Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௨௦

Qur'an Surah At-Tawbah Verse 120

ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا كَانَ لِاَهْلِ الْمَدِيْنَةِ وَمَنْ حَوْلَهُمْ مِّنَ الْاَعْرَابِ اَنْ يَّتَخَلَّفُوْا عَنْ رَّسُوْلِ اللّٰهِ وَلَا يَرْغَبُوْا بِاَنْفُسِهِمْ عَنْ نَّفْسِهٖۗ ذٰلِكَ بِاَنَّهُمْ لَا يُصِيْبُهُمْ ظَمَاٌ وَّلَا نَصَبٌ وَّلَا مَخْمَصَةٌ فِيْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَطَـُٔوْنَ مَوْطِئًا يَّغِيْظُ الْكُفَّارَ وَلَا يَنَالُوْنَ مِنْ عَدُوٍّ نَّيْلًا اِلَّا كُتِبَ لَهُمْ بِهٖ عَمَلٌ صَالِحٌۗ اِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ (التوبة : ٩)

mā kāna
مَا كَانَ
Not it was
தகுந்ததல்ல
li-ahli l-madīnati
لِأَهْلِ ٱلْمَدِينَةِ
(for) the people of the Madinah
மதீனாவாசிகளுக்கு
waman
وَمَنْ
and who
இன்னும் எவர்
ḥawlahum
حَوْلَهُم
were around them
அவர்களைச் சுற்றி
mina l-aʿrābi
مِّنَ ٱلْأَعْرَابِ
of the bedouins
கிராம அரபிகளில்
an yatakhallafū
أَن يَتَخَلَّفُوا۟
that they remain behind
அவர்கள் பின்தங்குவது
ʿan rasūli
عَن رَّسُولِ
after the Messenger
தூதரை விட்டு
l-lahi
ٱللَّهِ
of Allah
அல்லாஹ்வின்
walā yarghabū
وَلَا يَرْغَبُوا۟
and not they prefer
இன்னும் அவர்கள் நேசிப்பது (தகுந்தது) இல்லை
bi-anfusihim
بِأَنفُسِهِمْ
their lives
தங்கள் உயிர்களை
ʿan nafsihi
عَن نَّفْسِهِۦۚ
to his life
அவருடைய உயிரைவிட
dhālika bi-annahum
ذَٰلِكَ بِأَنَّهُمْ
That is because [they]
அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
lā yuṣībuhum
لَا يُصِيبُهُمْ
(does) not afflict them
அடையாது/அவர்களுக்கு
ẓama-on
ظَمَأٌ
thirst
ஒரு தாகம்
walā naṣabun
وَلَا نَصَبٌ
and not fatigue
ஒரு களைப்பு
walā makhmaṣatun
وَلَا مَخْمَصَةٌ
and not hunger
ஒரு பசி
fī sabīli
فِى سَبِيلِ
in (the) way
பாதையில்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
walā yaṭaūna
وَلَا يَطَـُٔونَ
and not they step
இன்னும் மிதிக்கமாட்டார்கள்
mawṭi-an
مَوْطِئًا
any step
ஓர் இடம்
yaghīẓu
يَغِيظُ
that angers
கோபமூட்டும்
l-kufāra
ٱلْكُفَّارَ
the disbelievers
நிராகரிப்பாளர்களை
walā yanālūna
وَلَا يَنَالُونَ
and not they inflict
இன்னும் அடையமாட்டார்கள்
min
مِنْ
on
இருந்து
ʿaduwwin
عَدُوٍّ
an enemy
ஓர் எதிரி
naylan
نَّيْلًا
an infliction
ஒரு துன்பத்தை
illā
إِلَّا
except
தவிர
kutiba
كُتِبَ
is recorded
எழுதப்பட்டது
lahum
لَهُم
for them
அவர்களுக்கு
bihi
بِهِۦ
in it
இவற்றுக்குப் பதிலாக
ʿamalun
عَمَلٌ
(as) a deed
செயல்
ṣāliḥun
صَٰلِحٌۚ
righteous
நன்மையானது
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
lā yuḍīʿu
لَا يُضِيعُ
(does) not allow to be lost
வீணாக்க மாட்டான்
ajra
أَجْرَ
the reward
கூலியை
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
(of) the good-doers
நல்லறம் புரிவோரின்

