குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௨௪
Qur'an Surah At-Tawbah Verse 124
ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا مَآ اُنْزِلَتْ سُوْرَةٌ فَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ اَيُّكُمْ زَادَتْهُ هٰذِهٖٓ اِيْمَانًاۚ فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا فَزَادَتْهُمْ اِيْمَانًا وَّهُمْ يَسْتَبْشِرُوْنَ (التوبة : ٩)
- wa-idhā mā unzilat
- وَإِذَا مَآ أُنزِلَتْ
- And whenever And whenever is revealed
- இறக்கப்பட்டால்
- sūratun
- سُورَةٌ
- a Surah
- ஓர் அத்தியாயம்
- famin'hum
- فَمِنْهُم
- among them
- அவர்களில்
- man
- مَّن
- (are some) who
- எவர்
- yaqūlu
- يَقُولُ
- say
- கூறுவார்
- ayyukum
- أَيُّكُمْ
- "Which of you
- உங்களில் எவர்
- zādathu hādhihi
- زَادَتْهُ هَٰذِهِۦٓ
- (has) increased [it] (by) this
- அதிகப்படுத்தியது/அவருக்கு/இது
- īmānan
- إِيمَٰنًاۚ
- (in) faith?"
- நம்பிக்கை
- fa-ammā alladhīna
- فَأَمَّا ٱلَّذِينَ
- As for those who
- ஆகவே/எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- believe
- நம்பிக்கை கொண்டார்கள்
- fazādathum
- فَزَادَتْهُمْ
- then it has increased them
- அதிகப்படுத்தியது/ அவர்களுக்கு
- īmānan
- إِيمَٰنًا
- (in) faith
- நம்பிக்கையை
- wahum
- وَهُمْ
- and they
- அவர்களோ
- yastabshirūna
- يَسْتَبْشِرُونَ
- rejoice
- மகிழ்ச்சியடைகின்றனர்
Transliteration:
Wa izaa maaa unzilat Sooratun faminhum mai yaqoolu aiyukum zaadat hu haazihee eemaanaa; fa ammal lazeena aamanoo fazaadat hum eemaananw wa hum yastabshiroon(QS. at-Tawbah:124)
English Sahih International:
And whenever a Surah is revealed, there are among them [i.e., the hypocrites] those who say, "Which of you has this increased in faith?" As for those who believed, it has increased them in faith, while they are rejoicing. (QS. At-Tawbah, Ayah ௧௨௪)
Abdul Hameed Baqavi:
யாதொரு (புதிய) அத்தியாயம் அருளப்பட்டால் "உங்களில் யாருடைய நம்பிக்கையை இது அதிகப்படுத்தியது?" என்று கேட்கக் கூடியவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். மெய்யாகவே எவர்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை (இது) அதிகப்படுத்தியே விட்டது. இதனைப் பற்றி அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௨௪)
Jan Trust Foundation
ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், “இது உங்களில் யாருடைய ஈமானை (நம்பிக்கையை) அதிகப்படுத்தி விட்டது?” என்று கேட்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர்; யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை இது (மெய்யாகவே) அதிகப்படுத்திவிட்டது இன்னும் அவர்கள் (இது குறித்து) மகிழ்ச்சி அடைகிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஓர் (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால் “உங்களில் எவருக்கு இது நம்பிக்கையை அதிகப்படுத்தியது?” என்று கேட்பவர் அவர்களில் இருக்கின்றனர். ஆகவே, நம்பிக்கை கொண்டவர்களோ, அவர்களுக்கு (இது) நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அவர்களோ மகிழ்ச்சியடைகின்றனர்.