Skip to content

ஸூரா ஸூரத்துத் தவ்பா - Page: 8

At-Tawbah

(at-Tawbah)

௭௧

وَالْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بَعْضُهُمْ اَوْلِيَاۤءُ بَعْضٍۘ يَأْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَيُطِيْعُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ۗاُولٰۤىِٕكَ سَيَرْحَمُهُمُ اللّٰهُ ۗاِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ ٧١

wal-mu'minūna
وَٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கை கொண்ட ஆண்கள்
wal-mu'minātu
وَٱلْمُؤْمِنَٰتُ
இன்னும் நம்பிக்கை கொண்ட பெண்கள்
baʿḍuhum
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
awliyāu
أَوْلِيَآءُ
பொறுப்பாளர்கள்
baʿḍin
بَعْضٍۚ
சிலருக்கு
yamurūna
يَأْمُرُونَ
ஏவுகின்றனர்
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِ
நன்மையை
wayanhawna
وَيَنْهَوْنَ
இன்னும் தடுக்கின்றனர்
ʿani l-munkari
عَنِ ٱلْمُنكَرِ
தீமையைவிட்டு
wayuqīmūna
وَيُقِيمُونَ
இன்னும் நிலை நிறுத்துகின்றனர்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
wayu'tūna
وَيُؤْتُونَ
இன்னும் கொடுக்கின்றனர்
l-zakata
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
wayuṭīʿūna
وَيُطِيعُونَ
இன்னும் கீழ்ப்படிகின்றனர்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
warasūlahu
وَرَسُولَهُۥٓۚ
இன்னும் அவனுடைய தூதருக்கு
ulāika sayarḥamuhumu
أُو۟لَٰٓئِكَ سَيَرْحَمُهُمُ
அவர்கள்/இவர்களுக்கு கருணை புரிவான்
l-lahu
ٱللَّهُۗ
அல்லாஹ்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
மிகைத்தவன்
ḥakīmun
حَكِيمٌ
ஞானவான்
நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும் (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள், (ஒருவர் மற்றவரை) நன்மை செய்யும்படித் தூண்டியும், பாவம் செய்யாது தடுத்தும், தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்து கொடுத்தும் வருவார்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடப்பார்கள். இத்தகையவர்களுக்கு அதிசீக்கிரத்தில் அல்லாஹ் அருள்புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௭௧)
Tafseer
௭௨

وَعَدَ اللّٰهُ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا وَمَسٰكِنَ طَيِّبَةً فِيْ جَنّٰتِ عَدْنٍ ۗوَرِضْوَانٌ مِّنَ اللّٰهِ اَكْبَرُ ۗذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ ࣖ ٧٢

waʿada
وَعَدَ
வாக்களித்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு
wal-mu'mināti
وَٱلْمُؤْمِنَٰتِ
நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு
jannātin
جَنَّٰتٍ
சொர்க்கங்களை
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَا
அவற்றில்
wamasākina
وَمَسَٰكِنَ
இன்னும் தங்குமிடங்கள்
ṭayyibatan
طَيِّبَةً
நல்லது
fī jannāti
فِى جَنَّٰتِ
சொர்க்கங்களில்
ʿadnin
عَدْنٍۚ
நிலையான
wariḍ'wānun
وَرِضْوَٰنٌ
இன்னும் பொருத்தம்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
akbaru
أَكْبَرُۚ
மிகப் பெரியது
dhālika huwa
ذَٰلِكَ هُوَ
இதுதான்
l-fawzu
ٱلْفَوْزُ
வெற்றி
l-ʿaẓīmu
ٱلْعَظِيمُ
மகத்தானது
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்திருக்கிறான். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அவற்றிலேயே (என்றென்றும்) தங்கியும் விடுவார்கள். (அந்த) நிரந்தரமான சுவனபதிகளில் நல்ல (அழகிய உயர்ந்த) மாளிகைகளையும் (வாக்களித்திருக்கின்றான். அவை அங்கு அவர்களுக்குக் கிடைக்கும்.) ஆனால் (இவை அனைத்தையும் விட) அல்லாஹ்வின் திருப்பாருத்தம் மிகப் பெரியது. (அதுவும் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும். அனைத்தையும் விட) இது மகத்தான பெரும் பாக்கியமாகும். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௭௨)
Tafseer
௭௩

