Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௨௪

Qur'an Surah At-Tawbah Verse 24

ஸூரத்துத் தவ்பா [௯]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اِنْ كَانَ اٰبَاۤؤُكُمْ وَاَبْنَاۤؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَاَمْوَالُ ِۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسٰكِنُ تَرْضَوْنَهَآ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَجِهَادٍ فِيْ سَبِيْلِهٖ فَتَرَبَّصُوْا حَتّٰى يَأْتِيَ اللّٰهُ بِاَمْرِهٖۗ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ ࣖ (التوبة : ٩)

qul
قُلْ
Say
கூறுவீராக
in kāna
إِن كَانَ
"If are
இருந்தால்
ābāukum
ءَابَآؤُكُمْ
your fathers
உங்கள் பெற்றோர்
wa-abnāukum
وَأَبْنَآؤُكُمْ
and your sons
இன்னும் பிள்ளைகள்/உங்கள்
wa-ikh'wānukum
وَإِخْوَٰنُكُمْ
and your brothers
இன்னும் உங்கள் சகோதரர்கள்
wa-azwājukum
وَأَزْوَٰجُكُمْ
and your spouses
இன்னும் உங்கள் மனைவிகள்
waʿashīratukum
وَعَشِيرَتُكُمْ
and your relatives
இன்னும் உங்கள் குடும்பம்
wa-amwālun
وَأَمْوَٰلٌ
and wealth
இன்னும் செல்வங்கள்
iq'taraftumūhā
ٱقْتَرَفْتُمُوهَا
that you have acquired
சம்பாதித்தீர்கள்/அவற்றை
watijāratun
وَتِجَٰرَةٌ
and the commerce
இன்னும் வர்த்தகம்
takhshawna
تَخْشَوْنَ
you fear
பயப்படுகிறீர்கள்
kasādahā
كَسَادَهَا
a decline (in) it
அது மந்தமாகி விடுவதை
wamasākinu
وَمَسَٰكِنُ
and the dwellings
இன்னும் வீடுகள்
tarḍawnahā
تَرْضَوْنَهَآ
you delight (in) it
நீங்கள் விரும்புகிறீர்கள்/அவற்றை
aḥabba
أَحَبَّ
(are) more beloved
மிக விருப்பமாக
ilaykum
إِلَيْكُم
to you
உங்களுக்கு
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
than Allah
அல்லாஹ்விடமிருந்து
warasūlihi
وَرَسُولِهِۦ
and His Messenger
இன்னும் அவனுடைய தூதர்
wajihādin
وَجِهَادٍ
and striving
இன்னும் போரிடுவது
fī sabīlihi
فِى سَبِيلِهِۦ
in His way
அவனுடைய பாதையில்
fatarabbaṣū
فَتَرَبَّصُوا۟
then wait
எதிர்பாருங்கள்
ḥattā yatiya
حَتَّىٰ يَأْتِىَ
until Allah brings
வரை/வருவான்
l-lahu
ٱللَّهُ
Allah brings
அல்லாஹ்
bi-amrihi
بِأَمْرِهِۦۗ
His Command
தன் கட்டளையைக் கொண்டு
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
(does) not guide
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma l-fāsiqīna
ٱلْقَوْمَ ٱلْفَٰسِقِينَ
the people the defiantly disobedient"
மக்களை/பாவிகள்

Transliteration:

Qul in kaana aabaaa'ukum wa abnaaa'ukum wa ikhwaanukum wa azwaajukum wa 'asheeratukum wa amwaaluniq taraftumoohaa wa tijaaratun takhshawna kasaadahaa wa masaakinu tardawnahaaa ahabba ilaikum minal laahi wa Rasoolihee wa Jihaadin fee Sabeelihee fatarabbasoo hattaa yaatiyallaahu bi amrih; wallaahu laa yahdil qawmal faasiqeen (QS. at-Tawbah:24)

English Sahih International:

Say, [O Muhammad], "If your fathers, your sons, your brothers, your wives, your relatives, wealth which you have obtained, commerce wherein you fear decline, and dwellings with which you are pleased are more beloved to you than Allah and His Messenger and jihad [i.e., striving] in His cause, then wait until Allah executes His command. And Allah does not guide the defiantly disobedient people." (QS. At-Tawbah, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

(நபியே! நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: உங்களுடைய தந்தைகளும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிகளும், உங்களுடைய குடும்பங்களும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் (உங்கள்) பொருள்களும், நஷ்டமாகிவிடுமோ என நீங்கள் பயந்து (மிக எச்சரிக்கையுடன்) செய்து வரும் வர்த்தகமும், உங்களுக்கு மிக்க விருப்பமுள்ள (உங்கள்) வீடுகளும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விடவும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவதைவிடவும் உங்களுக்கு மிக விருப்பமானவைகளாக இருந்தால் (நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களல்ல. நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப் பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் நீங்கள் எதிர்ப்பார்த்திருங்கள். (உங்களைப் போன்ற) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை. (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௨௪)

Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக: உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் மனைவிகளும், உங்கள் குடும்பமும், நீங்கள் சம்பாதித்த செல்வங்களும், அது மந்தமாகிவிடுவதை நீங்கள் பயப்படும் வர்த்தகமும், நீங்கள் விரும்பும் வீடுகளும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவனுடைய பாதையில் போரிடுவதையும்விட உங்களுக்கு மிக விருப்பமாக இருந்தால் அல்லாஹ் தன் (வேதனையின்) கட்டளையைக் கொண்டு வரும் வரை எதிர்பாருங்கள். அல்லாஹ் பாவிகளான மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.