Skip to content

ஸூரா ஸூரத்துத் தவ்பா - Page: 2

At-Tawbah

(at-Tawbah)

௧௧

فَاِنْ تَابُوْا وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ فَاِخْوَانُكُمْ فِى الدِّيْنِ ۗوَنُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ ١١

fa-in tābū
فَإِن تَابُوا۟
அவர்கள் திருந்தினால்
wa-aqāmū
وَأَقَامُوا۟
இன்னும் நிலைநிறுத்தினால்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
waātawū
وَءَاتَوُا۟
இன்னும் கொடுத்தால்
l-zakata
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
fa-ikh'wānukum
فَإِخْوَٰنُكُمْ
உங்கள் சகோதரர்கள்
fī l-dīni
فِى ٱلدِّينِۗ
மார்க்கத்தில்
wanufaṣṣilu
وَنُفَصِّلُ
விவரிக்கிறோம்
l-āyāti
ٱلْءَايَٰتِ
வசனங்களை
liqawmin
لِقَوْمٍ
மக்களுக்கு
yaʿlamūna
يَعْلَمُونَ
அறிகின்றார்கள்
அவர்கள் (தங்கள் நிராகரிப்பிலிருந்து விலகி அல்லாஹ்விடம்) மன்னிப்புக்கோரி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் (அவர்கள்) உங்கள் மார்க்க சகோதரர்களே. அறிவுள்ள மக்களுக்கு (நம்முடைய) வசனங்களை (இவ்வாறு) விவரிக்கின்றோம். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௧)
Tafseer
௧௨

وَاِنْ نَّكَثُوْٓا اَيْمَانَهُمْ مِّنْۢ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوْا فِيْ دِيْنِكُمْ فَقَاتِلُوْٓا اَىِٕمَّةَ الْكُفْرِۙ اِنَّهُمْ لَآ اَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُوْنَ ١٢

wa-in nakathū
وَإِن نَّكَثُوٓا۟
அவர்கள் முறித்தால்
aymānahum
أَيْمَٰنَهُم
தங்கள் சத்தியங்களை
min baʿdi
مِّنۢ بَعْدِ
பின்னர்
ʿahdihim
عَهْدِهِمْ
தங்கள் ஒப்பந்தம்
waṭaʿanū
وَطَعَنُوا۟
இன்னும் குறை கூறினர்
fī dīnikum
فِى دِينِكُمْ
உங்கள் மார்க்கத்தில்
faqātilū
فَقَٰتِلُوٓا۟
போரிடுங்கள்
a-immata
أَئِمَّةَ
தலைவர்களிடம்
l-kuf'ri
ٱلْكُفْرِۙ
நிராகரிப்பு
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
lā aymāna
لَآ أَيْمَٰنَ
அறவே சத்தியங்களில்லை
lahum
لَهُمْ
அவர்களுக்கு
laʿallahum yantahūna
لَعَلَّهُمْ يَنتَهُونَ
அவர்கள் விலகிக் கொள்வதற்காக
(சத்தியம் செய்து) உடன்படிக்கை செய்து கொண்டதன் பின்னரும், அவர்கள் தங்களுடைய சத்தியங்களை முறித்து உங்களுடைய மார்க்கத்தைப் பற்றியும் தவறான குற்றங்குறைகள் கூறிக்கொண்டிருந்தால், நிச்சயமாக நிராகரிக்கும் (இத்தகைய) மக்களின் வாக்குறுதிகள் முறிந்துவிட்டன. ஆகவே, (இத்தகைய விஷமத்திலிருந்து) அவர்கள் விலகிக்கொள்வதற்காக நீங்கள் போர் புரியுங்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௨)
Tafseer
௧௩

اَلَا تُقَاتِلُوْنَ قَوْمًا نَّكَثُوْٓا اَيْمَانَهُمْ وَهَمُّوْا بِاِخْرَاجِ الرَّسُوْلِ وَهُمْ بَدَءُوْكُمْ اَوَّلَ مَرَّةٍۗ اَتَخْشَوْنَهُمْ ۚفَاللّٰهُ اَحَقُّ اَنْ تَخْشَوْهُ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ١٣