يٰٓاَيُّهَا النَّبِيُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنٰفِقِيْنَ وَاغْلُظْ عَلَيْهِمْ ۗوَمَأْوٰىهُمْ جَهَنَّمُ وَبِئْسَ الْمَصِيْرُ ٧٣

yāayyuhā l-nabiyu
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
jāhidi
جَٰهِدِ
போரிடுவீராக
l-kufāra
ٱلْكُفَّارَ
நிராகரிப்பவர்களிடம்
wal-munāfiqīna
وَٱلْمُنَٰفِقِينَ
இன்னும் நயவஞ்சகர்களிடம்
wa-ugh'luẓ
وَٱغْلُظْ
கண்டிப்பீராக
ʿalayhim
عَلَيْهِمْۚ
அவர்களை
wamawāhum
وَمَأْوَىٰهُمْ
அவர்களுடைய தங்குமிடம்
jahannamu
جَهَنَّمُۖ
நரகம்தான்
wabi'sa
وَبِئْسَ
கெட்டுவிட்டது
l-maṣīru
ٱلْمَصِيرُ
மீளுமிடத்தால் அது
நபியே! நிராகரிப்பவர்களுடனும் நயவஞ்சகர்களுடனும் நீங்கள் போர் செய்யுங்கள். அவர்களை (தாட்சண்யமின்றி) கண்டிப்பாக நடத்துங்கள். அவர்கள் தங்குமிடம் நரகம்தான். (அது) தங்குமிடங்களில் மிகக்கெட்டது. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௭௩)
Tafseer
௭௪

يَحْلِفُوْنَ بِاللّٰهِ مَا قَالُوْا ۗوَلَقَدْ قَالُوْا كَلِمَةَ الْكُفْرِ وَكَفَرُوْا بَعْدَ اِسْلَامِهِمْ وَهَمُّوْا بِمَا لَمْ يَنَالُوْاۚ وَمَا نَقَمُوْٓا اِلَّآ اَنْ اَغْنٰىهُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ مِنْ فَضْلِهٖ ۚفَاِنْ يَّتُوْبُوْا يَكُ خَيْرًا لَّهُمْ ۚوَاِنْ يَّتَوَلَّوْا يُعَذِّبْهُمُ اللّٰهُ عَذَابًا اَلِيْمًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ ۚوَمَا لَهُمْ فِى الْاَرْضِ مِنْ وَّلِيٍّ وَّلَا نَصِيْرٍ ٧٤

