Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௨௫

Qur'an Surah At-Tawbah Verse 125

ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَمَّا الَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا اِلٰى رِجْسِهِمْ وَمَاتُوْا وَهُمْ كٰفِرُوْنَ (التوبة : ٩)

wa-ammā
وَأَمَّا
But as for
ஆகவே
alladhīna
ٱلَّذِينَ
those
எவர்கள்
fī qulūbihim
فِى قُلُوبِهِم
in their hearts
அவர்களுடைய உள்ளங்களில்
maraḍun
مَّرَضٌ
(is) a disease
ஒரு நோய்
fazādathum
فَزَادَتْهُمْ
(it) increases them
அதிகப்படுத்தியது/ அவர்களுக்கு
rij'san
رِجْسًا
(in) evil
ஒரு அசுத்தத்தை
ilā rij'sihim
إِلَىٰ رِجْسِهِمْ
to their evil
அவர்களுடைய அசுத்தத்துடன்
wamātū
وَمَاتُوا۟
And they die
இன்னும் இறந்தனர்
wahum kāfirūna
وَهُمْ كَٰفِرُونَ
while they (are) disbelievers
நிராகரிப்பாளர்களாகவே

Transliteration:

Wa ammal lazeena fee quloobihim maradun fazaadat hum rijsan ilaa rijsihim wa maatoo wa hum kaafiroon (QS. at-Tawbah:125)

English Sahih International:

But as for those in whose hearts is disease, it has [only] increased them in evil [in addition] to their evil. And they will have died while they are disbelievers. (QS. At-Tawbah, Ayah ௧௨௫)

Abdul Hameed Baqavi:

ஆனால், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அவர்களுடைய (உள்ளங்களிலுள்ள) அசுத்தத்துடன் பின்னும் அசுத்தத்தையே (அது) அதிகரித்துவிட்டது! அவர்கள் நிராகரித்தவர்களாகவே இறந்தும் விட்டனர். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௨௫)

Jan Trust Foundation

ஆனால், எவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களுடைய (நெஞ்சங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அவர்களுக்கு அதிகப்படுத்தி விட்டது; அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே மரிப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அகவே, எவர்களுடைய உள்ளங்களில் ஒரு நோய் இருக்கிறதோ அவர்களுக்கு அவர்களுடைய அசுத்தத்துடன் ஒரு அசுத்தத்தையே (அது) அதிகப்படுத்தியது! அவர்களோ நிராகரிப்பாளர்களாகவே இறந்தனர்.