Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௦௯

Qur'an Surah At-Tawbah Verse 109

ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௦௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَمَنْ اَسَّسَ بُنْيَانَهٗ عَلٰى تَقْوٰى مِنَ اللّٰهِ وَرِضْوَانٍ خَيْرٌ اَمْ مَّنْ اَسَّسَ بُنْيَانَهٗ عَلٰى شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهٖ فِيْ نَارِ جَهَنَّمَۗ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ (التوبة : ٩)

afaman
أَفَمَنْ
Then is (one) who
எவர்?
assasa
أَسَّسَ
founded
அடித்தளமிட்டார்
bun'yānahu
بُنْيَٰنَهُۥ
his building
தான் கட்டுவதை
ʿalā
عَلَىٰ
on
மீது
taqwā
تَقْوَىٰ
righteousness
அச்சம்
mina l-lahi
مِنَ ٱللَّهِ
from Allah
அல்லாஹ்வின்
wariḍ'wānin
وَرِضْوَٰنٍ
and (His) pleasure
இன்னும் பொருத்தம்
khayrun
خَيْرٌ
better
சிறந்தது
am
أَم
or
அல்லது
man
مَّنْ
(one) who
எவர்
assasa
أَسَّسَ
founded
அடித்தளமிட்டார்
bun'yānahu
بُنْيَٰنَهُۥ
his building
தான் கட்டுவதை
ʿalā
عَلَىٰ
on
மீது
shafā jurufin
شَفَا جُرُفٍ
edge (of) a cliff
ஓரம்/ஓடை
hārin
هَارٍ
(about to) collapse
சரிந்து விடக்கூடியது
fa-in'hāra bihi
فَٱنْهَارَ بِهِۦ
so it collapsed with him
அது சரிந்து விட்டது/அவனுடன்
fī nāri jahannama
فِى نَارِ جَهَنَّمَۗ
in (the) Fire (of) Hell
நெருப்பில்/நரகம்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
(does) not guide
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
the wrongdoing people
மக்களை
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the wrongdoing people
அநியாயக்காரர்கள்

Transliteration:

Afaman assasa bunyaa nahoo 'alaa taqwaa minal laahi wa ridwaanin khairun am man assasa bunyaanahoo 'alaa shafaa jurufin haarin fanhaara bihee fee Naari Jahannnam; wallaahu laa yahdil qawmaz zaalimeen (QS. at-Tawbah:109)

English Sahih International:

Then is one who laid the foundation of his building on righteousness [with fear] from Allah and [seeking] His approval better or one who laid the foundation of his building on the edge of a bank about to collapse, so it collapsed with him into the fire of Hell? And Allah does not guide the wrongdoing people. (QS. At-Tawbah, Ayah ௧௦௯)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி, பரிசுத்த(மான எண்ண)த்தின் மீதே பள்ளியின் அஸ்திவாரத்தை அமைத்தவன் மேலா? அல்லது (சரிந்து விடக்கூடியவாறு) ஓடையின் அருகில் அதுவும் சரிந்து அவனுடன் நரக நெருப்பில் விழக்கூடியவாறு பள்ளியின் அஸ்திவாரத்தை அமைத்தவன் மேலா? (இத்தகைய) அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை. (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௦௯)

Jan Trust Foundation

யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் அச்சம் இன்னும் (அவனது) பொருத்தத்தின் மீது தான் கட்டுவதை அடித்தளமிட்டவர் சிறந்தவரா? அல்லது தான் கட்டுவதை சரிந்து விடக்கூடிய ஓடையின் ஓரத்தில் அடித்தளமிட்டு, அது அவனுடன் நரக நெருப்பில் சரிந்துவிட்டதே அவ(ர் சிறந்தவ)ரா?. அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்.