Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௧௫

Qur'an Surah At-Tawbah Verse 115

ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا كَانَ اللّٰهُ لِيُضِلَّ قَوْمًاۢ بَعْدَ اِذْ هَدٰىهُمْ حَتّٰى يُبَيِّنَ لَهُمْ مَّا يَتَّقُوْنَۗ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ (التوبة : ٩)

wamā kāna
وَمَا كَانَ
And not is
இருக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
(for) Allah
அல்லாஹ்
liyuḍilla
لِيُضِلَّ
that He lets go astray
வழிகெடுப்பவனாக
qawman
قَوْمًۢا
a people
ஒரு கூட்டத்தை
baʿda
بَعْدَ
after
பின்னர்
idh hadāhum
إِذْ هَدَىٰهُمْ
[when] He has guided them
அவன்/நேர்வழிப்படுத்திய/அவர்களை
ḥattā
حَتَّىٰ
until
வரை
yubayyina
يُبَيِّنَ
He makes clear
விவரிப்பான்
lahum
لَهُم
to them
அவர்களுக்கு
mā yattaqūna
مَّا يَتَّقُونَۚ
what they should fear
எவற்றை/அவர்கள் தவிர்ந்து கொள்வார்கள்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
(of) every thing
எல்லாவற்றையும்
ʿalīmun
عَلِيمٌ
(is) All-Knower
நன்கறிந்தவன்

Transliteration:

Wa maa kaanal laahu liyudilla qawmam ba'da iz hadaahum hatta yubaiyina lahum maa yattaqoon; innal laaha bikulli shai'in 'Aleem (QS. at-Tawbah:115)

English Sahih International:

And Allah would not let a people stray after He has guided them until He makes clear to them what they should avoid. Indeed, Allah is Knowing of all things. (QS. At-Tawbah, Ayah ௧௧௫)

Abdul Hameed Baqavi:

ஒரு கூட்டத்தினரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்திய பின்னர், அவர்கள் தவறிழைக்கும்படி அவன் (விட்டு) விடமாட்டான். அவர்கள் விலகிக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவை என்பதை அவன் அவர்களுக்கு விபரமாக அறிவித்து வருவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் மிக அறிந்தவனாக இருக்கின்றான். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௧௫)

Jan Trust Foundation

எந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிந்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒரு கூட்டத்தை அவர்களை அல்லாஹ் நேர்வழிப்படுத்திய பின்னர் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவற்றை அவன் அவர்களுக்கு விவரிக்கும் வரை அவர்களை அவன் வழிகெடுப்பவனாக ஆகியிருக்கவில்லை.நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.