Transliteration:

Maa kaana li ahlil Madeenati wa man hawlahum minal A'raabi ai yatakhallafoo 'ar-Rasoolil laahi wa laa yarghaboo bi anfusihim 'an nafsih; zaalika bi annahum laa yuseebuhum zama unw wa laa nasabunw wa laa makhmasatun fee sabeelil laahi wa laa yata'oona mawti'ai yagheezul kuffaara wa laa yanaaloona min 'aduwwin nailan illaa kutiba lahum bihee 'amalun saalih; innal laaha laa yudee'u ajral muhsineen (QS. at-Tawbah:120)

English Sahih International:

It was not [proper] for the people of Madinah and those surrounding them of the bedouins that they remain behind after [the departure of] the Messenger of Allah or that they prefer themselves over his self. That is because they are not afflicted by thirst or fatigue or hunger in the cause of Allah, nor do they tread on any ground that enrages the disbelievers, nor do they inflict upon an enemy any infliction but that it is registered for them as a righteous deed. Indeed, Allah does not allow to be lost the reward of the doers of good. (QS. At-Tawbah, Ayah ௧௨௦)

Abdul Hameed Baqavi:

மதீனாவாசிகளாயினும் சரி அல்லது அவர்களைச் சூழ்ந்து வசிக்கும் கிராமத்து அரபிகளாயினும் சரி, அவர்கள் அல்லாஹ்வுடைய தூதரை விட்டுப் (பிரிந்து) பின் தங்குவதும்; (அல்லாஹ்வுடைய) தூதரின் உயிரைவிட தங்களின் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுமானதல்ல. ஏனென்றால், அல்லாஹ் வுடைய பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், கஷ்டம், பசி (ஆகியவைகளும்) நிராகரிப்பவர்களைக் கோபமூட்டும்படியான இடத்தில் கால் வைத்து, அதனால் எதிரியிடமிருந்து யாதொரு துன்பத்தையடைதல் ஆகிய இவையனைத்தும் அவர்களுடைய நன்மைகளாகவே பதிவு செய்யப்படுகின்றன. நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) நன்மை செய்பவர்களின் (அழகிய பண்பாளர்களின்) கூலியை வீணாக்கி விடுவதில்லை. (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௨௦)

Jan Trust Foundation

மதீனா வாசிகளானாலும் சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும் கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப்பிரிந்து பின் தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுதியுடையதல்ல; ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி, காஃபிர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்கருமங்களாகவே பதிவு செய்யப்படுகின்றன - நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மதீனாவாசிகள் இன்னும் அவர்களைச் சுற்றி உள்ள கிராம அரபிகளுக்கு - அவர்கள் அல்லாஹ்வின் தூதரை விட்டு பின் தங்குவதும்; அவருடைய உயிரைவிட தங்கள் உயிர்களை நேசிப்பதும்- தகுந்ததல்ல. அதற்குக் காரணம், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஓரு தாகமோ, ஒரு களைப்போ, ஓரு பசியோ அடையாது; இன்னும் நிராகரிப்பாளர்களைக் கோபமூட்டுகிற ஓர் இடத்தை இவர்கள் மிதிக்க மாட்டார்கள்; எதிரியிடமிருந்து ஒரு துன்பத்தை இவர்கள் அடையமாட்டார்கள் இவற்றிற்கு பதிலாக அவர்களுக்கு நன்மையான செயல்(கள்) எழுதப்பட்டே தவிர. நிச்சயமாக அல்லாஹ் நல்லறம்புரிவோரின் கூலியை வீணாக்க மாட்டான்.