yaḥlifūna
يَحْلِفُونَ
சத்தியமிடுகின்றனர்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ் மீது
mā qālū
مَا قَالُوا۟
அவர்கள் கூறவில்லை
walaqad qālū
وَلَقَدْ قَالُوا۟
கூறியிருக்கின்றனர்
kalimata
كَلِمَةَ
வார்த்தை
l-kuf'ri
ٱلْكُفْرِ
நிராகரிப்பின்
wakafarū
وَكَفَرُوا۟
இன்னும் நிராகரித்தனர்
baʿda
بَعْدَ
பின்னர்
is'lāmihim
إِسْلَٰمِهِمْ
அவர்கள் முஸ்லிமானதற்கு
wahammū
وَهَمُّوا۟
இன்னும் திட்டமிட்டனர்
bimā
بِمَا
எதற்கு
lam yanālū
لَمْ يَنَالُوا۟ۚ
அவர்கள் அடையவில்லை
wamā naqamū
وَمَا نَقَمُوٓا۟
அவர்கள் தண்டிக்கவில்லை
illā
إِلَّآ
தவிர
an aghnāhumu
أَنْ أَغْنَىٰهُمُ
என்பதற்காக/நிறைவாக்கினான்/இவர்களுக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
warasūluhu
وَرَسُولُهُۥ
இன்னும் அவனுடைய தூதர்
min faḍlihi
مِن فَضْلِهِۦۚ
தன் அருளினால்
fa-in yatūbū
فَإِن يَتُوبُوا۟
அவர்கள் திருந்தினால்
yaku
يَكُ
இருக்கும்
khayran
خَيْرًا
சிறந்ததாக
lahum
لَّهُمْۖ
அவர்களுக்கே
wa-in yatawallaw
وَإِن يَتَوَلَّوْا۟
அவர்கள் விலகிச்சென்றால்
yuʿadhib'humu
يُعَذِّبْهُمُ
வேதனை செய்வான்/அவர்களை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿadhāban
عَذَابًا
வேதனையால்
alīman
أَلِيمًا
துன்புறுத்தக்கூடிய
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
இம்மையில்
wal-ākhirati
وَٱلْءَاخِرَةِۚ
இன்னும் மறுமையில்
wamā lahum
وَمَا لَهُمْ
அவர்களுக்கு இல்லை
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
min waliyyin
مِن وَلِىٍّ
ஒரு பாதுகாவலர்
walā naṣīrin
وَلَا نَصِيرٍ
ஓர் உதவியாளர்
(நம்பிக்கையாளர்களே! நயவஞ்சகர்களாகிய) இவர்கள் நிராகரிப்பான வார்த்தையை மெய்யாகவே கூறியிருந்தும் (அதனைத்) தாங்கள் கூறவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். அன்றி, இவர்கள் இஸ்லாமில் சேர்ந்தபின் பின்னர் (அதனை) நிராகரித்தும் இருக்கின்றனர். (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதி) தங்களால் சாத்தியப்படாமல் போனதொரு காரியத்தைச் செய்யவும் அவர்கள் முயற்சித்தனர். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும், தங்கள் அருளைக் கொண்டு இவர்களை சீமான்கள் ஆக்கியதற்காகவா (முஸ்லிம்களாகிய உங்களை) அவர்கள் வெறுக்கின்றனர். இனியேனும் அவர்கள் கைசேதப்பட்டு இறைவனிடம் மன்னிப்புக் கோரி விலகிக் கொண்டால் (அது) அவர்களுக்கே நன்மையாகும். அன்றி, அவர்கள் புறக்கணித்தாலோ இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் அவர்களை மிகத் துன்புறுத்தும் வேதனையால் நோவினை செய்வான். அவர்களை பாதுகாப்பவர்களோ உதவி செய்பவர்களோ இவ்வுலகில் (ஒருவரும்) இல்லை. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௭௪)
Tafseer
௭௫

۞ وَمِنْهُمْ مَّنْ عٰهَدَ اللّٰهَ لَىِٕنْ اٰتٰىنَا مِنْ فَضْلِهٖ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُوْنَنَّ مِنَ الصّٰلِحِيْنَ ٧٥

wamin'hum
وَمِنْهُم
அவர்களில்
man
مَّنْ
எவர்கள்
ʿāhada
عَٰهَدَ
ஒப்பந்தம்செய்தார்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
la-in ātānā
لَئِنْ ءَاتَىٰنَا
அவன் கொடுத்தால்/எங்களுக்கு
min faḍlihi
مِن فَضْلِهِۦ
தன் அருளிலிருந்து
lanaṣṣaddaqanna
لَنَصَّدَّقَنَّ
நிச்சயமாக நாம் தர்மம்செய்வோம்
walanakūnanna
وَلَنَكُونَنَّ
நிச்சயமாக நாம் ஆகிவிடுவோம்
mina l-ṣāliḥīna
مِنَ ٱلصَّٰلِحِينَ
நல்லவர்களில்
அவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் "அல்லாஹ் தன் அருளைக் கொண்டு நமக்கு ஏதும் கொடுத்தால் நிச்சயமாக நாம் (அதனை) நல்வழியில் (தாராளமாக) தானம் செய்து, நிச்சயமாக நாம் நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்" என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தனர். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௭௫)
Tafseer
௭௬

