Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௨௩

Qur'an Surah Al-Fajr Verse 23

ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجِايْۤءَ يَوْمَىِٕذٍۢ بِجَهَنَّمَۙ يَوْمَىِٕذٍ يَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَاَنّٰى لَهُ الذِّكْرٰىۗ (الفجر : ٨٩)

wajīa
وَجِا۟ىٓءَ
And is brought
இன்னும் வரப்படும்
yawma-idhin
يَوْمَئِذٍۭ
that Day
அந்நாளில்
bijahannama
بِجَهَنَّمَۚ
Hell
நரகத்தைக்கொண்டு
yawma-idhin
يَوْمَئِذٍ
That Day
அந்நாளில்
yatadhakkaru
يَتَذَكَّرُ
will remember
நல்லறிவு பெறுவான்
l-insānu wa-annā
ٱلْإِنسَٰنُ وَأَنَّىٰ
man but how
மனிதன்/இன்னும் எப்படி
lahu
لَهُ
(will be) for him
அவனுக்கு
l-dhik'rā
ٱلذِّكْرَىٰ
the remembrance?
நல்லறிவு

Transliteration:

Wa jeee'a yawma'izim bi jahannnam; Yawma 'iziny yatazakkarul insaanu wa annaa lahuz zikraa (QS. al-Fajr:23)

English Sahih International:

And brought [within view], that Day, is Hell - that Day, man will remember, but how [i.e., what good] to him will be the remembrance? (QS. Al-Fajr, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

அந்நாளில் (பாவிகளுக்காக) நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் மனிதனுக்கு நல்லறிவு உதயமாகும். எனினும், அச்சமயம் (உதயமாகும்) அறிவால் அவனுக்கு என்ன பயன்? (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௨௩)

Jan Trust Foundation

அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும், அந்நாளில் மனிதன் நல்லறிவு பெறுவான், (அப்போது) நல்லறிவு அவனுக்கு எப்படி (பலன் தரும்)?