۞ اِنَّ اللّٰهَ اشْتَرٰى مِنَ الْمُؤْمِنِيْنَ اَنْفُسَهُمْ وَاَمْوَالَهُمْ بِاَنَّ لَهُمُ الْجَنَّةَۗ يُقَاتِلُوْنَ فِيْ سَبِيْلِ اللّٰهِ فَيَقْتُلُوْنَ وَيُقْتَلُوْنَ وَعْدًا عَلَيْهِ حَقًّا فِى التَّوْرٰىةِ وَالْاِنْجِيْلِ وَالْقُرْاٰنِۗ وَمَنْ اَوْفٰى بِعَهْدِهٖ مِنَ اللّٰهِ فَاسْتَبْشِرُوْا بِبَيْعِكُمُ الَّذِيْ بَايَعْتُمْ بِهٖۗ وَذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ ١١١
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- ish'tarā mina
- ٱشْتَرَىٰ مِنَ
- விலைக்கு வாங்கினான்/இருந்து
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்கள்
- anfusahum
- أَنفُسَهُمْ
- உயிர்களை/அவர்களுடைய
- wa-amwālahum
- وَأَمْوَٰلَهُم
- இன்னும் செல்வங்களை/அவர்களுடைய
- bi-anna
- بِأَنَّ
- பகரமாக/நிச்சயம்
- lahumu
- لَهُمُ
- அவர்களுக்கு
- l-janata
- ٱلْجَنَّةَۚ
- சொர்க்கம்
- yuqātilūna
- يُقَٰتِلُونَ
- போர் புரிவார்கள்
- fī sabīli
- فِى سَبِيلِ
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- fayaqtulūna
- فَيَقْتُلُونَ
- கொல்வார்கள்
- wayuq'talūna
- وَيُقْتَلُونَۖ
- இன்னும் கொல்லப்படுவார்கள்
- waʿdan
- وَعْدًا
- வாக்குறுதியாக
- ʿalayhi
- عَلَيْهِ
- தன் மீது
- ḥaqqan
- حَقًّا
- கடமையான
- fī l-tawrāti
- فِى ٱلتَّوْرَىٰةِ
- தவ்றாத்தில்
- wal-injīli
- وَٱلْإِنجِيلِ
- இன்னும் இன்ஜீல்
- wal-qur'āni
- وَٱلْقُرْءَانِۚ
- இன்னும் குர்ஆன்
- waman awfā
- وَمَنْ أَوْفَىٰ
- யார்/அதிகம் நிறைவேற்றுபவர்
- biʿahdihi
- بِعَهْدِهِۦ
- தன் வாக்கை
- mina l-lahi
- مِنَ ٱللَّهِۚ
- அல்லாஹ்வை விட
- fa-is'tabshirū
- فَٱسْتَبْشِرُوا۟
- ஆகவேமகிழ்ச்சியுறுங்கள்
- bibayʿikumu
- بِبَيْعِكُمُ
- விற்பனையைக் கொண்டு/உங்கள்
- alladhī
- ٱلَّذِى
- எது
- bāyaʿtum
- بَايَعْتُم
- விற்றுக் கொண்டீர்கள்
- bihi
- بِهِۦۚ
- அதற்குப் பகரமாக
- wadhālika huwa
- وَذَٰلِكَ هُوَ
- இதுதான்
- l-fawzu l-ʿaẓīmu
- ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
- வெற்றி/மகத்தானது
அல்லாஹ், நம்பிக்கையாளர்களுடைய உயிர்களையும் பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்குச் சுவனபதி தருவதாக(க் கூறி,) நிச்சயமாக விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரிகளை) கொள்வார்கள்; (அல்லது) கொள்ளப்பட்டு (இறந்து) விடுவார்கள். (இவ்விரு நிலைமைகளிலும் அவர்களுக்குச் சுவனபதி தருவதாக) தவ்றாத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் (அல்லாஹ் வாக்களித்துத் தன்மீது கடமையாக்கிக் கொண்டிருக்கின்றான். அல்லாஹ்வைவிட வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவன் யார்? ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் செய்த இவ்வர்த்தகத்தைப் பற்றி மகிழ்ச்சியடையுங்கள். நிச்சயமாக இது(வன்றோ) மகத்தான பெரும் வெற்றி! ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௧௧)Tafseer
