Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௦௩

Qur'an Surah At-Tawbah Verse 103

ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௦௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيْهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْۗ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْۗ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ (التوبة : ٩)

khudh min
خُذْ مِنْ
Take from
எடுப்பீராக/இருந்து
amwālihim
أَمْوَٰلِهِمْ
their wealth
செல்வங்கள்/அவர்களுடைய
ṣadaqatan
صَدَقَةً
a charity
தர்மத்தை
tuṭahhiruhum
تُطَهِّرُهُمْ
purifying them
நீர் சுத்தப்படுத்துவீர் அவர்களை
watuzakkīhim bihā
وَتُزَكِّيهِم بِهَا
and cause them increase by it
இன்னும் உயர்த்துவீர்/அவர்களை/அதன் மூலம்
waṣalli
وَصَلِّ
and bless
இன்னும் பிரார்த்திப்பீராக
ʿalayhim
عَلَيْهِمْۖ
[upon] them
அவர்களுக்கு
inna ṣalataka
إِنَّ صَلَوٰتَكَ
Indeed your blessings
நிச்சயமாக உம் பிரார்த்தனை
sakanun
سَكَنٌ
(are a) reassurance
நிம்மதி தரக்கூடியது
lahum
لَّهُمْۗ
for them
அவர்களுக்கு
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
samīʿun
سَمِيعٌ
(is) All-Hearer
நன்கு செவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
All-Knower
நன்கறிந்தவன்

Transliteration:

Khuz min amwaalihim sadaqtan tutahhiruhum wa tuzakkeehim bihaa wa salli 'alaihim inna salaataka sakanul lahum; wallaahu Samee'un 'Aleem (QS. at-Tawbah:103)

English Sahih International:

Take, [O Muhammad], from their wealth a charity by which you purify them and cause them increase, and invoke [Allah's blessings] upon them. Indeed, your invocations are reassurance for them. And Allah is Hearing and Knowing. (QS. At-Tawbah, Ayah ௧௦௩)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்கள் தங்கள் குற்றத்திற்குப் பரிகாரமாகக் கொண்டு வந்திருக்கும்) அவர்களுடைய பொருள்களிலிருந்து தானத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு அவர்களை (உள்ளும் புறமும்) பரிசுத்தமாக்கி வைத்து (பாக்கியவான்களாகும்படி) அவர்களுக்காக (துஆ) பிரார்த்தனை செய்யுங்கள். உங்களுடைய (துஆ) பிரார்த்தனை நிச்சயமாக அவர்களுக்கு ஆறுதலளிக்கும். அல்லாஹ் செவியுறுபவனும் மிக அறிபவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௦௩)

Jan Trust Foundation

(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை எடுப்பீராக. அதன் மூலம் அவர்களை நீர் சுத்தப்படுத்துவீர்; (உயர் பண்புகளுக்கு) அவர்களை உயர்த்துவீர். அவர்களுக்கு பிரார்த்திப்பீராக. நிச்சயமாக உம் பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதி தரக்கூடியதாகும். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.