௧௧
وَالسَّمَاۤءِ ذَاتِ الرَّجْعِۙ ١١
- wal-samāi
- وَٱلسَّمَآءِ
- வானத்தின் மீது சத்தியமாக
- dhāti l-rajʿi
- ذَاتِ ٱلرَّجْعِ
- மழைபொழியும்
மழை பொழியும் வானத்தின் மீதும், ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௧௧)Tafseer
௧௨
وَالْاَرْضِ ذَاتِ الصَّدْعِۙ ١٢
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- பூமியின் மீது சத்தியமாக
- dhāti l-ṣadʿi
- ذَاتِ ٱلصَّدْعِ
- தாவரங்களை முளைப்பிக்கும்
(புற்பூண்டுகள் முளைக்க) வெடிக்கும் பூமியின் மீதும் சத்தியமாக! ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௧௨)Tafseer
௧௩
اِنَّهٗ لَقَوْلٌ فَصْلٌۙ ١٣
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக இது
- laqawlun
- لَقَوْلٌ
- கூற்றுதான்
- faṣlun
- فَصْلٌ
- பிரித்தறிவிக்கக்கூடிய
மெய்யாகவே இது (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கக் கூடிய சொல்லாகும். ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௧௩)Tafseer
௧௪
وَّمَا هُوَ بِالْهَزْلِۗ ١٤
- wamā huwa
- وَمَا هُوَ
- இன்னும் இது இல்லை
- bil-hazli
- بِٱلْهَزْلِ
- விளையாட்டாக
இது வீண் பரிகாசம(ôன வார்த்தைய)ல்ல. ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௧௪)Tafseer
௧௫
اِنَّهُمْ يَكِيْدُوْنَ كَيْدًاۙ ١٥
- innahum
- إِنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- yakīdūna
- يَكِيدُونَ
- சூழ்ச்சி செய்கிறார்கள்
- kaydan
- كَيْدًا
- சூழ்ச்சிதான்
(நபியே!) நிச்சயமாக அவர்கள் (உங்களுக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்கின்றார்கள். ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௧௫)Tafseer
௧௬
وَّاَكِيْدُ كَيْدًاۖ ١٦
- wa-akīdu
- وَأَكِيدُ
- இன்னும் சூழ்ச்சி செய்கிறேன்
- kaydan
- كَيْدًا
- சூழ்ச்சிதான்
நானும் (அவர்களுக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்வேன். ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௧௬)Tafseer
௧௭
فَمَهِّلِ الْكٰفِرِيْنَ اَمْهِلْهُمْ رُوَيْدًا ࣖ ١٧
- famahhili
- فَمَهِّلِ
- ஆகவே அவகாசமளிப்பீராக
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்களுக்கு
- amhil'hum
- أَمْهِلْهُمْ
- அவர்களுக்கு அவகாசம் அளிப்பீராக
- ruwaydan
- رُوَيْدًۢا
- கொஞ்சம்
ஆகவே, இந்நிராகரிப்பவர்களுக்கு (அது வரையில்) நீங்கள் அவகாசமளியுங்கள். (அதிகமல்ல;) ஒரு சொற்ப அவகாசம் அவர்களுக்கு அளியுங்கள். ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௧௭)Tafseer