குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௧௫
Qur'an Surah Al-Fajr Verse 15
ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَمَّا الْاِنْسَانُ اِذَا مَا ابْتَلٰىهُ رَبُّهٗ فَاَكْرَمَهٗ وَنَعَّمَهٗۙ فَيَقُوْلُ رَبِّيْٓ اَكْرَمَنِۗ (الفجر : ٨٩)
- fa-ammā
- فَأَمَّا
- And as for
- ஆக
- l-insānu
- ٱلْإِنسَٰنُ
- man
- மனிதன்
- idhā mā ib'talāhu
- إِذَا مَا ٱبْتَلَىٰهُ
- when does try him
- அவனைச் சோதித்த போது
- rabbuhu
- رَبُّهُۥ
- his Lord
- அவனுடைய இறைவன்
- fa-akramahu
- فَأَكْرَمَهُۥ
- and is generous to him
- இன்னும் அவனைக் கண்ணியப்படுத்தினான்
- wanaʿʿamahu
- وَنَعَّمَهُۥ
- and favors him
- இன்னும் அவனுக்கு அருட்கொடை புரிந்தான்
- fayaqūlu
- فَيَقُولُ
- he says
- கூறுகிறான்
- rabbī
- رَبِّىٓ
- "My Lord
- என் இறைவன்
- akramani
- أَكْرَمَنِ
- has honored me"
- என்னைக் கண்ணியப்படுத்தினான்
Transliteration:
Fa ammal insaanu izaa mab talaahu Rabbuhoo fa akramahoo wa na' 'amahoo fa yaqoolu Rabbeee akraman(QS. al-Fajr:15)
English Sahih International:
And as for man, when his Lord tries him and [thus] is generous to him and favors him, he says, "My Lord has honored me." (QS. Al-Fajr, Ayah ௧௫)
Abdul Hameed Baqavi:
ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என்னுடைய இறைவன் என்னை மகிமைப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகின்றான். (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௧௫)
Jan Trust Foundation
ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்| “என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்” என்று கூறுகிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆக மனிதன், அவனுடைய இறைவன் அவனைச் சோதித்து, அவனைக் கண்ணியப்படுத்தி அவனுக்கு அருட்கொடை புரியும்போது, "என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான்" எனக் கூறுகிறான்.