اَلتَّاۤىِٕبُوْنَ الْعٰبِدُوْنَ الْحَامِدُوْنَ السَّاۤىِٕحُوْنَ الرَّاكِعُوْنَ السَّاجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ وَالْحٰفِظُوْنَ لِحُدُوْدِ اللّٰهِ ۗوَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ ١١٢
- al-tāibūna
- ٱلتَّٰٓئِبُونَ
- திருந்தியவர்கள்
- l-ʿābidūna
- ٱلْعَٰبِدُونَ
- வணக்கசாலிகள்
- l-ḥāmidūna
- ٱلْحَٰمِدُونَ
- புகழ்பவர்கள்
- l-sāiḥūna
- ٱلسَّٰٓئِحُونَ
- நோன்புநோற்பவர்கள்
- l-rākiʿūna
- ٱلرَّٰكِعُونَ
- குனிபவர்கள்
- l-sājidūna
- ٱلسَّٰجِدُونَ
- சிரம் பணிபவர்கள்
- l-āmirūna
- ٱلْءَامِرُونَ
- ஏவக்கூடியவர்கள்
- bil-maʿrūfi
- بِٱلْمَعْرُوفِ
- நன்மையை
- wal-nāhūna
- وَٱلنَّاهُونَ
- இன்னும் தடுக்கக்கூடியவர்கள்
- ʿani l-munkari
- عَنِ ٱلْمُنكَرِ
- பாவத்தை விட்டு
- wal-ḥāfiẓūna
- وَٱلْحَٰفِظُونَ
- இன்னும் பாதுகாப்பவர்கள்
- liḥudūdi
- لِحُدُودِ
- வரம்புகளை, சட்டங்களை
- l-lahi
- ٱللَّهِۗ
- அல்லாஹ்வுடைய
- wabashiri
- وَبَشِّرِ
- இன்னும் நற்செய்தி கூறுவீராக
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களுக்கு
பாவத்திலிருந்து விலகிக் கொண்டவர்களும்; (இறைவன் ஒருவனையே) வணங்குபவர்களும்; (இரவு பகலாக அவனைத்) துதி செய்து புகழ்பவர்களும்; (நோன்பு நோற்பவர்களும், மார்க்கக் கல்வியைக் கற்றல், மார்க்கப் பிரச்சாரம் செய்தல் போன்ற மார்க்க விஷயத்திற்காக) பிரயாணம் செய்பவர்களும்; குனிந்து சிரம் பணிந்து (தொழுபவர்களும்;) நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவுபவர்களும்; பாவமான காரியங்களை விலக்குபவர்களும்; அல்லாஹ்வுடைய வரம்புகளைப் பேணி நடப்பவர்களும் ஆகிய இத்தகைய (உண்மை) நம்பிக்கையாளர்களுக்கு (சுவனபதி கிடைக்குமென்று நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௧௨)Tafseer
مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِيْنَ اٰمَنُوْٓا اَنْ يَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِيْنَ وَلَوْ كَانُوْٓا اُولِيْ قُرْبٰى مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِيْمِ ١١٣
- mā kāna
- مَا كَانَ
- தகுந்ததல்ல
- lilnnabiyyi
- لِلنَّبِىِّ
- நபிக்கு
- wa-alladhīna āmanū
- وَٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- இன்னும் எவர்கள்/நம்பிக்கை கொண்டனர்
- an yastaghfirū
- أَن يَسْتَغْفِرُوا۟
- அவர்கள் மன்னிப்புக் கோருவது
- lil'mush'rikīna
- لِلْمُشْرِكِينَ
- இணைவைப்பவர்களுக்கு
- walaw kānū
- وَلَوْ كَانُوٓا۟
- அவர்கள் இருந்தாலும்
- ulī qur'bā
- أُو۟لِى قُرْبَىٰ
- உறவினர்களாக
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- mā tabayyana
- مَا تَبَيَّنَ
- தெளிவாகிய
- lahum
- لَهُمْ
- தங்களுக்கு
- annahum
- أَنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- aṣḥābu
- أَصْحَٰبُ
- வாசிகள்
- l-jaḥīmi
- ٱلْجَحِيمِ
- நரகம்
இணைவைத்து வணங்குபர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதல்ல; அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய பந்துக்களாகயிருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்கு மன்னிப்புக் கோரலாம்?) ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௧௩)Tafseer
وَمَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَآ اِيَّاهُۚ فَلَمَّا تَبَيَّنَ لَهٗٓ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُۗ اِنَّ اِبْرٰهِيْمَ لَاَوَّاهٌ حَلِيْمٌ ١١٤
- wamā kāna
- وَمَا كَانَ
- இருக்கவில்லை
- is'tigh'fāru
- ٱسْتِغْفَارُ
- மன்னிப்புக் கோரியது
- ib'rāhīma
- إِبْرَٰهِيمَ
- இப்றாஹீம்
- li-abīhi
- لِأَبِيهِ
- தன் தந்தைக்கு
- illā
- إِلَّا
- தவிர
- ʿan mawʿidatin
- عَن مَّوْعِدَةٍ
- ஒரு வாக்குறுதிக்காக
- waʿadahā
- وَعَدَهَآ
- அதை வாக்களித்தார்
- iyyāhu
- إِيَّاهُ
- அவருக்கு
- falammā tabayyana
- فَلَمَّا تَبَيَّنَ
- தெளிவான போது
- lahu
- لَهُۥٓ
- அவருக்கு
- annahu
- أَنَّهُۥ
- நிச்சயமாக அவர்
- ʿaduwwun
- عَدُوٌّ
- ஓர் எதிரி
- lillahi
- لِّلَّهِ
- அல்லாஹ்வுக்கு
- tabarra-a
- تَبَرَّأَ
- அவர் விலகிக் கொண்டார்
- min'hu
- مِنْهُۚ
- அவரிலிருந்து
- inna ib'rāhīma
- إِنَّ إِبْرَٰهِيمَ
- நிச்சயமாக இப்றாஹீம்
- la-awwāhun
- لَأَوَّٰهٌ
- அதிகம் பிரார்த்திப்பவர்
- ḥalīmun
- حَلِيمٌ
- பெரும் சகிப்பாளர்
இப்ராஹீம் (நபி) தன் தந்தைக்காக மன்னிப்புக் கோரிய தெல்லாம், அவர் தன் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக் காகவே அன்றி வேறில்லை. (அவருடைய தந்தை) அல்லாஹ்வுக்கு எதிரி எனத் தெளிவாகத் தெரிந்ததும் அ(வருக்காக மன்னிப்புக் கோருவ)திலிருந்து அவர் விலகிக் கொண்டார். நிச்சயமாக இப்ராஹீம் மிக இரக்கமும் அடக்கமும் உடையவராக இருந்தார். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௧௪)Tafseer
وَمَا كَانَ اللّٰهُ لِيُضِلَّ قَوْمًاۢ بَعْدَ اِذْ هَدٰىهُمْ حَتّٰى يُبَيِّنَ لَهُمْ مَّا يَتَّقُوْنَۗ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ١١٥
- wamā kāna
- وَمَا كَانَ
- இருக்கவில்லை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- liyuḍilla
- لِيُضِلَّ
- வழிகெடுப்பவனாக
- qawman
- قَوْمًۢا
- ஒரு கூட்டத்தை
- baʿda
- بَعْدَ
- பின்னர்
- idh hadāhum
- إِذْ هَدَىٰهُمْ
- அவன்/நேர்வழிப்படுத்திய/அவர்களை
- ḥattā
- حَتَّىٰ
- வரை
- yubayyina
- يُبَيِّنَ
- விவரிப்பான்
- lahum
- لَهُم
- அவர்களுக்கு
- mā yattaqūna
- مَّا يَتَّقُونَۚ
- எவற்றை/அவர்கள் தவிர்ந்து கொள்வார்கள்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- bikulli shayin
- بِكُلِّ شَىْءٍ
- எல்லாவற்றையும்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
ஒரு கூட்டத்தினரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்திய பின்னர், அவர்கள் தவறிழைக்கும்படி அவன் (விட்டு) விடமாட்டான். அவர்கள் விலகிக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவை என்பதை அவன் அவர்களுக்கு விபரமாக அறிவித்து வருவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் மிக அறிந்தவனாக இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௧௫)Tafseer
اِنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ يُحْيٖ وَيُمِيْتُۗ وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِيٍّ وَّلَا نَصِيْرٍ ١١٦
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- lahu mul'ku
- لَهُۥ مُلْكُ
- அவனுக்கே/ஆட்சி
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்கள்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۖ
- இன்னும் பூமியின்
- yuḥ'yī
- يُحْىِۦ
- உயிர்ப்பிக்கிறான்
- wayumītu
- وَيُمِيتُۚ
- இன்னும் மரணிக்கச் செய்கிறான்
- wamā lakum
- وَمَا لَكُم
- உங்களுக்கு இல்லை
- min dūni l-lahi
- مِّن دُونِ ٱللَّهِ
- அல்லாஹ்வையன்றி
- min waliyyin
- مِن وَلِىٍّ
- ஒரு பாதுகாவலர்
- walā naṣīrin
- وَلَا نَصِيرٍ
- ஓர் உதவியாளர் இல்லை
வானங்கள், பூமியின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக் குரியதே! (அவனே) உயிர்ப்பிக்கின்றான்; மரணிக்கும்படியும் செய்கின்றான். ஆகவே, அல்லாஹ்வை அன்றி உங்களை பாதுகாப்பவர்களும் இல்லை; (உங்களுக்கு) உதவி செய்பவர்களும் இல்லை. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௧௬)Tafseer
لَقَدْ تَّابَ اللّٰهُ عَلَى النَّبِيِّ وَالْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ الَّذِيْنَ اتَّبَعُوْهُ فِيْ سَاعَةِ الْعُسْرَةِ مِنْۢ بَعْدِ مَا كَادَ يَزِيْغُ قُلُوْبُ فَرِيْقٍ مِّنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْۗ اِنَّهٗ بِهِمْ رَءُوْفٌ رَّحِيْمٌ ۙ ١١٧
- laqad
- لَّقَد
- திட்டவட்டமாக
- tāba
- تَّابَ
- மன்னித்தான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalā l-nabiyi
- عَلَى ٱلنَّبِىِّ
- நபி மீது
- wal-muhājirīna
- وَٱلْمُهَٰجِرِينَ
- இன்னும் முஹாஜிர்கள்
- wal-anṣāri
- وَٱلْأَنصَارِ
- இன்னும் அன்ஸாரிகள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ittabaʿūhu
- ٱتَّبَعُوهُ
- அவரைப் பின்பற்றினார்கள்
- fī sāʿati
- فِى سَاعَةِ
- காலத்தில்
- l-ʿus'rati
- ٱلْعُسْرَةِ
- சிரமம்
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- mā kāda
- مَا كَادَ
- நெருங்கியது
- yazīghu
- يَزِيغُ
- வழிதவற
- qulūbu
- قُلُوبُ
- உள்ளங்கள்
- farīqin
- فَرِيقٍ
- ஒரு பிரிவினரின்
- min'hum
- مِّنْهُمْ
- அவர்களில்
- thumma
- ثُمَّ
- பிறகு
- tāba
- تَابَ
- மன்னித்தான்
- ʿalayhim
- عَلَيْهِمْۚ
- அவர்களை
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- bihim
- بِهِمْ
- அவர்கள் மீது
- raūfun
- رَءُوفٌ
- இரக்கமுள்ளவன்
- raḥīmun
- رَّحِيمٌ
- பெரும் கருணையாளன்
நபியின் மீது நிச்சயமாக அல்லாஹ் அருள் புரிந்தான். (அவ்வாறே) கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மீதும், அன்ஸார்கள் மீதும் (அருள் புரிந்தான்.) அவர்களில் ஒரு பிரிவினருடைய உள்ளங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து, அவர்கள் மீது அருள்புரிந்)தான். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது பேரன்பும் கிருபையும் உடையவனாக இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௧௭)Tafseer
