௧
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَىۙ ١
- sabbiḥi
- سَبِّحِ
- துதித்து தூய்மைப் படுத்துவீராக
- is'ma
- ٱسْمَ
- பெயரை
- rabbika
- رَبِّكَ
- உம் இறைவனின்
- l-aʿlā
- ٱلْأَعْلَى
- மிக உயர்ந்தவனாகிய
(நபியே!) மிக மேலான உங்களது இறைவனின் திருப்பெயரை நீங்கள் புகழ்ந்து துதி செய்வீராக; ([௮௭] ஸூரத்துல் அஃலா: ௧)Tafseer
௨
الَّذِيْ خَلَقَ فَسَوّٰىۖ ٢
- alladhī khalaqa
- ٱلَّذِى خَلَقَ
- அவன்தான் படைத்தான்
- fasawwā
- فَسَوَّىٰ
- இன்னும் ஒழுங்கு படுத்தினான்
அவனே (எல்லா படைப்புகளையும்) படைத்து, அவைகளை ஒழுங்குபடுத்தியவன். ([௮௭] ஸூரத்துல் அஃலா: ௨)Tafseer
௩
وَالَّذِيْ قَدَّرَ فَهَدٰىۖ ٣
- wa-alladhī qaddara
- وَٱلَّذِى قَدَّرَ
- அவன்தான் நிர்ணயம் செய்தான்
- fahadā
- فَهَدَىٰ
- இன்னும் வழிகாட்டினான்
அவனே (அவைகளுக்கு வேண்டிய சகலவற்றையும்) நிர்ணயம் செய்து, (அவைகளை அடையக்கூடிய) வழிகளையும் அவைகளுக்கு அறிவித்தான். ([௮௭] ஸூரத்துல் அஃலா: ௩)Tafseer
௪
وَالَّذِيْٓ اَخْرَجَ الْمَرْعٰىۖ ٤
- wa-alladhī akhraja
- وَٱلَّذِىٓ أَخْرَجَ
- அவன்தான் வெளியாக்கினான்
- l-marʿā
- ٱلْمَرْعَىٰ
- பசுமையான புல்லை
அவனே (கால்நடைகளுக்கு) மேய்ச்சல் பொருள்களையும் வெளிப்படுத்துகின்றான். ([௮௭] ஸூரத்துல் அஃலா: ௪)Tafseer
௫
فَجَعَلَهٗ غُثَاۤءً اَحْوٰىۖ ٥
- fajaʿalahu
- فَجَعَلَهُۥ
- இன்னும் அதை ஆக்கினான்
- ghuthāan
- غُثَآءً
- சருகாக
- aḥwā
- أَحْوَىٰ
- கருத்த (காய்ந்த)
பின்னர் அவைகளை உலர்ந்த சருகுகளாக்குகின்றான். ([௮௭] ஸூரத்துல் அஃலா: ௫)Tafseer
௬
سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰىٓ ۖ ٦
- sanuq'ri-uka
- سَنُقْرِئُكَ
- உமக்குக் கற்பிப்போம்
- falā tansā
- فَلَا تَنسَىٰٓ
- ஆகவே நீர் மறக்க மாட்டீர்
(நபியே! இந்தக் குர்ஆனை) நாம் உங்களுக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலன்றி, (அதில் யாதொன்றையும்) நீங்கள் மறக்கமாட்டீர்கள். ([௮௭] ஸூரத்துல் அஃலா: ௬)Tafseer
௭
اِلَّا مَا شَاۤءَ اللّٰهُ ۗاِنَّهٗ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفٰىۗ ٧
- illā
- إِلَّا
- தவிர
- mā shāa
- مَا شَآءَ
- நாடியதை
- l-lahu
- ٱللَّهُۚ
- அல்லாஹ்
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- yaʿlamu
- يَعْلَمُ
- அறிவான்
- l-jahra
- ٱلْجَهْرَ
- வெளிப்படையானதை
- wamā yakhfā
- وَمَا يَخْفَىٰ
- இன்னும் மறைந்திருப்பதை
நிச்சயமாக அவன் மறைந்திருப்பவைகளையும் வெளிப்படை யானதையும் நன்கறிகின்றான். ([௮௭] ஸூரத்துல் அஃலா: ௭)Tafseer
௮
وَنُيَسِّرُكَ لِلْيُسْرٰىۖ ٨
- wanuyassiruka
- وَنُيَسِّرُكَ
- உமக்கு இலகுவாக்குவோம்
- lil'yus'rā
- لِلْيُسْرَىٰ
- சொர்க்கப் பாதையை
நம்முடைய பாதையை நாம் உங்களுக்கு எளிதாக்கித் தருவோம். ([௮௭] ஸூரத்துல் அஃலா: ௮)Tafseer
௯
فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰىۗ ٩
- fadhakkir
- فَذَكِّرْ
- ஆகவே, அறிவுரை கூறுவீராக
- in nafaʿati
- إِن نَّفَعَتِ
- பலனளித்தால்
- l-dhik'rā
- ٱلذِّكْرَىٰ
- அறிவுரை
ஆகவே, நல்லுபதேசம் (மக்களுக்குப்) பயனளிக்கும் வரையில் நீங்கள் உபதேசித்துக் கொண்டே வாருங்கள். ([௮௭] ஸூரத்துல் அஃலா: ௯)Tafseer
௧௦
سَيَذَّكَّرُ مَنْ يَّخْشٰىۙ ١٠
- sayadhakkaru
- سَيَذَّكَّرُ
- அறிவுரை பெறுவார்
- man
- مَن
- எவர்
- yakhshā
- يَخْشَىٰ
- பயப்படுகிறார்
நிச்சயமாக எவர் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகின்றாரோ அவன், (இதனைக் கொண்டு) நல்லறிவை அடைவான். ([௮௭] ஸூரத்துல் அஃலா: ௧௦)Tafseer