குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௨
Qur'an Surah At-Tawbah Verse 2
ஸூரத்துத் தவ்பா [௯]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَسِيْحُوْا فِى الْاَرْضِ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّاعْلَمُوْٓا اَنَّكُمْ غَيْرُ مُعْجِزِى اللّٰهِ ۙوَاَنَّ اللّٰهَ مُخْزِى الْكٰفِرِيْنَ (التوبة : ٩)
- fasīḥū
- فَسِيحُوا۟
- So move about
- ஆகவே நீங்கள் சுற்றலாம்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the land
- பூமியில்
- arbaʿata
- أَرْبَعَةَ
- (during) four
- நான்கு
- ashhurin
- أَشْهُرٍ
- months
- மாதங்கள்
- wa-iʿ'lamū
- وَٱعْلَمُوٓا۟
- but know
- அறிந்து கொள்ளுங்கள்
- annakum
- أَنَّكُمْ
- that you
- நிச்சயம் நீங்கள்
- ghayru muʿ'jizī
- غَيْرُ مُعْجِزِى
- (can) not escape
- பலவீனப்படுத்துபவர்கள் அல்லர்
- l-lahi
- ٱللَّهِۙ
- Allah
- அல்லாஹ்வை
- wa-anna l-laha
- وَأَنَّ ٱللَّهَ
- and that Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- mukh'zī
- مُخْزِى
- (is) the One Who (will) disgrace
- இழிவுபடுத்துபவன்
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- the disbelievers
- நிராகரிப்பவர்களை
Transliteration:
Faseehoo fil ardi arba'ata ashhurinw wa'lamoooannakum ghairu mu'jizil laahi wa annal laaha mukhzil kaafireen(QS. at-Tawbah:2)
English Sahih International:
So travel freely, [O disbelievers], throughout the land [during] four months but know that you cannot cause failure to Allah and that Allah will disgrace the disbelievers. (QS. At-Tawbah, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) "நீங்கள் (இன்றிலிருந்து) நான்கு மாதங்கள் வரையில் (மக்காவின்) பூமியில் (எங்கும்) சுற்றித் திரியலாம். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க மாட்டீர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை இழிவுபடுத்துவான் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்" (என்று நபியே! நீங்கள் கூறுங்கள்.) (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௨)
Jan Trust Foundation
நீங்கள் நான்கு மாதங்கள் (வரையில்) இப் பூமியில் சுற்றித் திரியுங்கள்; நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை இழிவு படுத்துவான் என்பதையும் நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, (இணைவைப்பவர்களே) “நீங்கள் நான்கு மாதங்கள் பூமியில் (சுதந்திரமாக) சுற்றலாம். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை பலவீனப்படுத்துபவர்கள் அல்லர் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை இழிவுபடுத்துபவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.”