وَّعَلَى الثَّلٰثَةِ الَّذِيْنَ خُلِّفُوْاۗ حَتّٰٓى اِذَا ضَاقَتْ عَلَيْهِمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَيْهِمْ اَنْفُسُهُمْ وَظَنُّوْٓا اَنْ لَّا مَلْجَاَ مِنَ اللّٰهِ اِلَّآ اِلَيْهِۗ ثُمَّ تَابَ عَلَيْهِمْ لِيَتُوْبُوْاۗ اِنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ ࣖ ١١٨
- waʿalā
- وَعَلَى
- மீது
- l-thalāthati
- ٱلثَّلَٰثَةِ
- மூவர்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- khullifū
- خُلِّفُوا۟
- பிற்படுத்தப்பட்டனர்
- ḥattā idhā
- حَتَّىٰٓ إِذَا
- வரை/போது
- ḍāqat
- ضَاقَتْ
- நெருக்கடியானது
- ʿalayhimu
- عَلَيْهِمُ
- அவர்களுக்கு
- l-arḍu
- ٱلْأَرْضُ
- பூமி
- bimā raḥubat
- بِمَا رَحُبَتْ
- விசாலமாக இருந்தும்
- waḍāqat
- وَضَاقَتْ
- இன்னும் நெருக்கடியானது
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- anfusuhum
- أَنفُسُهُمْ
- ஆன்மாக்கள்/அவர்களின்
- waẓannū
- وَظَنُّوٓا۟
- இன்னும் அவர்கள் உறுதி கொண்டனர்
- an lā
- أَن لَّا
- அறவே இல்லை
- malja-a
- مَلْجَأَ
- ஒதுங்குமிடம்
- mina l-lahi
- مِنَ ٱللَّهِ
- அல்லாஹ்விடமிருந்து
- illā ilayhi
- إِلَّآ إِلَيْهِ
- தவிர/அவனிடமே
- thumma
- ثُمَّ
- பிறகு
- tāba
- تَابَ
- அவன் மன்னித்தான்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்களை
- liyatūbū
- لِيَتُوبُوٓا۟ۚ
- அவர்கள் திருந்துவதற்காக
- inna l-laha huwa
- إِنَّ ٱللَّهَ هُوَ
- நிச்சயமாக அல்லாஹ் அவன்தான்
- l-tawābu
- ٱلتَّوَّابُ
- மகா அங்கீகரிப்பவன்
- l-raḥīmu
- ٱلرَّحِيمُ
- பெரும் கருணையாளன்
(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்துத் தீர்ப்புக் கூறாது) விட்டு வைக்கப்பட்டிருக்கும் மூவரையும் (அல்லாஹ் மன்னித்து விட்டான்.) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அது) அவர்களுக்கு மிக்க நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் மிக்க கஷ்டமாகி விட்டது. அல்லாஹ்வையன்றி அவனை விட்டுத் தப்புமிடம் அவர்களுக்கு இல்லவே இல்லை என்பதையும் அவர்கள் நிச்சயமாக அறிந்து கொண்டனர். ஆதலால், அவர்கள் (பாவத்தில் இருந்து) விலகிக் கொள்வதற்காக அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்(து அவர்களுக்கு அருள் புரிந்)தான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௧௮)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ ١١٩
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- ittaqū
- ٱتَّقُوا۟
- அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- wakūnū
- وَكُونُوا۟
- இன்னும் இருங்கள்
- maʿa
- مَعَ
- உடன்
- l-ṣādiqīna
- ٱلصَّٰدِقِينَ
- உண்மையாளர்கள்
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள் மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௧௯)Tafseer
