Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௨௧

Qur'an Surah At-Tawbah Verse 121

ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا يُنْفِقُوْنَ نَفَقَةً صَغِيْرَةً وَّلَا كَبِيْرَةً وَّلَا يَقْطَعُوْنَ وَادِيًا اِلَّا كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ (التوبة : ٩)

walā yunfiqūna
وَلَا يُنفِقُونَ
And not they spend
தர்மம் புரிய மாட்டார்கள்
nafaqatan
نَفَقَةً
any spending
ஒரு தர்மத்தை
ṣaghīratan
صَغِيرَةً
small
சிறியது
walā kabīratan
وَلَا كَبِيرَةً
and not big
இன்னும் பெரியது
walā yaqṭaʿūna
وَلَا يَقْطَعُونَ
and not they cross
அவர்கள் கடக்க மாட்டார்கள்
wādiyan
وَادِيًا
a valley
ஒரு பள்ளத்தாக்கை
illā kutiba
إِلَّا كُتِبَ
but is recorded
தவிர/பதியப்பட்டது
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
liyajziyahumu
لِيَجْزِيَهُمُ
that Allah may reward them
கூலி கொடுப்பதற்காக/அவர்களுக்கு
l-lahu
ٱللَّهُ
that Allah may reward them
அல்லாஹ்
aḥsana
أَحْسَنَ
the best
மிக அழகியதை
مَا
(of) what
எதை
kānū
كَانُوا۟
they used (to)
இருந்தனர்
yaʿmalūna
يَعْمَلُونَ
do
செய்கிறார்கள்

Transliteration:

Wa laa yunfiqoona nafa qatan sagheeratanw wa laa kabeeratanw wa laa yaqta'oona waadiyan illaa kutiba lahum liyajziyahumul laahu ahsana maa kaanoo ya'maloon (QS. at-Tawbah:121)

English Sahih International:

Nor do they spend an expenditure, small or large, or cross a valley but that it is registered for them that Allah may reward them for the best of what they were doing. (QS. At-Tawbah, Ayah ௧௨௧)

Abdul Hameed Baqavi:

அன்றி, இவர்கள் சிறிதோ பெரிதோ (அல்லாஹ்வுடைய பாதையில்) எதைச் செலவு செய்தபோதிலும் (அவ்வாறே அல்லாஹ்வுடைய பாதையில்) எந்த பூமியைக் கடந்தபோதிலும் அவர்களுக்காக அது பதிவு செய்யப்படுகிறது. அவர்கள் செய்த இவைகளைவிட மிக அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கின்றான். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௨௧)

Jan Trust Foundation

இவர்கள் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ, (எந்த அளவு) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும், அல்லது (அல்லாஹ்வுக்காக) எந்தப் பள்ளத்தாக்கை கடந்து சென்றாலும், அது அவர்களுக்காக (நற்கருமங்களாய்) பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை; அவர்கள் செய்த காரியங்களுக்கு, மிகவும் அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(போரில்) ஒரு சிறிய, பெரிய தர்மத்தை அவர்கள் தர்மம் புரியமாட்டார்கள்; ஒரு பள்ளத்தாக்கை அவர்கள் கடக்க மாட்டார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக அழகியதை அல்லாஹ் அவர்களுக்குக் கூலி கொடுப்பதற்காக அவர்களுக்கு (நன்மையாக) அது பதியப்பட்டே தவிர.