Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௭

Qur'an Surah At-Tawbah Verse 17

ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا كَانَ لِلْمُشْرِكِيْنَ اَنْ يَّعْمُرُوْا مَسٰجِدَ اللّٰهِ شٰهِدِيْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ بِالْكُفْرِۗ اُولٰۤىِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْۚ وَ فِى النَّارِ هُمْ خٰلِدُوْنَ (التوبة : ٩)

mā kāna
مَا كَانَ
(It) is not (It) is not
இருக்கவில்லை
lil'mush'rikīna
لِلْمُشْرِكِينَ
for the polytheists
இணைவைப்பவர்களுக்கு உரிமை
an yaʿmurū
أَن يَعْمُرُوا۟
that they maintain
அவர்கள் பரிபாலிப்பதற்கு
masājida
مَسَٰجِدَ
(the) masajid of Allah
மஸ்ஜிதுகளை
l-lahi
ٱللَّهِ
(the) masajid of Allah
அல்லாஹ்வுடைய
shāhidīna
شَٰهِدِينَ
(while) witnessing
சாட்சிகூறியவர்களாக
ʿalā anfusihim
عَلَىٰٓ أَنفُسِهِم
against themselves
தங்கள் மீது
bil-kuf'ri
بِٱلْكُفْرِۚ
[with] disbelief
நிராகரிப்பிற்கு
ulāika ḥabiṭat
أُو۟لَٰٓئِكَ حَبِطَتْ
(For) those worthless
அவர்கள்/அழிந்தன
aʿmāluhum
أَعْمَٰلُهُمْ
(are) their deeds
அவர்களுடைய செயல்கள்
wafī l-nāri
وَفِى ٱلنَّارِ
and in the Fire
இன்னும் நரகத்தில்தான்
hum
هُمْ
they
அவர்கள்
khālidūna
خَٰلِدُونَ
(will) abide forever
நிரந்தரமானவர்கள்

Transliteration:

maa kaana lilmushrikeena ai ya'muroo masaajidal laahi shaahideena 'alaaa anfusihim bilkufr; ulaaa'ika habitat a'maaluhum wa fin naari hum khaalidoon (QS. at-Tawbah:17)

English Sahih International:

It is not for the polytheists to maintain the mosques of Allah [while] witnessing against themselves with disbelief. [For] those, their deeds have become worthless, and in the Fire they will abide eternally. (QS. At-Tawbah, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

இணைவைத்து வணங்கும் இவர்கள், தாங்கள் நிராகரிப்பவர்கள்தாம் என்று (பகிரங்கமாக) கூறிக்கொண்டிருக்கும் வரையில், அல்லாஹ்வுடைய பள்ளிகளைப் பரிபாலனம் செய்ய அவர்களுக்கு உரிமையில்லை. இவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. அவர்கள் என்றென்றும் நரகத்திலேயே தங்கிவிடுவார்கள். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௭)

Jan Trust Foundation

“குஃப்ரின்” மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை; அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன - அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தங்கள் மீது நிராகரிப்பிற்கு (தாங்களே) சாட்சி கூறியவர்களாக இருக்கும் நிலையில் இணைவைப்பவர்களுக்கு அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளைப் பரிபாலிப்பதற்கு உரிமை இருக்கவில்லை. அவர்களுடைய (நற்)செயல்கள் அழிந்தன. நரகத்தில்தான் அவர்கள் நிரந்தரமானவர்கள்.