Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௩௦

Qur'an Surah At-Tawbah Verse 30

ஸூரத்துத் தவ்பா [௯]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَتِ الْيَهُوْدُ عُزَيْرُ ِۨابْنُ اللّٰهِ وَقَالَتِ النَّصٰرَى الْمَسِيْحُ ابْنُ اللّٰهِ ۗذٰلِكَ قَوْلُهُمْ بِاَفْوَاهِهِمْۚ يُضَاهِـُٔوْنَ قَوْلَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ ۗقَاتَلَهُمُ اللّٰهُ ۚ اَنّٰى يُؤْفَكُوْنَ (التوبة : ٩)

waqālati
وَقَالَتِ
And said
கூறுகிறா(ர்க)ள்
l-yahūdu
ٱلْيَهُودُ
the Jews
யூதர்கள்
ʿuzayrun
عُزَيْرٌ
"Uzair
உஜைர்
ub'nu
ٱبْنُ
(is) son
மகன்
l-lahi
ٱللَّهِ
(of) Allah"
அல்லாஹ்வுடைய
waqālati
وَقَالَتِ
And said
இன்னும் கூறுகிறா(ர்க)ள்
l-naṣārā
ٱلنَّصَٰرَى
the Christians
கிறித்தவர்கள்
l-masīḥu
ٱلْمَسِيحُ
"Messiah
மஸீஹ்
ub'nu
ٱبْنُ
(is) son
மகன்
l-lahi
ٱللَّهِۖ
(of) Allah"
அல்லாஹ்வுடைய
dhālika
ذَٰلِكَ
That
இது
qawluhum
قَوْلُهُم
(is) their saying
அவர்களின் கூற்று
bi-afwāhihim
بِأَفْوَٰهِهِمْۖ
with their mouths
அவர்களின் வாய்களிலிருந்து
yuḍāhiūna
يُضَٰهِـُٔونَ
they imitate
ஒப்பாகின்றனர்
qawla
قَوْلَ
the saying
கூற்றுக்கு
alladhīna
ٱلَّذِينَ
(of) those who
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieved
நிராகரித்தனர்
min qablu
مِن قَبْلُۚ
before before
முன்னர்
qātalahumu
قَٰتَلَهُمُ
(May) Allah destroy them
அவர்களை அழிப்பான்
l-lahu
ٱللَّهُۚ
(May) Allah destroy them
அல்லாஹ்
annā
أَنَّىٰ
How
எப்படி
yu'fakūna
يُؤْفَكُونَ
deluded are they!
திருப்பப்படுகின்றனர்

Transliteration:

Q qaalatil yahoodu 'Uzairunib nul laahi wa qaalatin Nasaaral Maseehub nul laahi zaalika qawluhum bi afwaahihim yudaahi'oona qawlal lazeena kafaroo min qabl; qatalahumul laah; annaa yu'fakoon (QS. at-Tawbah:30)

English Sahih International:

The Jews say, "Ezra is the son of Allah"; and the Christians say, "The Messiah is the son of Allah." That is their statement from their mouths; they imitate the saying of those who disbelieved before [them]. May Allah destroy them; how are they deluded? (QS. At-Tawbah, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

யூதர்கள் (நபி) "உஜைரை" அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். (இவ்வாறே) கிறிஸ்தவர்கள் "மஸீஹை" அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். இவர்கள் தங்கள் வாய்களால் கூறும் இக்கூற்றானது இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்பவர்களின் கூற்றையே ஒத்திருக்கின்றது. அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான். (சத்தியத்தைப் புறக்கணித்து) இவர்கள் எங்கு வெருண்டோடுகின்றனர்? (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௩௦)

Jan Trust Foundation

யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

‘உஜைர்’அல்லாஹ்வுடைய மகன் என்று யூதர்கள் கூறுகிறார்கள். ‘மஸீஹ்’அல்லாஹ்வுடைய மகன் என்று கிறித்தவர்கள் கூறுகிறார்கள். இது அவர்களின் வாய்களில் இருந்து வரும் அவர்களின் (கற்பனைக்) கூற்றாகும் (தவிர, உண்மையில்லை). முன்னர் நிராகரித்தவர்களின் கூற்றுக்கு ஒப்பாகி(பேசுகி)ன்றனர். அல்லாஹ் அவர்களை அழிப்பான். அவர்கள் எப்படி (உண்மையை விட்டு) திருப்பப்படுகின்றனர்?