Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௮

Qur'an Surah At-Tawbah Verse 18

ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَلَمْ يَخْشَ اِلَّا اللّٰهَ ۗفَعَسٰٓى اُولٰۤىِٕكَ اَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ (التوبة : ٩)

innamā yaʿmuru
إِنَّمَا يَعْمُرُ
Only will maintain
பராமரிப்பதெல்லாம்
masājida
مَسَٰجِدَ
(the) masajid of Allah
மஸ்ஜிதுகளை
l-lahi
ٱللَّهِ
(the) masajid of Allah
அல்லாஹ்வின்
man
مَنْ
(the one) who
எவர்
āmana
ءَامَنَ
believes
நம்பிக்கை கொண்டார்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
wal-yawmi
وَٱلْيَوْمِ
and the Day
இன்னும் இறுதி நாளை
l-ākhiri
ٱلْءَاخِرِ
the Last
இறுதி
wa-aqāma
وَأَقَامَ
and establishes
இன்னும் நிலைநிறுத்தினார்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
the prayer
தொழுகையை
waātā
وَءَاتَى
and gives
இன்னும் கொடுத்தார்
l-zakata
ٱلزَّكَوٰةَ
the zakah
ஸகாத்தை
walam yakhsha
وَلَمْ يَخْشَ
and not fear
பயப்படவில்லை
illā
إِلَّا
except
தவிர
l-laha
ٱللَّهَۖ
Allah
அல்லாஹ்வை
faʿasā
فَعَسَىٰٓ
Then perhaps
கூடும்
ulāika
أُو۟لَٰٓئِكَ
those
இவர்கள்
an yakūnū
أَن يَكُونُوا۟
[that] they are
(அவர்கள்) இருக்க
mina l-muh'tadīna
مِنَ ٱلْمُهْتَدِينَ
of the guided ones
நேர்வழி பெற்றவர்களில்

Transliteration:

Innamaa ya'muru masaa jidal laahi man aamana billaahi wal Yawmil Aakhiri wa aqaamas Salaata wa aataz Zakaata wa lam yakkhsa illal laaha fa'asaaa ulaaa'ika ai yakoonoo minal muhtadeen (QS. at-Tawbah:18)

English Sahih International:

The mosques of Allah are only to be maintained by those who believe in Allah and the Last Day and establish prayer and give Zakah and do not fear except Allah, for it is expected that those will be of the [rightly] guided. (QS. At-Tawbah, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருவதுடன், அல்லாஹ்வை அன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ, அவர்கள்தான் அல்லாஹ்வுடைய பள்ளிகளைப் பராமரிக்கத் தகுதியுடையவர்கள். இத்தகையவர்கள்தாம் நேரான வழியில் இருப்பவர்கள். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௮)

Jan Trust Foundation

அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளை பராமரிப்பதெல்லாம் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தைக் கொடுத்து, அல்லாஹ்வைத் தவிர (எவரையும்) பயப்படாதவர்(கள்)தான். இவர்கள்தான் நேர்வழி பெற்றவர்களில் இருக்கக்கூடும்.