alā tuqātilūna
أَلَا تُقَٰتِلُونَ
நீங்கள் போர்புரிய மாட்டீர்களா?
qawman
قَوْمًا
மக்களிடம்
nakathū
نَّكَثُوٓا۟
முறித்தனர்
aymānahum
أَيْمَٰنَهُمْ
தங்கள் சத்தியங்களை
wahammū
وَهَمُّوا۟
இன்னும் உறுதியாகநாடினர்
bi-ikh'rāji
بِإِخْرَاجِ
வெளியேற்றுவதற்கு
l-rasūli
ٱلرَّسُولِ
தூதரை
wahum
وَهُم
அவர்கள்தான்
badaūkum
بَدَءُوكُمْ
ஆரம்பித்தனர் உங்களிடம்
awwala marratin
أَوَّلَ مَرَّةٍۚ
முதல் முறையாக
atakhshawnahum
أَتَخْشَوْنَهُمْۚ
நீங்கள் பயப்படுகிறீர்களா?/அவர்களை
fal-lahu
فَٱللَّهُ
அல்லாஹ்தான்
aḥaqqu
أَحَقُّ
மிகத் தகுதியானவன்
an takhshawhu
أَن تَخْشَوْهُ
நீங்கள் பயப்படுவதற்கு/அவனை
in kuntum mu'minīna
إِن كُنتُم مُّؤْمِنِينَ
நீங்கள் இருந்தால்/நம்பிக்கையாளர்களாக
தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்து (நம்முடைய) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் விரும்பி முயற்சித்த மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்கள்தான் (இத்தகைய விஷமத்தை) உங்களிடம் முதலில் ஆரம்பித்தனர். அவர்களுக்கு நீங்கள் பயப்படுகிறீர்களா? உண்மையாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின் நீங்கள் பயப்படத் தகுதியானவன் அல்லாஹ் (ஒருவன்)தான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௩)
Tafseer
௧௪

قَاتِلُوْهُمْ يُعَذِّبْهُمُ اللّٰهُ بِاَيْدِيْكُمْ وَيُخْزِهِمْ وَيَنْصُرْكُمْ عَلَيْهِمْ وَيَشْفِ صُدُوْرَ قَوْمٍ مُّؤْمِنِيْنَۙ ١٤

qātilūhum
قَٰتِلُوهُمْ
போரிடுங்கள் அவர்களிடம்
yuʿadhib'humu
يُعَذِّبْهُمُ
வேதனை செய்வான்/அவர்களை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bi-aydīkum
بِأَيْدِيكُمْ
உங்கள் கரங்களால்
wayukh'zihim
وَيُخْزِهِمْ
இன்னும் இழிவுபடுத்துவான்/அவர்களை
wayanṣur'kum
وَيَنصُرْكُمْ
இன்னும் உதவுவான்/உங்களுக்கு
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களுக்கு எதிராக
wayashfi
وَيَشْفِ
இன்னும் குணப்படுத்துவான்
ṣudūra
صُدُورَ
நெஞ்சங்களை
qawmin
قَوْمٍ
மக்களின்
mu'minīna
مُّؤْمِنِينَ
நம்பிக்கை கொண்டவர்கள்
நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள். உங்கள் கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனை கொடுத்து, அவர்களை இழிவுபடுத்தி, அவர்களை நீங்கள் வெற்றிபெற உங்களுக்கு உதவியும் புரிந்து, நம்பிக்கை கொண்ட மக்களின் உள்ளங்களுக்குத் திருப்தியுமளிப்பான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௪)
Tafseer
௧௫

وَيُذْهِبْ غَيْظَ قُلُوْبِهِمْۗ وَيَتُوْبُ اللّٰهُ عَلٰى مَنْ يَّشَاۤءُۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ١٥

wayudh'hib
وَيُذْهِبْ
இன்னும் போக்குவான்
ghayẓa
غَيْظَ
கோபத்தை
qulūbihim
قُلُوبِهِمْۗ
அவர்களுடைய உள்ளங்களின்
wayatūbu
وَيَتُوبُ
பிழைபொறுப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
மீது
man
مَن
எவர்
yashāu
يَشَآءُۗ
நாடுகிறான்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
ḥakīmun
حَكِيمٌ
ஞானவான்
(அவர்கள் மீது) இவர்கள் உள்ளங்களில் (குமுறிக் கொண்டு) உள்ள கோபங்களையும் போக்கிவிடுவான். அல்லாஹ் (அவர்களிலும்) தான் விரும்பியவர்களின் மன்னிப்புக்கோருதலை அங்கீகரிக் கின்றான். ஏனென்றால், அல்லாஹ் மிக அறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௫)
Tafseer
௧௬

