Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௨௨

Qur'an Surah At-Tawbah Verse 122

ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَمَا كَانَ الْمُؤْمِنُوْنَ لِيَنْفِرُوْا كَاۤفَّةًۗ فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَاۤىِٕفَةٌ لِّيَتَفَقَّهُوْا فِى الدِّيْنِ وَلِيُنْذِرُوْا قَوْمَهُمْ اِذَا رَجَعُوْٓا اِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُوْنَ ࣖ (التوبة : ٩)

wamā kāna
وَمَا كَانَ
And not is
சரியல்ல
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
(for) the believers
நம்பிக்கையாளர்கள்
liyanfirū
لِيَنفِرُوا۟
that they go forth
அவர்கள் புறப்படுவது
kāffatan
كَآفَّةًۚ
all together
அனைவருமே
falawlā nafara
فَلَوْلَا نَفَرَ
So if not go forth
புறப்பட்டிருக்க வேண்டாமா
min kulli
مِن كُلِّ
from every
இருந்து/ஒவ்வொரு
fir'qatin min'hum
فِرْقَةٍ مِّنْهُمْ
group among them
பிரிவு/அவர்களில்
ṭāifatun
طَآئِفَةٌ
a party
ஒரு கூட்டம்
liyatafaqqahū
لِّيَتَفَقَّهُوا۟
that they may obtain understanding
அவர்கள் ஞானம் பெறுவதற்காக
fī l-dīni
فِى ٱلدِّينِ
in the religion
மார்க்கத்தில்
waliyundhirū
وَلِيُنذِرُوا۟
and that they may warn
இன்னும் அவர்களை எச்சரிப்பதற்காக
qawmahum
قَوْمَهُمْ
their people
தங்கள் சமுதாயத்தை
idhā
إِذَا
when
போது
rajaʿū
رَجَعُوٓا۟
they return
திரும்பினார்கள்
ilayhim
إِلَيْهِمْ
to them
அவர்களிடம்
laʿallahum yaḥdharūna
لَعَلَّهُمْ يَحْذَرُونَ
so that they may beware
அவர்கள் எச்சரிக்கையாக

Transliteration:

Wa maa kaanal mu'minoona liyanfiroo kaaaffah; falaw laa nafara min kulli firqatim minhum taaa'ifatul liyatafaqqahoo fiddeeni wa liyunziroo qawmahum izaa raja'ooo ilaihim la'allahum yahzaroon (QS. at-Tawbah:122)

English Sahih International:

And it is not for the believers to go forth [to battle] all at once. For there should separate from every division of them a group [remaining] to obtain understanding in the religion and warn [i.e., advise] their people when they return to them that they might be cautious. (QS. At-Tawbah, Ayah ௧௨௨)

Abdul Hameed Baqavi:

(உங்கள் எதிரிகள் உங்களை அழித்துவிடும் சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பதனால்) நம்பிக்கையாளர்கள் அனைவருமே (தங்கள் ஊரைவிட்டு) வெளிப்பட்டு விடுவது எப்பொழுதுமே தகாது. மார்க்க விஷயங்களை அறிந்துகொள்ள(க் கருதினாலும் அதற்காக) உங்களில் ஒவ்வொரு கூட்டத்தில் இருந்தும் சிலர் மாத்திரம் புறப்பட்டால் போதாதா? (அவர்கள் மார்க்க விஷயத்தைக் கற்று) தங்கள் மக்களிடம் திரும்பி வந்து அவர்களுக்கு(த் தாங்கள் கற்றதைக் கூறி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வார்கள். (ஊரில் இருப்பவர்கள்) எச்சரிக்கையாக இருந்து (தங்கள் மக்களைக் காத்துக்) கொள்வார்கள். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௨௨)

Jan Trust Foundation

முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்று கொள்வதற்காகவும், (வெளியேறி சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்கள் அனைவருமே (நபியை தனியாக விட்டுவிட்டு ஊரிலிருந்து) புறப்படுவது சரியல்ல. மார்க்கத்தில் அவர்கள் ஞானம் பெறுவதற்காகவும் தங்கள் சமுதாயத்திடம் திரும்பும்போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் உங்களில் ஒவ்வொரு பிரிவினரிலிருந்தும் ஒரு கூட்டம் (மட்டும் போருக்கு) புறப்பட்டிருக்க வேண்டாமா? (ஊரில் தங்கிய) அவர்கள் (இதன் மூலம்) எச்சரிக்கையாக இருப்பார்கள்.