Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௦௭

Qur'an Surah At-Tawbah Verse 107

ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௦௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ اتَّخَذُوْا مَسْجِدًا ضِرَارًا وَّكُفْرًا وَّتَفْرِيْقًاۢ بَيْنَ الْمُؤْمِنِيْنَ وَاِرْصَادًا لِّمَنْ حَارَبَ اللّٰهَ وَرَسُوْلَهٗ مِنْ قَبْلُ ۗوَلَيَحْلِفُنَّ اِنْ اَرَدْنَآ اِلَّا الْحُسْنٰىۗ وَاللّٰهُ يَشْهَدُ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ (التوبة : ٩)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
இன்னும் எவர்கள்
ittakhadhū
ٱتَّخَذُوا۟
take
எடுத்துக் கொண்டனர்
masjidan
مَسْجِدًا
a masjid
ஒரு மஸ்ஜிதை
ḍirāran
ضِرَارًا
(for causing) harm
கெடுதல் செய்வதற்காக
wakuf'ran
وَكُفْرًا
and (for) disbelief
இன்னும் நிராகரிப்பிற்காக
watafrīqan
وَتَفْرِيقًۢا
and (for) division
இன்னும் பிரிப்பதற்காக
bayna
بَيْنَ
among
மத்தியில்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
the believers
நம்பிக்கையாளர்கள்
wa-ir'ṣādan
وَإِرْصَادًا
and (as) a station
இன்னும் எதிர்பார்ப்பது
liman
لِّمَنْ
for whoever
எவர்களுக்கான
ḥāraba
حَارَبَ
warred
போரிட்டார்(கள்)
l-laha
ٱللَّهَ
(against) Allah
அல்லாஹ்விடம்
warasūlahu
وَرَسُولَهُۥ
and His Messenger
இன்னும் அவனுடைய தூதர்
min qablu
مِن قَبْلُۚ
before before
முன்னர்
walayaḥlifunna
وَلَيَحْلِفُنَّ
And surely they will swear
இன்னும் நிச்சயமாக சத்தியம் செய்கின்றனர்
in aradnā
إِنْ أَرَدْنَآ
"Not we wish
நாங்கள் நாடவில்லை
illā
إِلَّا
except
தவிர
l-ḥus'nā
ٱلْحُسْنَىٰۖ
the good"
நன்மையை
wal-lahu
وَٱللَّهُ
But Allah
அல்லாஹ்
yashhadu
يَشْهَدُ
bears witness
சாட்சி கூறுகிறான்
innahum
إِنَّهُمْ
indeed, they
நிச்சயமாக அவர்கள்
lakādhibūna
لَكَٰذِبُونَ
(are) surely liars
பொய்யர்கள்தான்

Transliteration:

Wallazeenat takhazoo masjidan diraaranw wa kufranw wa tafreeqam bainal mu'mineena wa irsaadal liman haarabal laaha wa Rasoolahoo min qabl; wa la yahlifunna in aradnaaa illal husnaa wallaahu yash hadu innahum lakaaziboon (QS. at-Tawbah:107)

English Sahih International:

And [there are] those [hypocrites] who took for themselves a mosque for causing harm and disbelief and division among the believers and as a station for whoever had warred against Allah and His Messenger before. And they will surely swear, "We intended only the best." And Allah testifies that indeed they are liars. (QS. At-Tawbah, Ayah ௧௦௭)

Abdul Hameed Baqavi:

எவர்கள் (தங்கள் உள்ளங்களிலுள்ள) நிராகரிப்பின் காரணமாக, நம்பிக்கையாளர்களுக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணி தீங்கு இழைப்பதற்காக முன்னர் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் புரிந்தவர்களுக்குப் பதுங்குமிடமாக இருப்பதற்கு ஒரு பள்ளியைக் கட்டி இருக்கின்றார்களோ அவர்கள்; (தங்கள் குற்றத்தை மறைத்துவிடக் கருதி) "நிச்சயமாக நாங்கள் நன்மையையன்றி (தீமையைக்) கருதவில்லை" என்று சத்தியம் செய்கின்றனர். ஆனால் அல்லாஹ்வோ நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று சாட்சி கூறுகின்றான். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௦௭)

Jan Trust Foundation

இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்| “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கெடுதல் செய்வதற்காகவும் நிராகரிப்பிற்காகவும் நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் பிரிப்பதற்காகவும் முன்னர் அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரிடமும் போரிட்டவர்(கள் வந்து தங்குவதற்காக அவர்)களை எதிர்பார்த்தும் ஒரு மஸ்ஜிதை எடுத்துக்கொண்டவர்களும் (அவர்களில் உள்ளனர்). “நாங்கள் நன்மையைத் தவிர (வேறு எதையும்) நாடவில்லை”என்று நிச்சயமாக சத்தியம் செய்கின்றனர். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.