اَمْ حَسِبْتُمْ اَنْ تُتْرَكُوْا وَلَمَّا يَعْلَمِ اللّٰهُ الَّذِيْنَ جَاهَدُوْا مِنْكُمْ وَلَمْ يَتَّخِذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ وَلَا رَسُوْلِهٖ وَلَا الْمُؤْمِنِيْنَ وَلِيْجَةً ۗوَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ ࣖ ١٦

am ḥasib'tum
أَمْ حَسِبْتُمْ
எண்ணினீர்களா?
an tut'rakū
أَن تُتْرَكُوا۟
நீங்கள் விட்டு விடப்படுவீர்கள் என்று
walammā yaʿlami
وَلَمَّا يَعْلَمِ
அறியாமல் இருக்க
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhīna
ٱلَّذِينَ
எவர்களை
jāhadū
جَٰهَدُوا۟
போர் புரிந்தனர்
minkum
مِنكُمْ
உங்களில்
walam yattakhidhū
وَلَمْ يَتَّخِذُوا۟
இன்னும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
walā rasūlihi
وَلَا رَسُولِهِۦ
இன்னும் அவனுடையதூதர்
walā l-mu'minīna
وَلَا ٱلْمُؤْمِنِينَ
இன்னும் நம்பிக்கை கொண்டவர்கள்
walījatan
وَلِيجَةًۚ
அந்தரங்க நண்பர்களாக
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
khabīrun
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிந்தவன்
bimā
بِمَا
எதை
taʿmalūna
تَعْمَلُونَ
செய்வீர்கள்
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் (உண்மையாகவே மனம் விரும்பி) போர் புரிந்தவர்கள் யாரென்பதையும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கையாளர்களையும் தவிர (மற்றெவரையும் தங்களுடைய) அந்தரங்க நண்பர்களாக (உங்களில்) எவரும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும், அல்லாஹ் உங்களைச் சோதித்து அறிவிக்காமல், நீங்கள் விட்டு விடப்படுவீர்கள் என்று எண்ணிக் கொண்டீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாகவே இருக்கிறான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௬)
Tafseer
௧௭

مَا كَانَ لِلْمُشْرِكِيْنَ اَنْ يَّعْمُرُوْا مَسٰجِدَ اللّٰهِ شٰهِدِيْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ بِالْكُفْرِۗ اُولٰۤىِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْۚ وَ فِى النَّارِ هُمْ خٰلِدُوْنَ ١٧

mā kāna
مَا كَانَ
இருக்கவில்லை
lil'mush'rikīna
لِلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களுக்கு உரிமை
an yaʿmurū
أَن يَعْمُرُوا۟
அவர்கள் பரிபாலிப்பதற்கு
masājida
مَسَٰجِدَ
மஸ்ஜிதுகளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
shāhidīna
شَٰهِدِينَ
சாட்சிகூறியவர்களாக
ʿalā anfusihim
عَلَىٰٓ أَنفُسِهِم
தங்கள் மீது
bil-kuf'ri
بِٱلْكُفْرِۚ
நிராகரிப்பிற்கு
ulāika ḥabiṭat
أُو۟لَٰٓئِكَ حَبِطَتْ
அவர்கள்/அழிந்தன
aʿmāluhum
أَعْمَٰلُهُمْ
அவர்களுடைய செயல்கள்
wafī l-nāri
وَفِى ٱلنَّارِ
இன்னும் நரகத்தில்தான்
hum
هُمْ
அவர்கள்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்
இணைவைத்து வணங்கும் இவர்கள், தாங்கள் நிராகரிப்பவர்கள்தாம் என்று (பகிரங்கமாக) கூறிக்கொண்டிருக்கும் வரையில், அல்லாஹ்வுடைய பள்ளிகளைப் பரிபாலனம் செய்ய அவர்களுக்கு உரிமையில்லை. இவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. அவர்கள் என்றென்றும் நரகத்திலேயே தங்கிவிடுவார்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௭)
Tafseer
௧௮

اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَلَمْ يَخْشَ اِلَّا اللّٰهَ ۗفَعَسٰٓى اُولٰۤىِٕكَ اَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ ١٨

innamā yaʿmuru
إِنَّمَا يَعْمُرُ
பராமரிப்பதெல்லாம்
masājida
مَسَٰجِدَ
மஸ்ஜிதுகளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
man
مَنْ
எவர்
āmana
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wal-yawmi
وَٱلْيَوْمِ
இன்னும் இறுதி நாளை
l-ākhiri
ٱلْءَاخِرِ
இறுதி
wa-aqāma
وَأَقَامَ
இன்னும் நிலைநிறுத்தினார்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
waātā
وَءَاتَى
இன்னும் கொடுத்தார்
l-zakata
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
walam yakhsha
وَلَمْ يَخْشَ
பயப்படவில்லை
illā
إِلَّا
தவிர
l-laha
ٱللَّهَۖ
அல்லாஹ்வை
faʿasā
فَعَسَىٰٓ
கூடும்
ulāika
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
an yakūnū
أَن يَكُونُوا۟
(அவர்கள்) இருக்க
mina l-muh'tadīna
مِنَ ٱلْمُهْتَدِينَ
நேர்வழி பெற்றவர்களில்
எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருவதுடன், அல்லாஹ்வை அன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ, அவர்கள்தான் அல்லாஹ்வுடைய பள்ளிகளைப் பராமரிக்கத் தகுதியுடையவர்கள். இத்தகையவர்கள்தாம் நேரான வழியில் இருப்பவர்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௮)
Tafseer
௧௯

۞ اَجَعَلْتُمْ سِقَايَةَ الْحَاۤجِّ وَعِمَارَةَ الْمَسْجِدِ الْحَرَامِ كَمَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَجَاهَدَ فِيْ سَبِيْلِ اللّٰهِ ۗ لَا يَسْتَوٗنَ عِنْدَ اللّٰهِ ۗوَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَۘ ١٩

ajaʿaltum
أَجَعَلْتُمْ
ஆக்கினீர்களா?
siqāyata
سِقَايَةَ
தண்ணீர் புகட்டுவதை
l-ḥāji
ٱلْحَآجِّ
ஹாஜிக்கு
waʿimārata
وَعِمَارَةَ
இன்னும் பராமரிப்பதை
l-masjidi
ٱلْمَسْجِدِ
மஸ்ஜிது
l-ḥarāmi
ٱلْحَرَامِ
புனிதமானது
kaman
كَمَنْ
எவரைப்போன்று
āmana
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wal-yawmi l-ākhiri
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
இன்னும் இறுதி நாளை
wajāhada
وَجَٰهَدَ
இன்னும் போர் புரிந்தார்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
lā yastawūna
لَا يَسْتَوُۥنَ
சமமாக மாட்டார்கள்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِۗ
அல்லாஹ்விடம்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
மக்களை
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
(நம்பிக்கை கொள்ளாமல் இருந்துகொண்டு) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுபவர்களையும், சிறப்புற்ற அப்பள்ளிக்கு ஊழியம் செய்பவர்களையும் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிபவர்களுக்குச் சமமாக நீங்கள் ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள். அல்லாஹ், அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௯)
Tafseer
௨௦

اَلَّذِيْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجَاهَدُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْۙ اَعْظَمُ دَرَجَةً عِنْدَ اللّٰهِ ۗوَاُولٰۤىِٕكَ هُمُ الْفَاۤىِٕزُوْنَ ٢٠

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
wahājarū
وَهَاجَرُوا۟
இன்னும் ஹிஜ்ரா சென்றனர்
wajāhadū
وَجَٰهَدُوا۟
இன்னும் போர் புரிந்தனர்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
bi-amwālihim
بِأَمْوَٰلِهِمْ
தங்கள்செல்வங்களால்
wa-anfusihim
وَأَنفُسِهِمْ
இன்னும் தங்கள் உயிர்களால்
aʿẓamu
أَعْظَمُ
மகத்தானவர்(கள்)
darajatan
دَرَجَةً
பதவியால்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِۚ
அல்லாஹ்விடம்
wa-ulāika humu
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
இவர்கள்தான்
l-fāizūna
ٱلْفَآئِزُونَ
வெற்றியாளர்கள்
எவர்கள், நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊர்களிலிருந்து வெளியேறி, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரிகின்றனரோ அவர்கள் அல்லாஹ்விடத்தில் மகத்தான பெரும் பதவி பெற்றவர்கள். இத்தகையவர்கள்தான் நிச்சயமாக வெற்றி அடைந்தவர்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௨௦)
Tafseer