فَلَمَّآ اٰتٰىهُمْ مِّنْ فَضْلِهٖ بَخِلُوْا بِهٖ وَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ ٧٦

falammā ātāhum
فَلَمَّآ ءَاتَىٰهُم
போது/கொடுத்தான்/அவர்களுக்கு
min faḍlihi
مِّن فَضْلِهِۦ
தன் அருளிலிருந்து
bakhilū
بَخِلُوا۟
கஞ்சத்தனம்செய்தனர்
bihi
بِهِۦ
அதில்
watawallaw
وَتَوَلَّوا۟
இன்னும் விலகிவிட்டனர்
wahum
وَّهُم
அவர்கள்
muʿ'riḍūna
مُّعْرِضُونَ
புறக்கணிப்பவர்களாக
அவன் (அவ்வாறு) அவர்களுக்குத் தன் அருட்கொடையை அளித்தபொழுது, அவர்கள் கஞ்சத்தனம் செய்து (தங்கள் வாக்குறுதியிலிருந்து) திரும்பி விட்டனர். அவ்வாறு புறக்கணிப்பது அவர்கள் வழக்கமாகவும் இருந்து வருகிறது. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௭௬)
Tafseer
௭௭

فَاَعْقَبَهُمْ نِفَاقًا فِيْ قُلُوْبِهِمْ اِلٰى يَوْمِ يَلْقَوْنَهٗ بِمَآ اَخْلَفُوا اللّٰهَ مَا وَعَدُوْهُ وَبِمَا كَانُوْا يَكْذِبُوْنَ ٧٧

fa-aʿqabahum
فَأَعْقَبَهُمْ
ஆகவே முடிவாக்கினான்/அவர்களுக்கு
nifāqan
نِفَاقًا
நயவஞ்சகத்தை
fī qulūbihim
فِى قُلُوبِهِمْ
அவர்களுடைய உள்ளங்களில்
ilā yawmi
إِلَىٰ يَوْمِ
நாள் வரை
yalqawnahu
يَلْقَوْنَهُۥ
சந்திப்பார்கள்/அவனை
bimā
بِمَآ
எதன் காரணமாக
akhlafū
أَخْلَفُوا۟
மாறாக நடந்தனர்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
مَا
எதை
waʿadūhu
وَعَدُوهُ
வாக்களித்தனர்/அதை
wabimā kānū
وَبِمَا كَانُوا۟
இன்னும் எதன் காரணமாக/இருந்தனர்
yakdhibūna
يَكْذِبُونَ
பொய்சொல்பவர்களாக
ஆகவே அவனை சந்திக்கும் (இறுதி)நாள் வரையில் அவர்களுடைய உள்ளங்களில் வஞ்சகத்தையூட்டி விட்டான். இதன் காரணம், அவர்கள் அல்லாஹ்வுக்குச் செய்த வாக்குறுதிகளுக்கு மாறு செய்துகொண்டும், பொய் சொல்லிக் கொண்டும் இருந்ததாகும். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௭௭)
Tafseer
௭௮

اَلَمْ يَعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَعْلَمُ سِرَّهُمْ وَنَجْوٰىهُمْ وَاَنَّ اللّٰهَ عَلَّامُ الْغُيُوْبِ ٧٨

alam yaʿlamū
أَلَمْ يَعْلَمُوٓا۟
அவர்கள் அறியவில்லையா?
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
அறிவான்
sirrahum
سِرَّهُمْ
அவர்களின் ரகசியத்தை
wanajwāhum
وَنَجْوَىٰهُمْ
இன்னும் அவர்களின் பேச்சை
wa-anna
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ʿallāmu
عَلَّٰمُ
மிக மிக அறிந்தவன்
l-ghuyūbi
ٱلْغُيُوبِ
மறைவானவற்றை
அவர்கள் (தங்கள் உள்ளத்தில்) மறைத்து வைத்திருப்பதையும் (தங்களுக்குள்) அவர்கள் இரகசியமாகப் பேசிக்கொள்வதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகிறான் என்பதுடன், நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய மற்ற) இரகசியங்கள் அனைத்தையும் நன்கறிகின்றான் என்பதையும் அவர்கள் அறிய வேண்டாமா? ([௯] ஸூரத்துத் தவ்பா: ௭௮)
Tafseer
௭௯

