Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௧

Qur'an Surah At-Tawbah Verse 11

ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِنْ تَابُوْا وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ فَاِخْوَانُكُمْ فِى الدِّيْنِ ۗوَنُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ (التوبة : ٩)

fa-in tābū
فَإِن تَابُوا۟
But if they repent
அவர்கள் திருந்தினால்
wa-aqāmū
وَأَقَامُوا۟
and establish
இன்னும் நிலைநிறுத்தினால்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
the prayer
தொழுகையை
waātawū
وَءَاتَوُا۟
and give
இன்னும் கொடுத்தால்
l-zakata
ٱلزَّكَوٰةَ
the zakah
ஸகாத்தை
fa-ikh'wānukum
فَإِخْوَٰنُكُمْ
then (they are) your brothers
உங்கள் சகோதரர்கள்
fī l-dīni
فِى ٱلدِّينِۗ
in [the] religion
மார்க்கத்தில்
wanufaṣṣilu
وَنُفَصِّلُ
And We explain in detail
விவரிக்கிறோம்
l-āyāti
ٱلْءَايَٰتِ
the Verses
வசனங்களை
liqawmin
لِقَوْمٍ
for a people
மக்களுக்கு
yaʿlamūna
يَعْلَمُونَ
(who) know
அறிகின்றார்கள்

Transliteration:

Fa in taaboo wa aqaamus Salaata wa aatawuz Zakaata fa ikhwaanukum fid deen; wa nufassilul Aayaati liqawminy ya'lamoon (QS. at-Tawbah:11)

English Sahih International:

But if they repent, establish prayer, and give Zakah, then they are your brothers in religion; and We detail the verses for a people who know. (QS. At-Tawbah, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

அவர்கள் (தங்கள் நிராகரிப்பிலிருந்து விலகி அல்லாஹ்விடம்) மன்னிப்புக்கோரி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் (அவர்கள்) உங்கள் மார்க்க சகோதரர்களே. அறிவுள்ள மக்களுக்கு (நம்முடைய) வசனங்களை (இவ்வாறு) விவரிக்கின்றோம். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௧)

Jan Trust Foundation

ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைபிடித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் திருந்தி (அல்லாஹ்வின் பக்கம் திரும்பி மன்னிப்புக் கோரி) தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தையும் கொடுத்தால் (அவர்கள்) மார்க்கத்தில் உங்கள் சகோதரர்கள் ஆவர். அறிகின்ற மக்களுக்கு (நம்) வசனங்களை விவரிக்கிறோம்.