Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௪

Qur'an Surah At-Tawbah Verse 14

ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَاتِلُوْهُمْ يُعَذِّبْهُمُ اللّٰهُ بِاَيْدِيْكُمْ وَيُخْزِهِمْ وَيَنْصُرْكُمْ عَلَيْهِمْ وَيَشْفِ صُدُوْرَ قَوْمٍ مُّؤْمِنِيْنَۙ (التوبة : ٩)

qātilūhum
قَٰتِلُوهُمْ
Fight them
போரிடுங்கள் அவர்களிடம்
yuʿadhib'humu
يُعَذِّبْهُمُ
Allah will punish them
வேதனை செய்வான்/அவர்களை
l-lahu
ٱللَّهُ
Allah will punish them
அல்லாஹ்
bi-aydīkum
بِأَيْدِيكُمْ
by your hands
உங்கள் கரங்களால்
wayukh'zihim
وَيُخْزِهِمْ
and disgrace them
இன்னும் இழிவுபடுத்துவான்/அவர்களை
wayanṣur'kum
وَيَنصُرْكُمْ
and give you victory
இன்னும் உதவுவான்/உங்களுக்கு
ʿalayhim
عَلَيْهِمْ
over them
அவர்களுக்கு எதிராக
wayashfi
وَيَشْفِ
and will heal
இன்னும் குணப்படுத்துவான்
ṣudūra
صُدُورَ
(the) breasts
நெஞ்சங்களை
qawmin
قَوْمٍ
(of) a people
மக்களின்
mu'minīna
مُّؤْمِنِينَ
(who are) believers
நம்பிக்கை கொண்டவர்கள்

Transliteration:

Qaatiloohum yu'az zibhumul laahu bi aideekum wa yukhzihim wa yansurkum 'alaihim wa yashfi sudoora qawmim mu 'mineen (QS. at-Tawbah:14)

English Sahih International:

Fight them; Allah will punish them by your hands and will disgrace them and give you victory over them and satisfy the breasts [i.e., desires] of a believing people (QS. At-Tawbah, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள். உங்கள் கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனை கொடுத்து, அவர்களை இழிவுபடுத்தி, அவர்களை நீங்கள் வெற்றிபெற உங்களுக்கு உதவியும் புரிந்து, நம்பிக்கை கொண்ட மக்களின் உள்ளங்களுக்குத் திருப்தியுமளிப்பான். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௪)

Jan Trust Foundation

நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்; உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி (செய்து அவர்கள் மேல் வெற்றி கொள்ளச்) செய்வான். இன்னும் முஃமின்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களிடம் போரிடுங்கள். உங்கள் கரங்களால் அல்லாஹ் அவர்களை வேதனைசெய்வான், அவர்களை இழிவுபடுத்துவான், அவர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவுவான், நம்பிக்கை கொண்ட மக்களின் நெஞ்சங்க(ளில் உள்ள காயங்க)ளை குணப்படுத்துவான்.