُۥ
Glory be to Him
அவன் மிகத் தூயவன்
ʿammā
عَمَّا
from what
எதைவிட்டு
yush'rikūna
يُشْرِكُونَ
they associate (with Him)
இணைவைப்பார்கள்

Transliteration:

ittakhazooo ahbaarahum wa ruhbaanahum arbaabammin doonil laahi wal Maseehab na Maryama wa maaa umirooo illaa liya'budooo Ilaahanw Waa hidan laaa ilaaha illaa Hoo; Subhaanahoo 'ammaa yushrikoon (QS. at-Tawbah:31)

English Sahih International:

They have taken their scholars and monks as lords besides Allah, and [also] the Messiah, the son of Mary. And they were not commanded except to worship one God; there is no deity except Him. Exalted is He above whatever they associate with Him. (QS. At-Tawbah, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும், (தங்கள்) கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், வணக்கத்திற்குரிய ஒரே இறைவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் அனைவரும் ஏவப்பட்டு இருக்கின்றனர். வணக்கத்திற்குரிய இறைவன் அவனையன்றி (வேறெவனும்) இல்லை. அவர்கள் இணை வைக்கும் இவைகளை விட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௩௧)

Jan Trust Foundation

அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் அறிஞர்களையும் தங்கள் துறவிகளையும் மர்யமுடைய மகன் (ஈசா) மஸீஹையும் கடவுள்களாக எடுத்துக் கொண்டனர். வணக்கத்திற்குரிய ஒரே ஒரு கடவுளை அவர்கள் வணங்குவதற்குத் தவிர (இணை வைப்பதற்கு) அவர்கள் ஏவப்படவில்லை. வணங்கப்படும் கடவுள் அவனைத் தவிர (வேறு எவனும்) அறவே இல்லை. அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அவன் மிகத் தூயவன்.