Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௧௩

Qur'an Surah At-Tawbah Verse 113

ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِيْنَ اٰمَنُوْٓا اَنْ يَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِيْنَ وَلَوْ كَانُوْٓا اُولِيْ قُرْبٰى مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِيْمِ (التوبة : ٩)

mā kāna
مَا كَانَ
Not (it) is
தகுந்ததல்ல
lilnnabiyyi
لِلنَّبِىِّ
for the Prophet
நபிக்கு
wa-alladhīna āmanū
وَٱلَّذِينَ ءَامَنُوٓا۟
and those who believe
இன்னும் எவர்கள்/நம்பிக்கை கொண்டனர்
an yastaghfirū
أَن يَسْتَغْفِرُوا۟
that they ask forgiveness
அவர்கள் மன்னிப்புக் கோருவது
lil'mush'rikīna
لِلْمُشْرِكِينَ
for the polytheists
இணைவைப்பவர்களுக்கு
walaw kānū
وَلَوْ كَانُوٓا۟
even though they be
அவர்கள் இருந்தாலும்
ulī qur'bā
أُو۟لِى قُرْبَىٰ
near of kin near of kin
உறவினர்களாக
min baʿdi
مِنۢ بَعْدِ
after after
பின்னர்
mā tabayyana
مَا تَبَيَّنَ
[what] has become clear
தெளிவாகிய
lahum
لَهُمْ
to them
தங்களுக்கு
annahum
أَنَّهُمْ
that they
நிச்சயமாக அவர்கள்
aṣḥābu
أَصْحَٰبُ
(are the) companions
வாசிகள்
l-jaḥīmi
ٱلْجَحِيمِ
(of) the Hellfire
நரகம்

Transliteration:

Maa kaana lin nabiyyi wallazeena aamanooo ai yastaghfiroo lilmushrikeena wa law kaanoo ulee qurbaa mim ba'di maa tabiyana lahum annahum Ashaabul jaheem (QS. at-Tawbah:113)

English Sahih International:

It is not for the Prophet and those who have believed to ask forgiveness for the polytheists, even if they were relatives, after it has become clear to them that they are companions of Hellfire. (QS. At-Tawbah, Ayah ௧௧௩)

Abdul Hameed Baqavi:

இணைவைத்து வணங்குபர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதல்ல; அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய பந்துக்களாகயிருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்கு மன்னிப்புக் கோரலாம்?) (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௧௩)

Jan Trust Foundation

முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக (இணைவைப்பவர்கள்) அவர்கள் நரகவாசிகள் என்று தங்களுக்குத் தெளிவாகிய பின்னர், அவர்கள் உறவினர்களாக இருந்தாலும் இணைவைப்பவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் தகுந்ததல்ல.