اَلَّذِيْنَ يَلْمِزُوْنَ الْمُطَّوِّعِيْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ فِى الصَّدَقٰتِ وَالَّذِيْنَ لَا يَجِدُوْنَ اِلَّا جُهْدَهُمْ فَيَسْخَرُوْنَ مِنْهُمْ ۗسَخِرَ اللّٰهُ مِنْهُمْ ۖ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ٧٩

alladhīna yalmizūna
ٱلَّذِينَ يَلْمِزُونَ
எவர்கள்/ குறை கூறுகின்றனர், குத்திப் பேசுகின்றனர்
l-muṭawiʿīna
ٱلْمُطَّوِّعِينَ
உபரியாக செய்பவர்களை
mina l-mu'minīna
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்
fī l-ṣadaqāti
فِى ٱلصَّدَقَٰتِ
தர்மங்களில்
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
lā yajidūna
لَا يَجِدُونَ
பெறமாட்டார்கள்
illā
إِلَّا
தவிர
juh'dahum
جُهْدَهُمْ
தங்கள் உழைப்பை
fayaskharūna
فَيَسْخَرُونَ
கேலிசெய்கின்றனர்
min'hum
مِنْهُمْۙ
அவர்களை
sakhira
سَخِرَ
கேலி செய்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
min'hum
مِنْهُمْ
அவர்களை
walahum
وَلَهُمْ
அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
alīmun
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது
இவர்கள் எத்தகையவர்களென்றால், நம்பிக்கையாளர்களில் உள்ள செல்வந்தர்கள் (தங்கள் பொருள்களை) நல்வழியில் (தாராளமாக) தானம் செய்வது பற்றி குற்றம் கூறுகின்றனர். (அதிலும் குறிப்பாக) கூலிவேலை செய்து சம்பாதிப்போர் (தங்கள் பொருளை இவ்வாறு தானம் செய்வது) பற்றியும் அவர்கள் பரிகசிக்கின்றனர். அல்லாஹ் (நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கும்) அவர்களைப் பரிகசிக்கின்றான். அன்றி (மறுமையில்) துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்கு உண்டு. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௭௯)
Tafseer
௮௦

اِسْتَغْفِرْ لَهُمْ اَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْۗ اِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِيْنَ مَرَّةً فَلَنْ يَّغْفِرَ اللّٰهُ لَهُمْ ۗذٰلِكَ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖۗ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ ࣖ ٨٠

is'taghfir
ٱسْتَغْفِرْ
நீர் மன்னிப்புத்தேடுவீராக
lahum
لَهُمْ
அவர்களுக்காக
aw
أَوْ
அல்லது
lā tastaghfir
لَا تَسْتَغْفِرْ
மன்னிப்புத் தேடாதீர்
lahum
لَهُمْ
அவர்களுக்காக
in tastaghfir
إِن تَسْتَغْفِرْ
நீர் மன்னிப்புத் தேடினாலும்
lahum
لَهُمْ
அவர்களுக்காக
sabʿīna
سَبْعِينَ
எழுபது
marratan
مَرَّةً
முறை
falan yaghfira
فَلَن يَغْفِرَ
மன்னிக்கவே மாட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lahum
لَهُمْۚ
அவர்களை
dhālika bi-annahum
ذَٰلِكَ بِأَنَّهُمْ
அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
warasūlihi
وَرَسُولِهِۦۗ
இன்னும் அவனுடைய தூதரை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma l-fāsiqīna
ٱلْقَوْمَ ٱلْفَٰسِقِينَ
மக்கள்/பாவிகளான
(நபியே!) நீங்கள் அவர்களுக்குப் பாவ மன்னிப்பைக் கோரினாலும் அல்லது நீங்கள் அவர்களுக்குப் பாவமன்னிப்பைக் கோராவிட்டாலும் (இரண்டும்) சமம்தான். (ஏனென்றால்), அவர்களை மன்னிக்கும்படி நீங்கள் எழுபது தடவைகள் மன்னிப்புக் கோரினாலும் நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் (மனமுரண்டாக) நிராகரித்ததுதான் இதற்குக் காரணமாகும். அல்லாஹ், பாவம் செய்யும் (இத்தகைய) மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௮௦)
Tafseer