مَا كَانَ لِاَهْلِ الْمَدِيْنَةِ وَمَنْ حَوْلَهُمْ مِّنَ الْاَعْرَابِ اَنْ يَّتَخَلَّفُوْا عَنْ رَّسُوْلِ اللّٰهِ وَلَا يَرْغَبُوْا بِاَنْفُسِهِمْ عَنْ نَّفْسِهٖۗ ذٰلِكَ بِاَنَّهُمْ لَا يُصِيْبُهُمْ ظَمَاٌ وَّلَا نَصَبٌ وَّلَا مَخْمَصَةٌ فِيْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَطَـُٔوْنَ مَوْطِئًا يَّغِيْظُ الْكُفَّارَ وَلَا يَنَالُوْنَ مِنْ عَدُوٍّ نَّيْلًا اِلَّا كُتِبَ لَهُمْ بِهٖ عَمَلٌ صَالِحٌۗ اِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ ١٢٠
- mā kāna
- مَا كَانَ
- தகுந்ததல்ல
- li-ahli l-madīnati
- لِأَهْلِ ٱلْمَدِينَةِ
- மதீனாவாசிகளுக்கு
- waman
- وَمَنْ
- இன்னும் எவர்
- ḥawlahum
- حَوْلَهُم
- அவர்களைச் சுற்றி
- mina l-aʿrābi
- مِّنَ ٱلْأَعْرَابِ
- கிராம அரபிகளில்
- an yatakhallafū
- أَن يَتَخَلَّفُوا۟
- அவர்கள் பின்தங்குவது
- ʿan rasūli
- عَن رَّسُولِ
- தூதரை விட்டு
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- walā yarghabū
- وَلَا يَرْغَبُوا۟
- இன்னும் அவர்கள் நேசிப்பது (தகுந்தது) இல்லை
- bi-anfusihim
- بِأَنفُسِهِمْ
- தங்கள் உயிர்களை
- ʿan nafsihi
- عَن نَّفْسِهِۦۚ
- அவருடைய உயிரைவிட
- dhālika bi-annahum
- ذَٰلِكَ بِأَنَّهُمْ
- அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
- lā yuṣībuhum
- لَا يُصِيبُهُمْ
- அடையாது/அவர்களுக்கு
- ẓama-on
- ظَمَأٌ
- ஒரு தாகம்
- walā naṣabun
- وَلَا نَصَبٌ
- ஒரு களைப்பு
- walā makhmaṣatun
- وَلَا مَخْمَصَةٌ
- ஒரு பசி
- fī sabīli
- فِى سَبِيلِ
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- walā yaṭaūna
- وَلَا يَطَـُٔونَ
- இன்னும் மிதிக்கமாட்டார்கள்
- mawṭi-an
- مَوْطِئًا
- ஓர் இடம்
- yaghīẓu
- يَغِيظُ
- கோபமூட்டும்
- l-kufāra
- ٱلْكُفَّارَ
- நிராகரிப்பாளர்களை
- walā yanālūna
- وَلَا يَنَالُونَ
- இன்னும் அடையமாட்டார்கள்
- min
- مِنْ
- இருந்து
- ʿaduwwin
- عَدُوٍّ
- ஓர் எதிரி
- naylan
- نَّيْلًا
- ஒரு துன்பத்தை
- illā
- إِلَّا
- தவிர
- kutiba
- كُتِبَ
- எழுதப்பட்டது
- lahum
- لَهُم
- அவர்களுக்கு
- bihi
- بِهِۦ
- இவற்றுக்குப் பதிலாக
- ʿamalun
- عَمَلٌ
- செயல்
- ṣāliḥun
- صَٰلِحٌۚ
- நன்மையானது
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- lā yuḍīʿu
- لَا يُضِيعُ
- வீணாக்க மாட்டான்
- ajra
- أَجْرَ
- கூலியை
- l-muḥ'sinīna
- ٱلْمُحْسِنِينَ
- நல்லறம் புரிவோரின்
மதீனாவாசிகளாயினும் சரி அல்லது அவர்களைச் சூழ்ந்து வசிக்கும் கிராமத்து அரபிகளாயினும் சரி, அவர்கள் அல்லாஹ்வுடைய தூதரை விட்டுப் (பிரிந்து) பின் தங்குவதும்; (அல்லாஹ்வுடைய) தூதரின் உயிரைவிட தங்களின் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுமானதல்ல. ஏனென்றால், அல்லாஹ் வுடைய பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், கஷ்டம், பசி (ஆகியவைகளும்) நிராகரிப்பவர்களைக் கோபமூட்டும்படியான இடத்தில் கால் வைத்து, அதனால் எதிரியிடமிருந்து யாதொரு துன்பத்தையடைதல் ஆகிய இவையனைத்தும் அவர்களுடைய நன்மைகளாகவே பதிவு செய்யப்படுகின்றன. நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) நன்மை செய்பவர்களின் (அழகிய பண்பாளர்களின்) கூலியை வீணாக்கி விடுவதில்லை. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௨௦)Tafseer